அன்பு நெஞ்சங்களே, பதிவுலகில் இது என் முதல் படி. ஏற்றி விடுவதும், இறக்கி விடுவதும் ”உணவு உலகம்” ரசிகர்கள் கைகளில்!
பெண்ணென்றால் பேயும் இறங்குமென்பர். ஆனால், பெண்சிசுக்களைக் கொல்லும் சில பேய்களும் இருக்கத்தான் செய்கிறதென்றால், நம்ப முடிகிறதா? ஆம், பெண் சிசுக்களை கொல்லும், மனிதப் பேய்கள் அவை. சொல்வது உலக சுகாதார நிறுவனம் என்றால் ஜீரணிக்க சற்றே சிரமமாகத்தான் இருக்கிறது.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நாட்டில் அறிவியல் வளர, வளர,அறிவியலின் பயன்களை, ஆக்கபூர்வமாய் பயன்படுத்துவதை விட்டு, அழிவின் பாதைகளுக்கு அவற்றை பயன்படுத்துதலே மிகுந்துவிட்டது.
இருமனம் ஒருமனமாகும் திருமண வாழ்வென்றாலும் சரி, உடல்பசி தீர்க்கும் தகாத உறவென்றாலும் சரி, பிறக்கப் போகும் குழந்தை பெண்ணென்றால், கருவில் உருவழிப்பது, மிகச் சாதாரணமாகி விட்டது. அதிலும், விஞ்ஞான வளர்ச்சியின் பயனாய் வந்து சேர்ந்த அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பயன்பாட்டிற்கு வந்த பின், பெண் குழந்தைகளை பிறக்குமுன்னரே,கருவறுத்தல் கவலை தரும் விஷயமாகி விட்டது.
கடந்த முப்பது ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும், மலராமல் கருகிய பெண் சிசுக்கருக்கள் ஒரு கோடியே இருபது லட்சம். பெண்களுக்கான சமூக அங்கீகாரம் இல்லாததையே இந்த புள்ளி விபரம் பறைசாற்றுகிறது. பெண்குழந்தை பெற்றவள் என்றால், பெற்ற தாயைப் பழித்துப் பேசும் பேதமை நம்மில் இருக்கும்வரை, பெண்சிசுக்கொலை இம்மண்ணிலிருந்து மறையாது.
இதில் வேடிக்கை என்னவெனில், பெண் குழந்தைகளைக் கொல்வது,அன்றாடம் அன்னத்திற்கே அலைபாயும் கூட்டமல்ல. படித்த, பணக்கார வீட்டுப் பெண்கள்தான், பெண் சிசுக்கொலைக்கு பெரிதும் வித்திடுபவர்கள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வந்தாலும் வந்தது, கருவின் வளர்ச்சியறிய ஸ்கேன் பயன்படுவதை விட, பெண் குழந்தைகளை இனம் கண்டுகொள்ளத்தான் அதிகம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. இத்தனை தடைகளை மீறி, பெண் குழந்தை ஒன்று பிறந்து விட்டால், கள்ளிப்பாலும், நெல்மணிகளும் அவர்கள் கதை முடிக்க ஊட்டப்படும் உணவாகி விடுகின்றன. விளைவு?
![]() |
என்னைக் காக்க எவருமில்லையா? |
1990ல், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் இருந்ததைவிட, அண்மைக்காலமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ஆம், 1990ல், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் என்றிருந்த விகிதாச்சாரம், 2005ம் ஆண்டு வாக்கில்,836 பெண் குழ்ந்தைகள் என்று குறைந்து விட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் கருவிலே உருவழிக்கப்பட்ட பெண் குழந்தைகள் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் என்கிறது,பெண்ணைப் பேயாக்கும் மற்றொரு புள்ளிவிபரம். என்ன செய்யலாம் இவர்களை? சிசுக்களைக் கொல்லும் இவர்கள் மீது, கொலைக்குற்றம் சுமத்தலாமா?
இன்னும் சில ஆண்டுகளில், இந்த நிலைமை மேலும் மோசமடையலாமென மனித வளத்துறை எச்சரிக்கை மணியடிக்கிறது. விஞ்ஞானம் நாம் வீழ்வதற்கல்ல.
