தேர்தல்னா இப்படித்தான் நடக்கணும். தேர்தல் கமிஷன்ன அதோட பவர் இத்தனை இருக்கு என்று மக்களுக்கு காட்டிய தேர்தல் -கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தல் என்று சொல்லலாம்.
சுவர் விளம்பரங்கள் இல்ல, சுற்றி சுற்றி வரும் பிரச்சார வாகனங்கள் இல்ல, சுய தம்பட்டம் அடிக்க வழியுமில்ல. மிக நீண்ட இடைவேளைக்கு பின்னர் நாம் சந்தித்த வித்யாசமான தேர்தல். கடந்த தேர்தல்களில் கூட, அரசு கட்டிட சுவர்களில் விளம்பரம் எழுத கூடாது என்றும், தனியார் சுவர்களில் அதன் உரிமையாளர்கள் அனுமதியோடு விளம்பரம் எழுதலாமென்றும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை நகர் பகுதிகளில், அரசு சுவராக இருந்தாலும் சரி, தனியார் சுவராக இருந்தாலும் சரி, விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. விளைவு, தேர்தல் திருவிழா, ஓசை இன்றி ஒழுங்காய் நடந்தது.
உள்ளாட்சியில் பணிபுரியும் பணியாளர்களை கொண்டுதான் ஒவ்வொரு முறையும் சுவர் விளம்பரங்களை பட்டியலிட்டு, புகைப்படம் எடுத்து, அவற்றை அழித்து விட்டும் அதற்க்கு ஏற்படும் செலவை, தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்படும் நாள் வரை, அந்த கட்சியிடமிருந்தும், வேட்பாளர் அறிவித்த பின்னர், அந்த வேட்பாளரிடமிருந்தும் வசூலிப்பது வாடிக்கை. இந்த முறை என்ன நடந்தது என்றால், தேர்தல் அறிவிக்க பட்ட முதல் ஒரு வாரம் மட்டுமே, சுவர் விளம்பரங்கள் அழித்தல், சுவரொட்டிகள் அகற்றுதல் போன்ற வேலைகள் இருந்தன. அதன் பின்னர் எவரும் சுவர் விளம்பரமும் எழுதவில்லை, சுவரொட்டிகளும் ஒட்டவில்லை
அடுத்து ஓட்டிற்கு வெகுமதி. கடந்த தேர்தலில் மிக வெளிப்படையாக நடைபெற்ற இந்த அணுகுமுறை, இந்த தேர்தலில் பலரை பாடாய் படுத்தி விட்டது. காவல்துறை இரவு பகல் பாராது, எங்கெங்கு காணினும், ரெயிடை முடுக்கி விட்டனர். தேர்தல் கமிசன் பல பறக்கும் படைகளை இறக்கி விட்டனர். வெகுமதிகள், விலைபோகும் மக்களை சென்றடைய சிரமப்பட்டன. இதன் மற்றோர் விளைவு, குற்றங்கள் குறைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நானும் அத்தகைய ஒரு தேடுதல் வேட்டையில் கலந்து கொண்டு, வருமான வரி ரெய்டு போல, அடுக்களை முதல் அனைத்து அறைகளிலும், வீட்டிலிருந்த பீரோவில் ஒவ்வொரு தட்டையும் என அங்குலம் அங்குலமாக அலசிய அனுபவம் ஒன்றும் கிடைக்கபெற்றேன். அதற்க்கு, எங்கள் தேர்தல் அலுவலர் எடுத்து கொண்ட சிரமங்கள் சொல்லிமாளாது. நேர்மையான அந்த அதிகாரி, நம்பிக்கையான பத்து அலுவலர்களை மட்டும் வர சொல்லி, அவர் கைப்பட ஒரு வெள்ளை தாளில் எந்த விலாசத்தில் சென்று சோதனை மேற்கொள்ள வேண்டுமென, அந்த பறக்கும் படையின் லீடரிடம் மட்டும் கொடுத்து, காவல் துறை துணையோடு அனுப்பி வைத்தார். சோதனை நடத்தபோகும் வீடு சென்றடையும் வரை, டீமில் இருந்த மற்றவர்களுக்கு(காவல் துறை உட்பட) எங்கு செல்கிறோம், எதற்கு செல்கிறோம் என்று தெரியாது. ஒரே நேரத்தில், அன்று பத்து வீடுகளில் சோதனை. பலரின் தூக்கத்தை கெடுத்து விட்டது என்பது மட்டும் நிஜம்.
