இது ஒரு மீள் பதிவு. ஓராண்டிற்கு முன், எனது வலைப்பூவில் வந்தது. மீண்டும் உங்கள் பார்வைக்காக:
இனிய மாலைப்பொழுது. இணைந்து குடும்பத்துடன் செல்லும்இடம்-துரித உணவகம். சூடாய் சூப் வகைகள். அறுசுவை உணவு. அத்தனையும்அருமை.
எப்படிக் கிடைக்கிறது இந்த சுவை. பார்த்துப்பார்த்து பாட்டிசமைத்ததில் இல்லா சுவை இதில் எப்படி - சிந்தித்ததுண்டா? மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது.
மோனோசோடியம் குளுடாமேட் ஒரு சுவை கூட்டி. 1909ல்தொடங்கியது இதன் அறிமுகம். அறிமுகமான நாள் முதல் அதைவெல்லஆளே இல்லை - மார்கட்டில்.அறிமுகம் ஜப்பானில். அகில உலக சாப்பாட்டுப்பிரியர்களும் அடிமை இதற்கு. முதலில் கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது குளுடாமிக் அமிலம். அதைத்தான் முதலில் ஜப்பானில் சூப்களில் சுவை கூட்ட பயன்படுத்தினார்கள்.
அமொரிக்காவில், "பொதுவாக பாதுகாப்பான பொருள் பட்டியலில்" உப்பு, மிளகு, வினிகர் ஆகியவற்றுடன் மோனோசோடியம் குளுடாமேட்டும் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனிலும் மோனோசோடியம் குளுடாமேட்பாதுகாப்பான உணவுப்பட்டியலில் வருகிறது.
1968ல்தான் மோனோசோடியம் குளுடாமேட்டின் முகத்திரை கிழிந்தது. சீனஉணவகம் ஒன்றில் உணவருந்திய சிலர் வயிற்றில் எரிச்சல், உடலில்மதமதப்பு, உடலின் மேல் பகுதியில் இறுக்கம் ஆகிய உபாதைகளைஉணர்ந்தனர். “சீன உணவக உபாதை” என அதற்கு நாமகரணம் சூட்டப்பட்டது. சீன உணவக உபாதைக்கு மோனோசோடியம் குளுடாமேட்டே காரணம் எனமுடிவு கட்டப்பட்டது. ஆயினும் அதை நிரூபிக்க முடியவில்லை.
ரசல் பிளேலாக் எழுதிய புத்தகமொன்றில், மோனோசோடியம் குளுடாமேட்நியூரான்களை(மூளைத்திசுக்களை)த் தூண்டி சுவையை அதிக அளவில்உணரச்செய்கிறது. ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட்மூளைத்திசுக்கள் இறக்கவும், அல்சிமீர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகலாமென எச்சரித்துள்ளார்.
மோனோசோடியம் குளுடாமேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் பொட்டலங்கள் மீது, “இந்த உணவுப்பொருளில் மோனோசோடியம்குளுடாமேட் பயன்படுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட வேண்டும். அதேபோல், “மோனோசோடியம் குளுடாமேட்ஒரு வயதிற்குட்பட்டகுழந்தைகுளுக்கு ஏற்றதல்ல” எனவும் குறிப்பிடுவது நம் நாட்டில்கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும்,எச்சரிக்கையாய் இருங்கள். மோனோசோடியம் குளுடாமேட் இருப்பதை “இயற்கை சுவைகூட்டி” என்றும்குறிப்பிட்டிருப்பர். ஏமாந்து விடாதீர்.
உணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே உண்பதுதான் சாலச்சிறந்தது. நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல், செயற்கை உணவைஏற்பதில்லை. மோனோசோடியம் குளுடாமேட் சேர்க்கப்பட்ட உணவின்மற்றொரு ஆபத்து- சுவைகூட்டிகள் நாம் உண்ணும் உணவின் அளவைஅதிகரித்து உடல் எடையைக் கூட்டும் - கவனம். எனவே, மோனோசோடியம்குளுடாமேட் போன்ற சுவைகூட்டிகளை ஒதுக்கி வைப்பதே உடலுக்குஉகந்தது.
"மோனோசோடியம் குளுடாமேட்" என்பது இன்று மார்கெட்டில் பிரபலமாக (சிவந்த நிற சிறிய பாத்திர முத்திரையுடன்) விற்கப்படும் ஒரு பொருள். கவனமா இருங்க!
டிஸ்கி-1 : என்னப்பா, மீள்பதிவு வருது.
டிஸ்கி-1 : என்னப்பா, மீள்பதிவு வருது.
டிஸ்கி-2 : தேர்தல் நேரம், தேர்தல் பணி போட்டாச்சு , தேர்தல் முடியும் வரை இப்படி, அப்படி மீள் பதிவு கைகொடுக்கும்!