அன்புடன் அறிமுகமாகும்,
காந்திமதிசங்கரலிங்கம்.

74 comments:
நண்பர்கள் யாராவது,தமிழ்மணம் இணைப்பு கொடுத்து உதவுங்களேன்.
தங்களை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
நீங்கள் தமிழ் மணத்தில் பதிய வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் மணப் பட்டையை அழுத்தினால் புதிய பதிவுகள் இல்லை என வருகிறது. பார்த்துக்கொள்ளுங்கள்.
நல்ல பயனுள்ள பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
வருக வருக
அவசியமான பதிவு
நிச்சயம் எதிர்காலத்தில் இதுபோல விசியங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டிக்கொண்டு இருக்கிறேன்
Best wishes!!!!!!!!!
Welcome!!! Welcome!!! Welcome!!!
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வந்தாலும் வந்தது, கருவின் வளர்ச்சியறிய ஸ்கேன் பயன்படுவதை விட, பெண் குழந்தைகளை இனம் கண்டுகொள்ளத்தான் அதிகம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
....குழந்தை, ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்(ல்)வது , தமிழ்நாட்டில் சட்டப்படி தடை செய்யப் பட்டு இருக்கிறது என்று நினைத்தேன்.
குழந்தை இல்லை என்று ஏங்குவோருக்கு தத்து கொடுத்து விடலாமே.
வணக்கம் மேம், பதிவுலகில் உங்களின் முதல் வருகையை வாழ்த்தி வரவேற்கிறேன்..தொடர்ந்து பல சிறந்த பயனுள்ள தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.நன்றி!
// FOOD said...
நண்பர்கள் யாராவது,தமிழ்மணம் இணைப்பு கொடுத்து உதவுங்களேன்.//
இணைத்துவிட்டேன்.... :)
முதல் பதிவை விழிப்புணர்வு பதிவாக அளித்தமைக்கு நன்றிகள் சகோ!....
காந்திமதியின் ஆட்சி ஆரம்பித்ததற்கு வாழ்த்துகள்..
தொடர்ந்து எழுதுங்க.
//Rathnavel said...
தங்களை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
நல்ல பயனுள்ள பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.//
முதல் வாழ்த்தை, முத்தான வாழ்த்தாய் ஏற்றுக்கொள்கிறேன், ஐயா.
//siva said...
வருக வருக
அவசியமான பதிவு
நிச்சயம் எதிர்காலத்தில் இதுபோல விசியங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டிக்கொண்டு இருக்கிறேன்//
நன்றி சிவா. உங்கள் வேண்டுதலே என் ஆசையும்.
//Chitra said...
Best wishes!!!!!!!!!
Welcome!!! Welcome!!! Welcome!!!//
வாழ்த்துகளுக்கும், வரவேற்பிற்கும் நன்றி.
//மாணவன் said...
வணக்கம் மேம், பதிவுலகில் உங்களின் முதல் வருகையை வாழ்த்தி வரவேற்கிறேன்..தொடர்ந்து பல சிறந்த பயனுள்ள தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.நன்றி!//
நன்றி சார். நிச்சயமாக நல்ல தகவல்கள் வரும்.
//Chitra said...
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வந்தாலும் வந்தது, கருவின் வளர்ச்சியறிய ஸ்கேன் பயன்படுவதை விட, பெண் குழந்தைகளை இனம் கண்டுகொள்ளத்தான் அதிகம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
....குழந்தை, ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்(ல்)வது , தமிழ்நாட்டில் சட்டப்படி தடை செய்யப் பட்டு இருக்கிறது என்று நினைத்தேன்.
குழந்தை இல்லை என்று ஏங்குவோருக்கு தத்து கொடுத்து விடலாமே.//
சட்டத்தை மதிப்பவர்களைவிட, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்துபவர்களே இங்கு அதிகம். எனினும், தத்துக் கொடுத்தல் என்ற சிறந்த ஒரு வழிகாட்டிய உங்களுக்கு நன்றிங்க.
//விக்கியுலகம் said...