கடந்த தேர்தல்களை விட, இந்த தேர்தலில் வாக்களித்த சதவிகிதம் அதிகம். எப்படி இது சாத்தியமானது? சற்றே சிந்தித்தால், மக்கள் மனங்களை வென்ற ஜனநாயகம்தான் காரணம் என்று நமக்கு புரியும். தேர்தல் கமிசன், இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் பயமின்றி தமது வாக்கை அளிக்க வேண்டுமென்றும், அதற்க்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுமென்றும் மீண்டும் மீண்டும் செய்திகள் பொது மக்களுக்கு சென்றடைய செய்தது. அதனை மீடியாக்களும் பரவலாக்கின. ஆண் வாக்காளர்களை விட, பெண்கள் ஓட்டளித்த சதவிகிதம் பல இடங்களில் அதிகம்.
அடுத்து வாக்காளர்களுக்கு அளிக்கப்பட வடிகால் - 49-O.
திருவள்ளூர் - 1,347
சென்னை - 3,407
காஞ்சிபுரம் - 1,391
வேலூர் - 464
கிருஷ்ணகிரி - 381
தர்மபுரி - 252
திருவண்ணாமலை - 209
விழுப்புரம் - 280
சேலம் 940
நாமக்கல் 530
ஈரோடு 1,133
திருப்பூர் 1,796
நீலகிரி 1,306
கோவை 3,061
திண்டுக்கல் 554
கரூர் 335
திருச்சி 1,046
பெரம்பலூர் 203
அரியலூர் 106
கடலூர் 430
நாகப்பட்டினம் 377
திருவாரூர் 181
தஞ்சை 543
புதுக்கோட்டை 331
சிவகங்கை 233
மதுரை 783
தேனி 336
விருதுநகர் 269
சென்னை - 3,407
காஞ்சிபுரம் - 1,391
வேலூர் - 464
கிருஷ்ணகிரி - 381
தர்மபுரி - 252
திருவண்ணாமலை - 209
விழுப்புரம் - 280
சேலம் 940
நாமக்கல் 530
ஈரோடு 1,133
திருப்பூர் 1,796
நீலகிரி 1,306
கோவை 3,061
திண்டுக்கல் 554
கரூர் 335
திருச்சி 1,046
பெரம்பலூர் 203
அரியலூர் 106
கடலூர் 430
நாகப்பட்டினம் 377
திருவாரூர் 181
தஞ்சை 543
புதுக்கோட்டை 331
சிவகங்கை 233
மதுரை 783
தேனி 336
விருதுநகர் 269
ராமநாதபுரம் 209
தூத்துக்குடி 879
திருநெல்வேலி 1,109
கன்னியாகுமரி 170
தூத்துக்குடி 879
திருநெல்வேலி 1,109
கன்னியாகுமரி 170
இதில் பாளை சட்டமன்ற தொகுதியில் மட்டும், 152 பேர் 49- O தேர்ந்தெடுத்துள்ளனர். இது மக்களின் மனங்களை படம் பிடிக்கும் கண்ணாடி எனலாம். அதிலும், பெண்கள் பல பேர் இந்த வசதியை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த வசதிக்கென, ஓட்டு பதிவிடும் இயந்திரத்திலேயே ஒரு பட்டனை அளித்தால், பலர் சத்தமின்றி இதில் வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை.
