இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 20 April, 2011

பாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க!


                               கோடைக்காலம் துவங்கிவிட்டது. குஷியாக, குளிர்பான பாக்கட்கள் விற்பனையும் கொடி கட்டிப் பறக்குது. குளிர்பானங்கள் முறையாகத்தான் தயாரிக்கப்படுகின்றதா? விதிகளெல்லாம் காற்றில் பறக்குதா? விசாரணையில் இறங்கினோம். விபரீதங்கள் உணர்ந்தோம். விளைவு: திடீர் ஆய்வு.

 
 
காலை ஆறு மணிக்கே தொடங்கினோம், களப்பணியை. பாக்கட் குளிர்பான தயாரிப்பாளர் ஒருவர் மாநகரின் பல பகுதிகளில் பாக்கட்களை விநியோகிப்பது விசாரணையில்   தெரிய வந்தது. பாக்கட்டில் இருந்த விலாசத்தில் தொடங்கினோம் விசாரணையை. வீண்தான் அந்த முயற்சியென எண்ணும் விதத்தில் இருந்தது. பாக்கட்டில் கண்ட விலாசத்தில் தயாரிப்பும் இல்லை. விற்பனையும் இல்லை. சட்டென எடுத்த முடிவொன்றால், என்னிடம் பணியாற்றும் துப்புரவுப்பணி மேற்பாவையாளார் ஒருவரை கல்யாண வீட்டுக்காரர் ஆக்கினோம். 
பாக்கட்டில் கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்னீர்பள்ளத்தில் வெள்ளியன்று நடைபெற உள்ள விசேஷத்திற்கு ஆயிரம் குளிர்பான பாக்கட்கள் வேண்டும், உங்கள் விலாசம் சொன்னால், வந்து எடுத்து செல்கிறேன் என்று லேசாய் வலை விரித்தார். விழுந்தது அந்த பறவை. ஆம், விலாசம் சொல்லி வந்து வாங்கிக்கொள்ளச் சொன்னார். மொத்தக் கொள்முதல் என்றால், தள்ளுபடியும் தருகிறேன் என்றார், மொத்தத்தையும் நாங்கள் குத்தகைக்கு எடுக்கப்போகிறோம் என்று அறியாமலே!
        என் சகாக்கள் சாகுல்ஹமீது(சாதிக்கத் துடிக்கும் இளவல்), சுப்பிரமணியன்(சொல்வது குறைவு, செய்வது நிறைய) மற்றும் பயிற்சி உணவு ஆய்வாளர்கள் ராமசுப்பிரமணியன், நாகசுப்பிரமணியன், பால்ராஜ், நீதிமோகன், செந்தில், பரமசிவம் மற்றும் சித்ரா அடங்கிய குழு திடீர் ஆய்வுக்கு தயாராகினர். செய்தியாளர்களுக்கு சென்றது செய்தி. விரைந்து வந்த பத்திரிக்கைத் துறை நண்பர்களுடன் புறப்பட்டது படை. அலைபேசியில் குறிப்பிட்ட இடம் சென்றதும் தெரிந்தது, அது ஒரு வீடென்று. வீட்டின் ஒரு பகுதியில் கலர் கலர் குளிர்பான பாக்கட்கள் கடைகளுக்குப் பயணப்பட காத்திருந்தது. வீட்டினுள் பெண்கள் இருந்ததால், சித்ராவை முதலில் அனுப்பினோம். சிக்னல் கிடைத்ததும், சீறிப்பாய்ந்த படை அள்ளியே எடுத்து வந்தது அத்தனையும். ஒரு பாக்கட்டிலும், தயாரிப்பு தேதி இல்லை, விதிகளின்படி விரிவாய் இருக்க வேண்டிய விபரங்கள் இல்லை. விலையை மட்டும் விபரமாய் அச்சிட்டிருந்தனர். பொது மக்கள் முன்னிலையில் போட்டு, அவற்றில் கிருமிநாசினி தெளித்து அளித்தோம்.
Ø   தயாரிப்புத் தேதி இல்லையென்றால், அந்த உணவுப்பொருளை உபயோகிக்கும் கால அளவு தெரியாது.
Ø   பேட்ஜ் எண் இல்லையென்றால், தரத்தில் புகார் வந்தால், குறிப்பிட்ட தயாரிப்பை கடைகளிலிருந்து திரும்பப்பெற இயலாது.
Ø   குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்கள் பட்டியல் பாக்கட்டில் இல்லையென்றால், அவற்றின் தரம் தெரியாது.
Ø   தரங்கெட்ட தண்ணீரில் தயாரிக்கப்பட்டிருந்தால், குடிப்பவருக்கு வாந்தி பேதி வராமலிருக்காது.        
எனவேதான், இத்தகைய திடீர் ஆய்வுகள் தரத்திற்கு கட்டுப்பாடும், பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வரும் நாட்களில், கோடையில் கொடி கட்டிப் பறக்கும் வேறொரு உணவுப் பொருள் ஆய்வுக்கு விரிவாக களம் அமைத்துள்ளோம். மீண்டும் சந்திப்போம்.
Follow FOODNELLAI on Twitter

37 comments:

Unknown said...

உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

வரும் நாட்களில், கோடையில் கொடி கட்டிப் பறக்கும் வேறொரு உணவுப் பொருள் ஆய்வுக்கு விரிவாக களம் அமைத்துள்ளோம் --- கலக்குங்க தலைவரே..

சக்தி கல்வி மையம் said...

மிகவும் பயனுள்ள பதிவு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் இது கோடைகாலம் என்பதால் அதிகம் பேர் எப்படியாவது காசக்க வேண்டும் என்று சிலர் தண்ீரை பயன்படுத்துகீறார்கள்..

இது வன்மையான கண்டிக்க வேண்டியது...

அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்..
அவர்களுக்கு என் பாராட்டுகள்..

உணவு உலகம் said...

விக்கி உலகம் said...
உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி நண்பரே.

பொன் மாலை பொழுது said...

உங்களுக்கும் உங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். சீரிய சமூகப்பணி. நாங்கள் எல்லாம் வெறும் ப்ளாக் மட்டுமே எழுத முடியும்.ஆனால் நீங்கள் இதுபோன்ற களப்பணிகளை ஆற்றி நிச்சயம் உடன் வாழும் சமூகத்திற்கு காவலராய் இருப்பது பெருமைபடவேண்டிய விஷயம்.தொடரட்டும் . பகிர்வுக்கு நன்றி.

உணவு உலகம் said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
வரும் நாட்களில், கோடையில் கொடி கட்டிப் பறக்கும் வேறொரு உணவுப் பொருள் ஆய்வுக்கு விரிவாக களம் அமைத்துள்ளோம் --- கலக்குங்க தலைவரே..//
தங்கள் சித்தம் என் பாக்கியம்

உணவு உலகம் said...

கவிதை வீதி # சௌந்தர் said...
இன்னும் இது கோடைகாலம் என்பதால் அதிகம் பேர் எப்படியாவது காசக்க வேண்டும் என்று சிலர் தண்ீரை பயன்படுத்துகீறார்கள்..
இது வன்மையான கண்டிக்க வேண்டியது...
அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்..
அவர்களுக்கு என் பாராட்டுகள்..//
நன்றி ந்ண்பரே!

உணவு உலகம் said...

கக்கு - மாணிக்கம் said...
உங்களுக்கும் உங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். சீரிய சமூகப்பணி. நாங்கள் எல்லாம் வெறும் ப்ளாக் மட்டுமே எழுத முடியும்.ஆனால் நீங்கள் இதுபோன்ற களப்பணிகளை ஆற்றி நிச்சயம் உடன் வாழும் சமூகத்திற்கு காவலராய் இருப்பது பெருமைபடவேண்டிய விஷயம்.தொடரட்டும் . பகிர்வுக்கு நன்றி.//
தொடரும் நண்பரே!

Chitra said...

பிசினஸ் செய்ய வேண்டியதுதான். ஆனால், மக்கள் நலன் குறித்த கவலை - மற்றும் பிசினஸ் ethics - எதுவும் இல்லாமல் எப்படித்தான் செய்ய மனது வருகிறதோ? விழிப்புணர்வு பதிவு. கோடை காலத்தில், மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கும் பதிவு.

Unknown said...

தவறு செய்பவர் மேல் நடவடிக்கை சர்..
ஆனா கொஞ்சம் கோவிச்சுகாம...
சரியான முறையில் குளிர்பானம், தண்ணிர் தயாரிப்புக்கு என்ன செய்யவேண்டும், என்ன விதமான அனுமதி வாங்கனும் என்னென்ன தரம் கடைபிடிக்கபடணும்னு சொன்னிங்கனா..

நம்ம பிளாகர் யாராவதுகூட சரியான நேர்மையான சுயதொழில் முனைவோரா மாற உதவியாய் இருக்கும்.

அது என் வேலை இல்லைன்னு கூட நிங்க சொல்லலாம் தான். ஆன உங்க அளவுக்கு வேறு யாரும் சொல்ல முடியாதில்லை அதான் கேட்டேன்.

உணவு உலகம் said...