முதல் பதிவை விழிப்புணர்வு பதிவாக அளித்தமைக்கு நன்றிகள் சகோ!....//
வருகை தந்து கருத்தை பதிவு செய்ததற்கு நன்றிங்க.
//அமைதிச்சாரல் said...
காந்திமதியின் ஆட்சி ஆரம்பித்ததற்கு வாழ்த்துகள்..
தொடர்ந்து எழுதுங்க.//
அன்னை காந்திமதியின் ஆட்சிதான் நெல்லையில் என்று எண்ணி வாழ்த்திவிட்டீர்களென்று எண்ணுகிறேன். இங்கு உங்கள் அண்ணனின் கொடிதான் உயரப்பறக்கிறது. வர்ழ்த்திற்கு நன்றிங்க.
தங்கள் வரவு நல்வரவாகுக.
வாழ்க! வளர்க!!. உயர்க!!.
விழிப்புண்ர்வுதரும் பகிர்வு.
ஆண்கள் பெண்கள் விழிப்படைவதே சிறந்தது! ஆனால் படித்தவர்கள் தான் பின்போக்கு வாதிகளாக உள்ளனர் என்பதையும் மறுக்கல் ஆகாது.
//இராஜராஜேஸ்வரி said...
தங்கள் வரவு நல்வரவாகுக.
வாழ்க! வளர்க!!. உயர்க!!.
விழிப்புண்ர்வுதரும் பகிர்வு.//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க.
//J.P Josephine Baba said...
ஆண்கள் பெண்கள் விழிப்படைவதே சிறந்தது! ஆனால் படித்தவர்கள் தான் பின்போக்கு வாதிகளாக உள்ளனர் என்பதையும் மறுக்கல் ஆகாது.//
படித்தவர்களுக்கும் நாம் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும்.
உண்மையாக கவலை தரக்கூடிய செய்தி...
எல்லாம் சீதணக்கொடுமையும் ஒருபக்கம் தலைதூக்கிநிற்பதால்
அதனால் ஒரு ஏக்கம் பெண்குழந்தை பிறந்தால்...
ஆண்கள் எப்போ இந்தமுறையிலிருந்து மாறுகிறார்களோ அப்போது கொஞ்சம் குறையும் பெண் சிசுக்கொலை...என நான் நினைக்கிறேன்...
நல்ல பதிவு..
பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்..
அண்ணியாரே வருக ! அண்ணனை விட இந்த தளத்தை இன்னும் மிக சிறந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என அன்பு கட்டளை இடுகிறேன்...!
முதல் பதிவே பெண் குழந்தை பற்றி எழுதி மனதை கவர்ந்துவிட்டீர்கள்.
குழந்தைகளில் ஆண் என்ன? பெண் என்ன? உண்மையில் ஒரு உயிரை நேசிக்கும் எவரும் எந்த உயிர்களையும் கொல்ல விரும்பமாட்டார்கள்.
ஆனால் நம் நாட்டை பொருத்தவரை இதற்க்கு ஒரு காரணம் வறுமை. வறுமையை போக்கினாலொழிய இந்த கொடுமையை முற்றிலும் தடுக்க இயலாது...
படித்தவர்களிடையே கூட இந்த கொடுமைகள் நிகழ்கிறதா என எனக்கு தெரியவில்லை...
இருப்பினும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும், அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
நன்றிகள் அண்ணி இப்படி ஒரு விழிப்புணர்வு தொடர்பான பதிவை பகிர்ந்ததிர்க்கு.
we have to think ourselves.when we start to give the proper recognition to the thoughts of the female there will be no way to selective female foeticide.WARM WELCOME.
////vidivelli said...
உண்மையாக கவலை தரக்கூடிய செய்தி...
எல்லாம் சீதணக்கொடுமையும் ஒருபக்கம் தலைதூக்கிநிற்பதால்
அதனால் ஒரு ஏக்கம் பெண்குழந்தை பிறந்தால்...
ஆண்கள் எப்போ இந்தமுறையிலிருந்து மாறுகிறார்களோ அப்போது கொஞ்சம் குறையும் பெண் சிசுக்கொலை...என நான் நினைக்கிறேன்...