இந்தமுறை தேர்தலில் பணியாற்றும் அனைத்து அலுவலகளுக்கும், ஆணையமே சிம் கார்டு வழங்கியது. அதன் மூலம், தேர்தல் குறித்த தகவல்கள் ஆணையத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் விரைவாக சென்றடைந்தன. அதேபோல், பிரச்சனைக்குறிய வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவை ஆன்லைனில் பதிவு செய்தது, காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற துணை ராணுவப்படையை ஈடுபடுத்தியது போன்றவையே கள்ள ஓட்டுக்களை பெருமளவில் தடுத்தது என்றால், கள்ள ஓடடைத் தடுத்ததுடன், கவலையின்றி வாக்குச்சாவடிக்கு பொது மக்கள் வந்து வாக்களிக்கச் செய்ததில், புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பின் பங்கு மறுக்க முடியாத ஒன்றாகும்.
வாக்குப் பதிவு நாளுக்கு முன்னரே, மண்டல அலுவலர்கள், இருமுறை வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டு, அதிலுள்ள நிறை குறைகளையும், அந்தப்பகுதியில் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் அலசி ஆரய்ந்திட இம்முறை தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை தோ;தல் நாளில் பிரச்சனைகளின்றி வாக்குப்பதிவு நடைபெற பெரிதும் துணை புரிந்தது.
வாக்குப் பதிவு நாளன்று எனக்கோர் இனிமையான அனுபவம். பிற்பகலில் கிடைத்த ஒரு கால அவகாசத்தில், என் வாக்கிருந்த வாக்குச்சாவடிக்குச் சென்று, எனது வாக்காளா; அடையாள அட்டையினை முதலாவது வாக்கு பதிவு அலுவலரிடம் காண்பித்து ஓட்டுப்போட வேண்டுமென்றேன்.அங்கிருந்த ஒரு பெண் அலுவலர், உங்கள் பூத் சிலிப் எங்கேயென்றார்? நான் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே உள்ளது என்று சொல்லி எனது பாகம் எண் மற்றும் வரிசை எண் கூறினேன். அந்த வரிசை எண்ணில் என் புகைப்படம் இருந்தது. கேட்டாரே ஒரு கேள்வி! இந்த புகைப்படத்திலிருப்பதும், அடையாள அட்டையிலிருப்பதும் நீங்கள்தான் என்று எப்படி நான் நம்புவது? எனவே, ஓட்டளிக்க வேண்டுமானால், பூத் சிலிப்புடன் வாருங்கள் என்றார். நான் அணிந்து சென்ற மண்டல அலுவலர் அடையாள அட்டையைக் காட்டி, அம்மா, உங்களைப்போல் என் மண்டலத்தில் பத்தொன்பது வாக்குச்சாவடிகள் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் நான்தான் விதிமுறைகளை எடுத்து சொல்லியிருக்கிறேன். இப்படியோர் விதியே கிடையாது என்று சொன்னாலும், ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. பின்னர், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தலையிட்டு எடுத்துச்சொல்லியும், பல முறை யோசித்தே என்னை வாக்களித்த அனுமதித்தார். இப்படி மெத்த படித்த பலர் பணிக்கு வந்திருந்ததால், மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் என் மண்டலத்திலுள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும், இதர பொருட்களையும் வாக்கு எண்ணும் மையத்தில் என்னால் ஒப்படைக்க முடிந்தது.
தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 62,000. ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னரே, அந்த வழக்கின் விசாரணையை முடித்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரவும் தர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது, பலரின் வயிற்றில் புளியைக் கரைக்கும் சமாச்சாரம்.
இந்த தேர்தலுக்கு செய்யப்பட்ட விரிவான ஏற்பாடுகள், தேர்தல் செம்மையாக நடைபெற வழி வகுத்தன எனலாம். ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது.