Chitra said...
பிசினஸ் செய்ய வேண்டியதுதான். ஆனால், மக்கள் நலன் குறித்த கவலை - மற்றும் பிசினஸ் ethics - எதுவும் இல்லாமல் எப்படித்தான் செய்ய மனது வருகிறதோ? விழிப்புணர்வு பதிவு. கோடை காலத்தில், மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கும் பதிவு.//
அவர்களுக்கு மனம் மற்றும் மனசாட்சி எங்கே என தேட வேண்டும். நன்றி சித்ரா.

உணவு உலகம் said...

வினோத் said...
தவறு செய்பவர் மேல் நடவடிக்கை சர்..
ஆனா கொஞ்சம் கோவிச்சுகாம...
சரியான முறையில் குளிர்பானம், தண்ணிர் தயாரிப்புக்கு என்ன செய்யவேண்டும், என்ன விதமான அனுமதி வாங்கனும் என்னென்ன தரம் கடைபிடிக்கபடணும்னு சொன்னிங்கனா..
நம்ம பிளாகர் யாராவதுகூட சரியான நேர்மையான சுயதொழில் முனைவோரா மாற உதவியாய் இருக்கும்.
அது என் வேலை இல்லைன்னு கூட நிங்க சொல்லலாம் தான். ஆன உங்க அளவுக்கு வேறு யாரும் சொல்ல முடியாதில்லை அதான் கேட்டேன்.//
நடவடிக்கைகள் மட்டுமல்ல. கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகளும் பதிவிட்டு வருகிறேன், நண்பரே! தங்கள் கருத்துக்களுக்கு செவி சாய்க்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன். எடுத்து சொல்வதும் என் வேலைதான் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடே.நல்ல விமரிசனத்திற்கு நன்றி.

Asiya Omar said...

உங்கள் இடுகைகள் பார்க்கும் பொழுது நெல்லையில் உணவு கலப்படக் கலாச்சாரம் விரைவில் குறைந்து விடும் என்றே நினைக்கிறேன்..பகிர்வுக்கு மகிழ்ச்சி.

நிரூபன் said...

சகோ, நல்லதொரு பணியினை ஆற்றியிருக்கிறீர்கள். இத்தகைய பாவனைத் திகதி இல்லாத குளிர்பானங்களை பருகுவதால் வாந்தி பேதி, கொலரா முதலிய நோய்களையும் எதிர் கொள்ள வேண்டி வரும்.

வாழ்த்துக்கள் உங்களின் சமூக உணர்விற்கும், கடமைக்கும்!

Anonymous said...

போலி தண்ணி விக்கிறவங்களுக்கு நல்லா தண்ணி காட்டி இருக்கீங்க. இன்னும் நிறைய போலிகளை அழிக்க வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ said...

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ said...

சிறப்பு அதிரடிபடை வெல்டன்...
வாழ்த்துகள் ஆபீசர்....

MANO நாஞ்சில் மனோ said...

உங்களை மாதிரி சில நல்ல ஆபீசருங்க இருப்பதால்தான், கொஞ்சமாவது மக்களின் குடல்'கள் தப்பிக்குது....தொடருங்கள் ஆபீசர்ஸ் வாழ்த்துகிறேன்....

Unknown said...

தாகத்துக்கு கூட இப்ப தண்ணீர் வெளியில் வாங்கி தண்ணீர் குடிக்க பயமாக இருக்கு... விழிப்புணர்வுள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி

மொக்கராசா said...

உங்க வேட்டையை ஆரம்பிச்சுட்டேங்களா...

உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் கீழ் கண்ட கேள்விக்கு பதில் சொல்லாலம்...
உங்கள் பணிக்கு குறுக்காக V.I.P யாரேனும் தொல்லை கொடுத்தது உண்டா... அதை எவ்வாறு சமாளிப்பீர்கள்....

Anonymous said...

இன்று பெட்டிக்கடைகளிலோ பஸ் நிலையம் டீக்கடைகளிலோ தண்ணீர் என கேட்டால் பாக்கெட் வாட்டரை நீட்டி இரண்டு ரூபாய் கொடு என்கிறார்கள்..மக்களும் இப்போதெல்லாம் தங்கள் கவுரத்தை காட்ட பாக்கெட் நீரை ஸ்டைலாக வாங்கி குடிக்கிறார்கள்..4 ரூபாய் பாக்கெட் குளிர்பானம் கொடுமை இன்னும் அதிகம்..சிறு குழந்தைகள் தினசரி மதியம் வாங்கி தர சொல்லி தொந்தரவு செய்கின்றன...பாக்கெட் குளிர்பானம் கஞ்சா பாக்கெட் பிடிப்பதை போல பறிமுதல் செய்ய வேண்டும்..அந்தளவு மோசமான கெமிக்கல்களால் தயாரிக்கப்படுகின்றன

Anonymous said...