33 comments:
உணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே உண்பதுதான் சாலச்சிறந்தது. நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல், செயற்கை உணவைஏற்பதில்லை.
தெளிவான உண்மையான கருத்து!
நன்றி ரஜீவன்.
நல்ல தகவல்..
இதை பதிலை அடிக்கடி தந்து ஜனங்கள் மத்தில் அடிக்கடி ஞாபகம் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்..
வாழ்த்துக்கள்..
முகமூடிகளை அழிவித்தெரிய
நீங்க யாராவது தயாராக இருக்கிறீர்களா..
விவரம் அரிய கவிதை வீதி வாங்க..
அருமையான தகவல்களை தந்து பதிவுலகத்தை சரியாக பயன்படுத்துகிறீர்கள்..
பகிர்வுக்கு நன்று..
@கவிதை வீதி சௌந்தர் said:
நல்ல தகவல்..
இதை பதிலை அடிக்கடி தந்து ஜனங்கள் மத்தில் அடிக்கடி ஞாபகம் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்..//
பதிவுகள் தொடரும், உங்கள் நல்லாதரவோடு. நன்றி.
வேடந்தாங்கல் கருன் said:
அருமையான தகவல்களை தந்து பதிவுலகத்தை சரியாக பயன்படுத்துகிறீர்கள்..
பகிர்வுக்கு நன்று..//
வருகைக்கும், வாழ்துக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் மேலும் எழுதவைக்கும்.
தேவையான பகிர்வு,விளக்கம் அருமை.முதலில் கொஞ்சம் உபயோகித்து பார்த்தேன்,இப்ப அறவே விட்டாச்சு.டிஸ்கி சரிதான்..
@கவிதை வீதி சௌந்தர் said:
முகமூடிகளை அழிவித்தெரிய
நீங்க யாராவது தயாராக இருக்கிறீர்களா..
விவரம் அரிய கவிதை வீதி வாங்க..//
கவிதை வீதி சென்று பார்த்தேன். எவ்வளவு பெரிய விஷயத்தை அனாசயமாக சொல்லி இருக்கீங்க!
ஆசியா உமர் said:
தேவையான பகிர்வு,விளக்கம் அருமை.முதலில் கொஞ்சம் உபயோகித்து பார்த்தேன்,இப்ப அறவே விட்டாச்சு.டிஸ்கி சரிதான்..//
1.நல்ல விஷயம் சகோ. இதை தங்கள் பதிவிலும் எடுத்து சொல்லுங்கள். பலர் பயன்பெறுவர்.
2.இதுவரை டிஸ்கி பயன் படுத்தவில்லை. உங்கள் பின்னூட்டம் சரி என்று சொன்னதும் நிம்மதி வந்தது.
ஐயோ..அண்ணா...ரொம்பவே பயமுருத்திரிங்களே...ஹோட்டல் ஆசையெல்லாம் மறந்திரோனும் போலே...வீட்டில் செய்யும் வெந்த கஞ்சி தான் எப்பவும் பெஸ்ட் போலே...:((
நீங்கள் சொல்லும் பொருள் அஜினொமோட்டொ தானெ.. விளக்கம பெயருடன் சொன்னால் நன்றாம புரியும்...
It also increases blood pressure to people with high blood pressure problems.
http://www.natural-health-restored.com/dangers-of-msg.html
http://health.howstuffworks.com/wellness/food-nutrition/facts/the-dangers-of-monosodium-glutamate.htm
நல்ல செய்திக்கு மீள் பதிவு தவறே இல்லை!
ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயம் தான், சரியா சொல்லி இருக்கீங்க!
உபயோகமான தகவல். அஜினமோட்டோ என்ற பேரில் விற்கப்படுகிறது, இந்த செயற்கை சுவையூட்டி. சாப்பிட்டால், அஜீர்ணம்தான் அதன் மோட்டோ!
அமெரிக்காவில், நிறைய உணவகங்களில் (குறிப்பாக சீன) NO-MSG என்கிற அறிவிப்பைப் பார்க்கலாம். அந்த அறிவிப்பு இல்லாத உணவகங்களில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
இந்தியாவில்தான் இது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை. நாம் எப்போதுமே பட்டுதானே திருந்துவோம்!!
ஆனந்தி said:
//ஐயோ..அண்ணா...ரொம்பவே பயமுருத்திரிங்களே...ஹோட்டல் ஆசையெல்லாம் மறந்திரோனும் போலே...வீட்டில் செய்யும் வெந்த கஞ்சி தான் எப்பவும் பெஸ்ட் போலே...:((//
அரிசியிலும் கலப்படம் உண்டு.
அதை அடுத்த முறை சொல்கிறேன் சகோ.