37 comments:
முதல் வாக்கு
>> இந்த தேர்தலுக்கு செய்யப்பட்ட விரிவான ஏற்பாடுகள், தேர்தல் செம்மையாக நடைபெற வழி வகுத்தன எனலாம். ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை?
சி.பி.செந்தில்குமார் said...
முதல் வாக்கு//
மோதிர கையால் குட்டு. நன்றி சார்.
சி.பி.செந்தில்குமார் said...
இந்த தேர்தலுக்கு செய்யப்பட்ட விரிவான ஏற்பாடுகள், தேர்தல் செம்மையாக நடைபெற வழி வகுத்தன எனலாம். ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை?//
ஆம். ந்ம் இந்தியா உலகில் ஒளிரும் காலம் விரைவில் உருவாகும்.
தேர்தல் நடந்த விதம் பற்றிய விரிவான விளக்கங்கள் அருமை...
நீங்கள் வாக்களிக்க சென்ற போது நிகழ்ந்த சம்பவம் உங்களின் அந்த நேர அவஸ்தை என்றாலும் நான் ரசித்தேன்... :))
//இந்த வசதிக்கென, ஓட்டு பதிவிடும் இயந்திரத்திலேயே ஒரு பட்டனை அளித்தால், பலர் சத்தமின்றி இதில் வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை. //
நல்ல யோசனை. ஆனால் சாத்தியமா என தெரியவில்லை.
தேர்தல் கமிஷனருக்கு ஒரு சல்யூட் !
அதிகாரிகளின் மெனகிடல் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அண்ணா உங்களின் இந்த பகிர்விற்கு நன்றிகள் பல.
ரொம்ப லேட்டான சப்ஜக்ட் ! ஆனா சிறப்பான கருத்துக்கள். :)))
தேர்தல் கமிஷனுக்கு பாராட்டி மெயில் அனுப்பி விடீர்களா?முதலில் அதனை செய்யவேண்டும். புது டெல்லி மற்றும் தமிழ் நாடு கமிஷனர் களுக்கு அனுப்பிவிட்டேன்.
ரொம்ப லேட்டான சப்ஜக்ட் ! ஆனா சிறப்பான கருத்துக்கள். :)))
தேர்தல் கமிஷனுக்கு பாராட்டி மெயில் அனுப்பி விடீர்களா?முதலில் அதனை செய்யவேண்டும். புது டெல்லி மற்றும் தமிழ் நாடு கமிஷனர் களுக்கு அனுப்பிவிட்டேன்.
Kousalya said...
//இந்த வசதிக்கென, ஓட்டு பதிவிடும் இயந்திரத்திலேயே ஒரு பட்டனை அளித்தால், பலர் சத்தமின்றி இதில் வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை.
1. நல்ல யோசனை. ஆனால் சாத்தியமா என தெரியவில்லை.
2. அண்ணா உங்களின் இந்த பகிர்விற்கு நன்றிகள் பல.//
1.சாத்தியம்தான் சகோதரி.
2.வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
கக்கு - மாணிக்கம் said...
ரொம்ப லேட்டான சப்ஜக்ட் ! ஆனா சிறப்பான கருத்துக்கள். :)))
தேர்தல் கமிஷனுக்கு பாராட்டி மெயில் அனுப்பி விடீர்களா?முதலில் அதனை செய்யவேண்டும். புது டெல்லி மற்றும் தமிழ் நாடு கமிஷனர் களுக்கு அனுப்பிவிட்டேன்.//
நீங்க ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி.
அனைவரும் தேர்தல் கமிஷனுக்கு பாராட்டி மெயில் அனுப்ப வேண்டுமென்பதே அவா.
உணமைதான்
தேர்தல் ஆணையம் போடும் சட்டங்கள் சில நேரம் வேடிக்கையாக இருந்தாலும்..
உண்மையிலே அவைகள் பாராட்ட கூடியது..