நல்ல பதிவு..
பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்..//
சீதனக் கொடுமை மட்டுமல்ல, சில மனங்களின் மாறாத தன்மையும் கூட. நன்றி.
//Kousalya said...
அண்ணியாரே வருக ! அண்ணனை விட இந்த தளத்தை இன்னும் மிக சிறந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என அன்பு கட்டளை இடுகிறேன்...!//
வருக, வருக. அன்பு கட்டளை நன்றே நிறைவேறும்.
//sakthi said...
we have to think ourselves.when we start to give the proper recognition to the thoughts of the female there will be no way to selective female foeticide.WARM WELCOME.//
நன்றி, வருக்கைக்கும், கருத்து பதிவிற்கும்.
உங்ளுடைய இந்த முதல் பதிவே மெகா ஹிட்டானதில் மகிழ்ச்சி. இன்னும் உங்கள் எழுத்து பலருக்கும் பயன் பயக்கட்டும். வாழ்த்துக்கள்.
முதல் பதிவே நச் .இன்னும் பல கட்டுரைகள் இது போல் வரும் என்று எண்ணுகிறேன் ..வரவேண்டும் கண்டிப்பாக
உங்கள் வரவு நல்வரவு ஆகுக.....
ஆரம்பமே அசத்தல்...!!! நீங்கள் ஆபீசரை ஓவர் டேக் பண்ணி "ஆபீசரினி" ஆவதற்கு என் வாழ்த்துக்கள்....!!!
"இனி உங்களை பதிவுலகம் ஆபீசரினி என சொல்லி வாழ்த்தும்"
ஆபீசர் பெல்ட்டுக்குதான் பயப்படனும்னு இருந்த காலம் போயி, இப்போ ஆபீசரினி'யும் பெல்ட்டை கையில் எடுத்தாச்சு ஒடுங்கலேய் ஒடுங்கலேய் தப்பு செய்றவணுக எல்லாம் ஒடுங்கலேய்......
ஆபீசரினிக்கு, தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுட்டேன்....
//கே. ஆர்.விஜயன் said...
உங்ளுடைய இந்த முதல் பதிவே மெகா ஹிட்டானதில் மகிழ்ச்சி. இன்னும் உங்கள் எழுத்து பலருக்கும் பயன் பயக்கட்டும். வாழ்த்துக்கள்.//
வாழ்த்திற்கு நன்றி.
//இம்சைஅரசன் பாபு.. said...
முதல் பதிவே நச் .இன்னும் பல கட்டுரைகள் இது போல் வரும் என்று எண்ணுகிறேன் ..வரவேண்டும் கண்டிப்பாக//
தங்களின் நம்பிக்கை வீண்போகாது. நன்றி.
//MANO நாஞ்சில் மனோ said...
உங்கள் வரவு நல்வரவு ஆகுக..//
நன்றி.
இந்த கொடுமை இன்னுமுமா இருக்கு.அநியாயம்
அருமையான அலசல்
//MANO நாஞ்சில் மனோ said...
ஆபீசர் பெல்ட்டுக்குதான் பயப்படனும்னு இருந்த காலம் போயி, இப்போ ஆபீசரினி'யும் பெல்ட்டை கையில் எடுத்தாச்சு ஒடுங்கலேய் ஒடுங்கலேய் தப்பு செய்றவணுக எல்லாம் ஒடுங்கலேய்......//
அனைவரையும் அன்பாய் அழைப்பதுதான் சகோதரியின் பழக்கம். உங்கள் நண்பரைப்போல், விரட்டுவதில்லை.
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்த கொடுமை இன்னுமுமா இருக்கு.அநியாயம்//
தொடரும் கொடுமை, தொடராதிருக்கவே இந்த பகிர்வு. நன்றி.
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான அலசல்//
வாழ்த்திற்கு நன்றி.
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
வாழ்த்துக்கள்
முதல் பதிவே முதன்மையான பதிவு !.....தொடருங்கள் சகோதரி .....