ஒரு லட்சம் கொள்ளையர்களை பத்து பேரால் தடுக்க இயலாது...பத்து லட்சம் கடைகளின் கொள்ளைகளை 1000 கடைகளில் ரைடு நடத்து வதால் தடுக்க இயலாது..இது கணக்கு காட்டும் ரைடு என்றாலும்...சிறு துரும்பும் பல் குத்த உதவும்

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்று பாடாவதியை கூட குளிர்பானங்கள் என்ற பெயரில் விற்று விடுகிறார்கள். இதனால் வயிற்ருக்கும்,உடலுக்கும் கேடுதான்..நல்ல காரியம் செய்தீர்கள் சார்.

இளங்கோ said...

உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்.

Ram said...

அட சூப்பருல்ல.. வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வு பதிவுக்கு பாராட்டுக்கள்.

Shajahan.S. said...

வாழ்த்துக்கள் நண்பர்களே... உங்கள் பணி மிகவும் வியக்கவும் பாராட்டவும் வைக்கிறது. இதே வேகத்தோடு அமெரிக்க இறக்குமதிகளான சில மினரல்வாட்டர் கம்பெனிகளுக்கும் அதிரடி விசிட் சென்று அவர்களது நம்பகத்தன்மைகளையும் நிரூபிக்க இயலுமா? மிகச்சிறந்த பேக்கிங் என்பதால் மட்டும் சிறந்தது என்று சான்றிதழ் வழங்கவேண்டியது வருமா?

உணவு உலகம் said...

மொக்கராசா said...
உங்க வேட்டையை ஆரம்பிச்சுட்டேங்களா...
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் கீழ் கண்ட கேள்விக்கு பதில் சொல்லாலம்...
உங்கள் பணிக்கு குறுக்காக V.I.P யாரேனும் தொல்லை கொடுத்தது உண்டா... அதை எவ்வாறு சமாளிப்பீர்கள்....//
மெயில் முகவரிக்கு வரும் பதில்.

உணவு உலகம் said...

Shajahan.S. said...
வாழ்த்துக்கள் நண்பர்களே... உங்கள் பணி மிகவும் வியக்கவும் பாராட்டவும் வைக்கிறது. இதே வேகத்தோடு அமெரிக்க இறக்குமதிகளான சில மினரல்வாட்டர் கம்பெனிகளுக்கும் அதிரடி விசிட் சென்று அவர்களது நம்பகத்தன்மைகளையும் நிரூபிக்க இயலுமா? மிகச்சிறந்த பேக்கிங் என்பதால் மட்டும் சிறந்தது என்று சான்றிதழ் வழங்கவேண்டியது வருமா?//
பாட்டில் மற்றும் பாக்கட்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் தரத்திற்கு, அது உள்நாடென்றாலும், வெளி நாடென்றாலும், ஐம்பது வகை டெஸ்ட் பாசாக வேண்டும்.அதன் பின்னர்தான் ISI தர முத்திரை கிடைக்கும்.

உணவு உலகம் said...

நன்றி: ஆசியா உமர்,நிருபன்,சிவகுமார்,மனோ,சினேகிதி,மொக்கராசா,சதீஷ்,ரஹீம்,தம்பி கூர்மதியான், இளங்கோ,ராஜேஸ்வரி,ஷாஜஹான்.

உணவு உலகம் said...

மொக்கராசா said...
உங்க வேட்டையை ஆரம்பிச்சுட்டேங்களா...
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் கீழ் கண்ட கேள்விக்கு பதில் சொல்லாலம்...
உங்கள் பணிக்கு குறுக்காக V.I.P யாரேனும் தொல்லை கொடுத்தது உண்டா... அதை எவ்வாறு சமாளிப்பீர்கள்....//
மெயில் முகவரி வேண்டும்.

சென்னை பித்தன் said...

நீங்கள் ஆரம்பித்த நல்ல செயல் சென்னையிலும் தொடர்ந்திருக்கிறது.
வாழ்த்துகள்.தொடரட்டும் உங்கள் நற்பணி!

உணவு உலகம் said...

நல்ல விஷயம்தானே! நடக்கட்டும் நடக்கட்டும்.

டக்கால்டி said...

உங்கள் சேவை மக்களுக்கு தேவை...வாழ்த்துகள்...

உணவு உலகம் said...

டக்கால்டி said...
உங்கள் சேவை மக்களுக்கு தேவை...வாழ்த்துகள்...//
வாங்க வாங்க! வாழ்துக்கு நன்றி

Murugeswari Rajavel said...

விழிப்புணர்வு பதிவு.