இன்னும் எதிர் காலத்தில் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு மக்கள் நம்பிக்கையும் ஆதரவும் தருவார்கள்..
இந்தத் தேர்தலில் கதாநாயகன் தேர்தல் ஆணையம்தான்...
ஏற்கெனவே மெயில் அனுப்பியாச்சு...
நன்றி..
//இந்த வசதிக்கென, ஓட்டு பதிவிடும் இயந்திரத்திலேயே ஒரு பட்டனை அளித்தால், பலர் சத்தமின்றி இதில் வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை//.
அவசியம் செய்ய வேண்டும்!
//ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது.//
காத்திருப்போம்!
உங்க நம்பிக்கைக்கு ஒரு நன்றி!
சுவர் விளம்பரங்கள் இல்ல, சுற்றி சுற்றி வரும் பிரச்சார வாகனங்கள் இல்ல, சுய தம்பட்டம் அடிக்க வழியுமில்ல.
...... அவங்க அவங்க சொந்த டிவியில மட்டும் சுய தம்பட்டம் - ஜால்ரா எல்லாம் கேட்டுச்சு....
மனங்களை வென்ற ஜனநாயகம்.
.... பணங்களை வென்ற ஜனநாயகம்???!!!
வந்தேன் வாக்களித்து சென்றேன்
கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_18.html
//இந்த வசதிக்கென, ஓட்டு பதிவிடும் இயந்திரத்திலேயே ஒரு பட்டனை அளித்தால், பலர் சத்தமின்றி இதில் வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை//
மத்திய அரசு அவ்வளவு எளிதாக மனது வைக்குமா என்று தெரியவில்லை. மக்கள் குரல் ஓங்கி ஒலித்தால் மட்டுமே சாத்தியம்.
செய்தி:
தேர்தல் ஆணைய நடவடிக்கைமூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.5 கோடி மட்டும் உரிய ஆவணங்களை காட்டி அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். மொத்தம் பறிமுதல் ஆன ரூ.54.17 கோடியில் ரூ.49.17 கோடியை வாங்கிச் செல்வதற்காக இதுவரை யாரும் வரவில்லை.
என் கருத்து:
தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது வருத்தின் 365 நாட்களும் இதே நடவடிக்கை இருந்தால் நாடு முன்னேறும், நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவர்.
பிரவீன்குமார் ஹி இஸ் த ஹீரோ....
தேர்தல் கமிஷன் அணுகுமுறை சூப்பர்...
இப்படி மெத்த படித்த பலர் பணிக்கு வந்திருந்ததால்
please adjust,they all are teachers,they knows teaching to students only...
வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்தத் தேர்தலில் கதாநாயகன் தேர்தல் ஆணையம்தான...//
சந்தேகமின்றி!
சென்னை பித்தன் said...
//இந்த வசதிக்கென, ஓட்டு பதிவிடும் இயந்திரத்திலேயே ஒரு பட்டனை அளித்தால், பலர் சத்தமின்றி இதில் வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை//.
1.அவசியம் செய்ய வேண்டும்!
//ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது.//
2. காத்திருப்போம்!//
1. செய்தால் நலம்.
2. காத்திருத்தல் நாம் பழகிய ஒன்றுதானே!
விக்கி உலகம் said...
உங்க நம்பிக்கைக்கு ஒரு நன்றி!//
உங்க வருகைக்கு நான் நன்றி கூறுகிறேன்.
Chitra said...
சுவர் விளம்பரங்கள் இல்ல, சுற்றி சுற்றி வரும் பிரச்சார வாகனங்கள் இல்ல, சுய தம்பட்டம் அடிக்க வழியுமில்ல.
...... அவங்க அவங்க சொந்த டிவியில மட்டும் சுய தம்பட்டம் - ஜால்ரா எல்லாம் கேட்டுச்சு....//
அது அவர்கள் ராஜ்யம்.
