இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday, 8 June, 2011

புயல் கரையைக் கடக்கிறதாம்!பின்னூட்ட புயல்
பதிவுலகில்
பஹ்ரைன் பாபா
பஸ் விடுவதில்
பலே கில்லாடி
முக புத்தகத்தில்
முழு நேர நண்பன்
நாடு விட்டு நாடு வந்த
நாஞ்சில் நாட்டு நண்பன்
எடுப்பதெல்லாம் அருவா- கத்தி
இல்லாள் முன் நிற்கும் வாய் பொத்தி!
மனமுருகி அழைக்கும்
வார்த்தை  மக்கா
மயக்கியிருக்கும் பல
மனங்களை ஜோக்கா!
மும்பையில் விற்கப்பட்ட
கட்டித் தங்கம்!
தாய் நாட்டில் பதுங்க
புறப்பட்டுவிட்ட சிங்கம்
பிறந்த பொன் நாளாம் இன்று
சிறந்த முறையில் வாழ்த்தலாம் வாங்க!
 இதையும் கொஞ்சம் படிச்சிட்டுப் போங்க!

இன்னும் இருக்கு இவர் புகழ்:
வாத்தி வாத்தி என்று
வஞ்சனையாய் அழைத்து
சாத்து சாத்தென்று
சாத்திடுவார் கருனை!
எக்குத்தப்பாய் ஜொள்விடும்
சின்ன பிள்ளைகளை
எலே மக்கா என்றழைத்து
கழுத்தில் வைப்பார் கத்தியை!
சென்னைப் பித்தனுக்கென்று
செதுக்கிய வார்த்தை தல
மாத்தியோசிப்பவரென்றால்
மறக்காமல் பதிலுண்டு.

ஆஃபிசர்,ஆஃபிசர்  என்றென்னை
அனுதினமும் அன்பாய் அழைத்து
உணவு உலகத்தில்
அல்வா கொடுத்து கலாய்ப்பதால்;
வியட்நாமில் உள்ள
விடுதலை வீரர் விக்கி 
சொக்கிப்போவது இவர்  பதிவில்.
பன்னிக்குட்டி ராம்சாமி என்றால்
பதுங்கிவிடும் இந்த பாயும் புலி.
எலே தம்பி என்றழைத்து
இடுகின்ற கட்டளைகளை
இன்முகத்துடன் நிறைவேற்றும்
இம்சை அரசன்
இவனுக்கோர் இளைய தளபதி.
தம்பி செல்வாவிற்கு
தன்னிகரில்லாத் தனயன்!
இன்னும் இருக்கு இவர்  பெருமை
அடுத்த வருடம் சொல்கிறேன்
அதுவரை காக்கணும் பொறுமை!
Follow FOODNELLAI on Twitter

44 comments:

தமிழ்வாசி - Prakash said...

வடை எனக்கு தானுங்கோ....

தமிழ்வாசி - Prakash said...

மனோவுக்கு HAPPY BIRTHDAY WISHES

தமிழ்வாசி - Prakash said...

உணவுலகம் சார் இன்னைக்கு ஒரே ஐஸ் மழையா இருக்கே....

FOOD said...

காலை வணக்கம்,வாங்க பிரகாஷ். கேக் உங்களுக்கே!

FOOD said...

ஐஸ் மட்டுமல்ல. அல்வாவும் கொடுத்திருக்கோம்ல!

எல் கே said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மைந்தன் சிவா said...

ஹிஹி ஆளுக்காள் மத்தவங்களையே இழுக்கிறான்கப்பா

மைந்தன் சிவா said...

ஹிஹி மனோ புயலா???அவரு சுனாமி !!!

FOOD said...

//எல் கே said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி.

FOOD said...

//மைந்தன் சிவா said...
1. ஹிஹி ஆளுக்காள் மத்தவங்களையே இழுக்கிறான்கப்பா
2.ஹிஹி மனோ புயலா???அவரு சுனாமி !!!//
1. கல்லாப்பொட்டில காசு சேரனுமில்ல!
2. சுனாமி சுருட்டிடப்போகுது.கவனம் சிவா.

டக்கால்டி said...

Happy B'day Mano anne...Treat eppo...

Thanks for sharing Rasleela Rajendran sir...He He...

டக்கால்டி said...

Happy B'day Mano anne...Treat eppo...

Thanks for sharing Rasleela Rajendran sir...He He...

FOOD said...

வாங்க டக்கால்டி, உங்களை மறந்திட்டேனா? அடுத்த பதிவுல ஒரு பிடி பிடிச்சிடுறேன்.

டக்கால்டி said...