//விஞ்ஞானம் நாம் வீழ்வதற்கல்ல//
அருமை அம்மா. ஒவ்வொரு வரிகளும் உண்மையை சொல்லுகிறது..
பதிவுலகில் கலக்க வாழ்த்துகள்.
கள்ளிப்பால் கொடுத்து பெண்குழந்தையைக் கொல்வதைத் தடுக்கவே, முந்தைய அ.தி.மு.க.ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம், மத்திய அரசு மற்றும் நாடளாவிய பல தன்னார்வத்தொண்டு நிறுவனங்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அது போல மேலும் சில திட்டங்கள் தேவை!
தென்னகத்தில் பெண் சிசுக்கொலைகள் குறைந்திருப்பதாய் சில அரசு வலைத்தளங்களில் படித்தேன். ஆந்திராவில் மிக அதிகமாகவும், தமிழகத்தில் மிகக்குறைவாகவும் இருப்பதாக அறிகிறேன். இருப்பினும், ஒரு சிசுவைக் கூட கொல்லத் துணியாத அளவு சட்டம் கடுமையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அருமையான இடுகை! நிறைய உழைத்திருக்கிறீர்கள் என்பது புலப்படுகிறது. பாராட்டுக்கள்.
தங்களின் தலைப்பு முற்றிலும் சரி..
இவர்களைத் திருத்தவே முடியாது சகோதரம்...
என்னைப் பொறத்த வரை ஒர வீட்டுக்கு பெண் குழநதை தான் செல்வாக்கானது..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று
முதல் பதிவே, அருமை.
தொடர்ந்து எழுதுங்கள். vaalthukkal
வாழ்த்துகிறேன்!! வரவேற்கிறேன் !!
வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-
வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
முதல் பதிவிலேயே முக்கியமான விஷயத்துடன் தொடங்கி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்....!
இன்னொரு வருத்தமான விடயம், கருவுற்ற ஒன்றரை மாதத்திற்குள்ளேயே தாயின் ரத்தத்தில் இருந்தே கரு ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு விட்டது, வெகுவிரைவில் பயன்பாட்டுக்கு வரும்...!
விரிவான விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்...
எல்லாதரப்பிலிருந்தும் இதற்கான ஆதரவு வரவேண்டும் இப்போதுதான் இதற்க்கு தீர்வு கிட்டும்...
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
வாழ்த்துக்கள்//
வாழ்த்திற்கு நன்றி.
//koodal bala said...
முதல் பதிவே முதன்மையான பதிவு !.....தொடருங்கள் சகோதரி//
உற்சாகம் தரும் வரிகள். நன்றி
//பலே பிரபு said...
அருமை அம்மா. ஒவ்வொரு வரிகளும் உண்மையை சொல்லுகிறது..
பதிவுலகில் கலக்க வாழ்த்துகள்.//
பதிவுலகில் இத்தனை சொந்தங்களா? நன்றி, பிரபு.
//சேட்டைக்காரன் said...
கள்ளிப்பால் கொடுத்து பெண்குழந்தையைக் கொல்வதைத் தடுக்கவே, முந்தைய அ.தி.மு.க.ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம், மத்திய அரசு மற்றும் நாடளாவிய பல தன்னார்வத்தொண்டு நிறுவனங்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அது போல மேலும் சில திட்டங்கள் தேவை!
தென்னகத்தில் பெண் சிசுக்கொலைகள் குறைந்திருப்பதாய் சில அரசு வலைத்தளங்களில் படித்தேன். ஆந்திராவில் மிக அதிகமாகவும், தமிழகத்தில் மிகக்குறைவாகவும் இருப்பதாக அறிகிறேன். இருப்பினும், ஒரு சிசுவைக் கூட கொல்லத் துணியாத அளவு சட்டம் கடுமையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அருமையான இடுகை! நிறைய உழைத்திருக்கிறீர்கள் என்பது புலப்படுகிறது. பாராட்டுக்கள்.//
கருத்து பதிவிற்கு நன்றி. சிசுக்கொலை என்பதே இல்லை என்ற நிலை வரும் நாளே நன்னாள்.