கவிதை வீதி # சௌந்தர் said...
உணமைதான்
தேர்தல் ஆணையம் போடும் சட்டங்கள் சில நேரம் வேடிக்கையாக இருந்தாலும்..
உண்மையிலே அவைகள் பாராட்ட கூடியது..
இன்னும் எதிர் காலத்தில் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு மக்கள் நம்பிக்கையும் ஆதரவும் தருவார்கள்..//
நிச்சயமாக.
Chitra said...
மனங்களை வென்ற ஜனநாயகம்.
.... பணங்களை வென்ற ஜனநாயகம்???!!!//
சகோ, நீங்க என் மனசாட்சியா?
Speed Master said...
வந்தேன் வாக்களித்து சென்றேன்
கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_18.html//
நானும் வருகிறேன்.
சிவகுமார் ! said...
//இந்த வசதிக்கென, ஓட்டு பதிவிடும் இயந்திரத்திலேயே ஒரு பட்டனை அளித்தால், பலர் சத்தமின்றி இதில் வாக்களிப்பர் என்பதில் ஐயமில்லை//
மத்திய அரசு அவ்வளவு எளிதாக மனது வைக்குமா என்று தெரியவில்லை. மக்கள் குரல் ஓங்கி ஒலித்தால் மட்டுமே சாத்தியம்.//
ஒலிக்கட்டும்.
மொக்கராசா said...
செய்தி:
தேர்தல் ஆணைய நடவடிக்கைமூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.5 கோடி மட்டும் உரிய ஆவணங்களை காட்டி அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். மொத்தம் பறிமுதல் ஆன ரூ.54.17 கோடியில் ரூ.49.17 கோடியை வாங்கிச் செல்வதற்காக இதுவரை யாரும் வரவில்லை.
என் கருத்து:
தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது வருத்தின் 365 நாட்களும் இதே நடவடிக்கை இருந்தால் நாடு முன்னேறும், நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவர்.//
காலம் ஒரு நாள் மாறும்.
MANO நாஞ்சில் மனோ said...
பிரவீன்குமார் ஹி இஸ் த ஹீரோ....//
சந்தேகமென்ன!
shahul said...
இப்படி மெத்த படித்த பலர் பணிக்கு வந்திருந்ததால்
please adjust,they all are teachers,they knows teaching to students only...//
We expect more.
தேர்தல்னா இப்படித்தான் நடக்கணும். தேர்தல் கமிஷன்ன அதோட பவர் இத்தனை இருக்கு என்று மக்களுக்கு காட்டிய தேர்தல் -கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தல் என்று சொல்லலாம்.
True..
கெட்டவிடையங்களை திட்டித்தீர்க்கும் நாம் கண்டிப்பாக நல்லவிடங்களை பாராட்டவேண்டும்.
Jana said...
தேர்தல்னா இப்படித்தான் நடக்கணும். தேர்தல் கமிஷன்ன அதோட பவர் இத்தனை இருக்கு என்று மக்களுக்கு காட்டிய தேர்தல் -கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தல் என்று சொல்லலாம்.
True..
கெட்டவிடையங்களை திட்டித்தீர்க்கும் நாம் கண்டிப்பாக நல்லவிடங்களை பாராட்டவேண்டும்.//
அதுதானே மனிதம்
இந்த முறை என்ன நடந்தது என்றால், தேர்தல் அறிவிக்க பட்ட முதல் ஒரு வாரம் மட்டுமே, சுவர் விளம்பரங்கள் அழித்தல், சுவரொட்டிகள் அகற்றுதல் போன்ற வேலைகள் இருந்தன. அதன் பின்னர் எவரும் சுவர் விளம்பரமும் எழுதவில்லை, சுவரொட்டிகளும் ஒட்டவில்லை//நல்ல மாற்றம்தான்
அருமையான தேர்தல் லைவ் டெலிகாஸ்ட் பதிவு
Post a Comment