வாங்க டக்கால்டி, உங்களை மறந்திட்டேனா? அடுத்த பதிவுல ஒரு பிடி பிடிச்சிடுறேன்.

8 June 2011 7:26 AM//

Sir plz leave me..I'm paavam...

விக்கி உலகம் said...

வாழ்த்துக்கள் தோளோடு தோள் நிற்கும் அன்பு மக்கா மனோவுக்கு....பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.....இந்த விஷயத்தை உலகுக்கு சொல்லி புண்ணியம் செய்த அண்ணன் அவர்களுக்கு நன்றி!

FOOD said...

அப்படியே அப்பீட்டா?

FOOD said...

//விக்கி உலகம் said...
வாழ்த்துக்கள் தோளோடு தோள் நிற்கும் அன்பு மக்கா மனோவுக்கு....பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.....இந்த விஷயத்தை உலகுக்கு சொல்லி புண்ணியம் செய்த அண்ணன் அவர்களுக்கு நன்றி!//
ஒரே கும்மாங்குத்தா இருக்கே!

சி.பி.செந்தில்குமார் said...

பார்த்தீங்களா? எங்கண்ணனோட பெருமையை.... நண்பனுக்கான வாழ்த்துலயே கவிதைல இந்த கலக்கு கலக்கறாரே.. அவரோட முன்னாள் காதலி, இந்நாள் காதலிகளுக்கெல்லாம். என்னா கலக்கு கலக்குவாரு.. பதிவுலக காதல் கவிதை குருவை வாழ்த்த வயதில்லாததால் வணங்கி மகிழ்கிறேன் ஹி ஹி அண்ணே கவிதை செம கலக்கல்

Kousalya said...

தளம் எதுவும் மாறி வந்துவிட்டேனா??

எப்படி இப்படி கவிதை எல்லாம் ! கலக்குறீங்க...தாமிரபரணி தண்ணி பண்ற வேலை ! வேற என்ன சொல்ல !! உங்கள் நண்பர்கள் கொடுத்துவைத்தவர்கள்...

நண்பர் மனோவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

ராஜி said...

பதிவர்களை வைத்து ஒரு கவிதையா? வித்தியாசமான முயர்சி. ச்கோதரர் மனோவுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (அவருக்கு வர கிஃப்ட்ல பாதி உங்களுக்கா? இப்படி புகழ்ந்திருக்கீங்களே அதான் கேட்டேன்)

மொக்கராசா said...

//நண்பனுக்கான வாழ்த்துலயே கவிதைல இந்த கலக்கு கலக்கறாரே.. அவரோட முன்னாள் காதலி, இந்நாள் காதலிகளுக்கெல்லாம். என்னா கலக்கு கலக்குவாரு

சி.பி உங்க மேல ரெம்ப கோவமா இருக்காரு போல அப்படியே சி.பிக்கும் ஒரு காதல் கவிதை எழுதி கொடுத்துடுங்க

அத வச்சு அவரு எஞ்சாய் பண்ணட்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் மனோ, ஆப்பீசர் கையால கவிதா வாழ்த்துக்கள் வாங்கிட்டேய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பன்னிக்குட்டி ராம்சாமி என்றால்
பதுங்கிவிடும் இந்த பாயும் புலி.//////

ம்ம் அந்த பயம் இருக்கனும்.....

# கவிதை வீதி # சௌந்தர் said...

சிங்கம் களம் எறங்கிடுச்சி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ ஆப்பீசர், இன்னிக்கு வர்ர கலக்சன்ல ஆளுக்கு பாதியா கொடுத்துடுங்க............!

சென்னை பித்தன் said...

மனோ பிறந்த நாள் என்றதுமே கவிதை புயலாக வருகிறதே! அசத்திட்டீங்க ’ஆஃபீசர்’!கௌசல்யா சொல்வது போல்,தாம்பிரபரணி மகிமைதான்!
தங்கத் தளபதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

கோமாளி செல்வா said...

வாழ்த்துகள் மனோ அண்ணா!

அடச்சே! எனக்கு நேரம் இல்லாம போச்சே , இல்லைனா அண்ணனுக்கு நானும் ஒரு பதிவு எழுதி வாழ்த்து சொல்லிருப்பேனே :-(

கோமாளி செல்வா said...

இப்பவும் ஒண்ணு கெட்டுப்போகல , கொஞ்ச நேரம் இருக்கு ,
எதுக்கும் கோமாளில ஒரு பதிவுக்கு முயற்சி பண்ணுறேன்!

கோமாளி செல்வா said...

//
இவனுக்கோர் இளைய தளபதி.
தம்பி செல்வாவிற்கு/

மிக்க மகிழ்ச்சி , மிக்க மகிழ்ச்சி ..!
என்னையும் ஞாபகம் பண்ணினதுக்கு!
நன்றி அண்ணா :-)

நிரூபன் said...