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
தங்களின் தலைப்பு முற்றிலும் சரி..//
நன்றி சார்.
//♔ம.தி.சுதா♔ said...
இவர்களைத் திருத்தவே முடியாது சகோதரம்...
என்னைப் பொறத்த வரை ஒர வீட்டுக்கு பெண் குழநதை தான் செல்வாக்கானது..//
திருந்தும் காலம் வெகு அருகில்.
//♔ம.தி.சுதா♔ said...
இவர்களைத் திருத்தவே முடியாது சகோதரம்...
என்னைப் பொறத்த வரை ஒர வீட்டுக்கு பெண் குழநதை தான் செல்வாக்கானது..//
திருந்தும் காலம் வெகு அருகில்.
//இளங்கோ said...
முதல் பதிவே, அருமை.
தொடர்ந்து எழுதுங்கள். vaalthukkal//
முதல் வருகையும் அருமை. நன்றி.
//நாய்க்குட்டி மனசு said...
வாழ்த்துகிறேன்!! வரவேற்கிறேன் !!//
உங்கள் வாழ்த்து வளரவைக்கும்.
//யானைகுட்டி said...
வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்-
வாழ்த்துக்கள்-வாழ்த்துக்கள்//
ஒருமுறை நன்றி சொன்னால் போதுமென்று எண்ணுகிறேன்.நன்றி.
//Speed Master said...
வாழ்த்துக்கள்//
தங்கள் வாழ்விலும் வசந்தங்கள் மலர வாழ்த்துக்கள்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
முதல் பதிவிலேயே முக்கியமான விஷயத்துடன் தொடங்கி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்....!//
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி,சகோ.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னொரு வருத்தமான விடயம், கருவுற்ற ஒன்றரை மாதத்திற்குள்ளேயே தாயின் ரத்தத்தில் இருந்தே கரு ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு விட்டது, வெகுவிரைவில் பயன்பாட்டுக்கு வரும்...!//
அறிவியலும், கண்டுபிடிப்பும் ஆக்கபூர்வமாய் பயன்பட்டால் நலம்.
//# கவிதை வீதி # சௌந்தர் said...
விரிவான விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்...
எல்லாதரப்பிலிருந்தும் இதற்கான ஆதரவு வரவேண்டும் இப்போதுதான் இதற்க்கு தீர்வு கிட்டும்...//
அதற்கான சிறு முயற்சிதான் இது.
இப்படியே போனால் அப்புறம் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள்..விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
இந்தப் பிரச்சனைக்கு முழு முதல் காரணம், கிராமப்புரங்களில் எப்போதும் உள்ள பொருளாதாரப் பிரச்சனைகளே. ஒரு பெண் குழந்தையை வளர்த்து, ஆளாக்குவதில் அவர்களுக்கு உள்ள ஒரே சிரமம், வருமானம் மற்றும் சேமிப்பு பற்றாக் குறையே.
எனவே இந்த விஷயத்தில் அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் அவர்களின் பொருளாதார நெருக்கடி தீர வழி சொல்ல வேண்டும். அதற்க்கான நீண்ட கால திட்டங்கள் வகுக்க வேண்டும்.
ஆண்கள், திருமணம் செய்ய பெண் கிடைக்காததால், ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறி வருகின்றனர்.
முதல் படியை வெற்றிகரமா தாண்டியிருக்கீங்க ஆஃபீசர் மேடம்!
//விஞ்ஞானம் நாம் வீழ்வதற்கல்ல.//
நச்சுன்னு சொன்னீங்கக்கா!
இப்படியும் மனிதர்களா? அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது?
இந்த வலி தீர ஆயிரம் கவிதைகள் எழுதினாலும்
தீராது .இந்த விசயத்தில எனக்கு அதிக கோவம்
உள்ளது .உங்கள் தலைப்பைப் பார்த்ததும் வாசிக்காமலே
கருத்திடுச் செல்கின்றேன் .முடிந்தவரை இந்த சிசுக்கொலையை
எதிர்த்து இன்னும் இதுபோன்ற நிறைய ஆக்கங்கள் தாருங்கள் சகோதரரே.
Post a Comment