Vinoth said:
நீங்கள் சொல்லும் பொருள் அஜினொமோட்டொ தானெ.. விளக்கம பெயருடன் சொன்னால் நன்றாம புரியும்...//
நான் அரசு பணியில் இருப்பதால், சில பொருள்களின் பெயர் நேரடியாக சொல்ல இயலாது. அதற்கான குறிப்புகள் மட்டுமே கொடுக்க இயலும்.
சித்ரா said:
t also increases blood pressure to people with high blood pressure problems.
http://www.natural-health-restored.com/dangers-of-msg.html
http://health.howstuffworks.com/wellness/food-nutrition/facts/the-dangers-of-monosodium-glutamate.htm//
ஒவ்வொரு பதிவிலும் உங்கள் வழிகாட்டுதல்கள் வரப்ரசாதங்கள். நன்றி, சகோதரி.
சென்னை பித்தன் said...
நல்ல செய்திக்கு மீள் பதிவு தவறே இல்லை!//
நான் மிகவும் தயக்கத்துடன் போட்ட மீள் பதிவு.
தங்கள் பின்னூட்டம் தைரியம் கொடுக்கின்றது.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயம் தான், சரியா சொல்லி இருக்கீங்க!//
தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி,சகோதரரே.
தஞ்சாவூரான் said:
உபயோகமான தகவல். அஜினமோட்டோ என்ற பேரில் விற்கப்படுகிறது, இந்த செயற்கை சுவையூட்டி. சாப்பிட்டால், அஜீர்ணம்தான் அதன் மோட்டோ!
அமெரிக்காவில், நிறைய உணவகங்களில் (குறிப்பாக சீன) NO-MSG என்கிற அறிவிப்பைப் பார்க்கலாம். அந்த அறிவிப்பு இல்லாத உணவகங்களில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
இந்தியாவில்தான் இது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை. நாம் எப்போதுமே பட்டுதானே திருந்துவோம்!!//
தகவல்களுக்கு நன்றி.
முதல் வருகை. அடிக்கடி வந்து தகவல்கள் தாருங்கள். அனைவரும் பயன்பெறட்டும்
மீள் பதிவாயிருந்தால் என்ன...?
மிகுந்த பயனுள்ள பதிவு. தொடர்க உங்கள் அரும்பணி.
//மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது//
ஆபீசர் என் சாப்பாட்டுலயும் கைய வச்சிட்டார்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
Mano நாஞ்சில் Mano said:
ஆபீசர் என் சாப்பாட்டுலயும் கைய வச்சிட்டார்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......//
சொல்லி கேட்காட்டா முதுகிலும் . . . .
சும்மா ஜோக்கு!
ராஜ ராஜ ராஜன் said:
மீள் பதிவாயிருந்தால் என்ன...?
மிகுந்த பயனுள்ள பதிவு. தொடர்க உங்கள் அரும்பணி.//
நன்றி நண்பரே!நிச்சயமாக.
மீள் பதிவானாலும் அற்புதமான பதிவு. தொடருங்கள்.
Thank you sir
நல்ல செய்திக்கு மீள் பதிவு தவறே இல்லை!
Right Sir
மைதீன் said:
மீள் பதிவானாலும் அற்புதமான பதிவு. தொடருங்கள்//
இளங்கோ said...
Thank you sir
Jana said...
நல்ல செய்திக்கு மீள் பதிவு தவறே இல்லை!
Right Sir
My sincere thanks to Mytheen, Elango&Jana.
அஜிநோமொட்டோவின் தீமைகளைப் பற்றி அழகாக விளக்கியமைக்கு நன்றி. நேரம் கிடைத்தால் எனது வலைப்பூவைப் பாருங்கள்.
அஷ்வின்ஜி
வாழி நலம் சூழ.... www.frutarians.blogspot.com
மக்களுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்கூற வேண்டிய கருத்து
. பார்த்துப்பார்த்து பாட்டிசமைத்ததில் இல்லா சுவை எப்படிக் கிடைக்கிறது துரித உணவகங்களில் இந்த சுவை இதில் எப்படி - சிந்தித்ததுண்டா? மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது.
உணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே உண்பதுதான் சாலச்சிறந்தது. நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல், செயற்கை உணவைஏற்பதில்லை.
இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகம் உள்ளவர்கள் செயற்கைச் சர்க்கரை சேர்த்துக் கொள்வது குறித்து தாங்கள் ஒரு கட்டுரை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்
பிரபாகரன்
http://kidzmagzine.com/?tag=top-ramen
The above page gives the mail communication between my son and TopRamen (noodles) regd MSG and WAX
The company has accepted that it has MSG in its products and claims that it is safe it taken in less quantities.
It also lists the items that has MSG.
So let us be aware that more intake of such kinds of food will cross the permissible limit.
Post a Comment