பின்னூட்ட புயல்
பதிவுலகில்
பஹ்ரைன் பாபா
‘பஸ்’ விடுவதில்
பலே கில்லாடி
முக புத்தகத்தில்
முழு நேர நண்பன்//

ஆஹா...சிங்கம் கிளம்பிடுச்சா....
என்ன ஒரு அடை மொழிகள்...

அவரோடை பேரைக் கேட்டாலே ப்ளாக் ரசிகர்கள், வாசககர்கள் மனசு குதுகலாமாகிடும்.

மனோ கமெண்ட் தொடங்கிட்டார் என்றால்....
செம ஜாலியாக இருக்கும்.

நிரூபன் said...

நாடு விட்டு நாடு வந்த
நாஞ்சில் நாட்டு நண்பன்
எடுப்பதெல்லாம் அருவா- கத்தி
இல்லாள் முன் நிற்கும் வாய் பொத்தி//

இது ரொம்ப ஓவருங்க...
ஹி...அந்தாள் வீட்டில் அடங்கியிருக்கிற ரகசியத்தை,
அம்பலமாக்கிறீங்களே இது நியாயமா ஆப்பிசர்;-))

ச்....சும்மா தமாஷ் பண்ணினேன்.

நிரூபன் said...

மனமுருகி அழைக்கும்
வார்த்தை ‘மக்கா’
மயக்கியிருக்கும் பல
மனங்களை ஜோக்கா!
மும்பையில் ‘விற்க’ப்பட்ட
கட்டித் தங்கம்!//

என்ன ஒரு அருமையான வாழ்த்துக் கவிதை..

மக்கா என்று சொல்லிச் சொல்லி,
எத்தினை பேர் கூட்டுச் சேர்ந்து திட்டினாலும்
சிரிச்சுக்கிடே பதில் போடும் பண்பு மனோவினுடையது.

நிரூபன் said...

தாய் நாட்டில் ‘பதுங்க’
புறப்பட்டுவிட்ட சிங்கம்
பிறந்த பொன் நாளாம் இன்று
சிறந்த முறையில் வாழ்த்தலாம் வாங்க!//

நான் பேஸ்புக்கில் வாழ்த்துச் சொல்லிட்டேன்,
இருந்தாலும்
எங்கள் பதிவர்களின் இதயம் தொட்ட நகைச்சுவைச் செம்மல்,
பின்னூட்ட இளவல்
கும்மி குசும்பன்
அண்ணன் மனோவிற்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

இன்னும் இருக்கு இவர் புகழ்:
வாத்தி வாத்தி என்று
வஞ்சனையாய் அழைத்து
சாத்து சாத்தென்று
சாத்திடுவார் கருனை!//

வாத்தியாரையும் நொங்கெடுக்கிறதை எழுதிட்டீங்களே....//
எக்குத்தப்பாய் ஜொள்விடும்
சின்ன பிள்ளைகளை
எலே மக்கா என்றழைத்து
கழுத்தில் வைப்பார் கத்தியை!//

இதில் என்ன ஒரு ஸ்பெசாலிட்டி என்றால், சில வேளைகளில் சிபி கமெண்ட் போட்ட பின்னாடி மனோ ஓடி வந்து சிபியின் கமெண்ட்டில் பிழை என ஒரு காமெடியை அவுத்து விடுவார் பாருங்க...
அது ரசிக்கும் படியாகவும், நினைத்து நினைத்துச் சிரிக்கும் படியாவும் இருக்கும்.

நிரூபன் said...

பின்னூட்டச் சுனாமியைப் பற்றிய வாழ்த்துக் கவிதை அருமை சகோ,
கவிதையில் காமெடி கலந்து,
நகைச்சுவை வாழ்த்துக் கவிதையினைத் தந்து எமையெல்லாம் சிரிக்க வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஆப்பிசர்,

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கலக்கல் பதிவு..
மாப்ள மனோவிர்க்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

koodal bala said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பர் மனோ .

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வாழ்க வளமுடன்!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

ஷர்புதீன் said...

வாழ்த்துக்கள் மனோ!!

Jana said...

எனது வாழ்த்துக்களும்...

இராஜராஜேஸ்வரி said...

மனோவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

அருமை.. Belated wishes too!

அம்பாளடியாள் said...

கொஞ்சம் தாமதமாக அறிதுகொண்டேன்
இருப்பினும் அருமைச்சகோதரருக்கு என்
பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும்பெற்று!.........
இந்தப் பகிர்வைத் தந்த
உங்களுக்கும் எனது நன்றிகள்.