இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 19 June, 2011

பதிவர்கள் சந்திப்பு பல்சுவை சிந்திப்பு நன்றி அறிவிப்பு

நாடு, மொழி , மதம், இனங்களைக்  கடந்து, நாம் எல்லோரும்  தமிழர்கள் என்ற ஒரே ஒரு குடையின் கீழ், ஒன்றாய் இணைந்திட, 17.06.2011 இல் நெல்லையில், சந்தித்திட சிந்தித்தோம். சிந்தனை செயலாய் உருவானது. 

                        வந்து கலந்தும், வாழ்த்தியும், நிகழ்ச்சி சிறப்புற நடைபெற ஒத்துழைத்த அனைத்து  நெஞ்சங்களுக்கும் நன்றி, நன்றி,நன்றி.
நிகழ்ச்சி சிறந்திட, நெஞ்சம் நிறைந்திட வந்திருந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்  பட்டியல்: 
சீனா அய்யா, பலாபட்டறை சங்கர், தண்டோரா மணிஜி, நாஞ்சில் மனோ, இம்சை அரசன் பாபு,பெயர் சொல்ல விரும்பவில்லை,மனதோடு மட்டும் கௌசல்யா, கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா, நாய் குட்டி மனசு ரூபினா, அறிவியல்-கல்பனா ராஜேந்திரன், சுவாமியின் மன அலைகள் டாக்டர்  கந்தசாமி,ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்துரத்னவேல்நடராசன்,ஜெயவேல்சண்முகவேலாயுதம், ஜோசபினோடு கதையுங்கள் -பாபா ஜோசபின்,கோல்ட் சிவம், வம்ப வெலைக்கு வாங்குவோம்ல-மணிவண்ணன், தமிழ்வாசி பிரகாஷ், ரசிகன் - ஷர்புதீன், அட்ரா சக்க- சிபி செந்தில்குமார், கோமாளி செல்வா, வெடிவால்-சகாதேவன்,உணவுஉலகம்சங்கரலிங்கம்,அன்புடன்அ.மு.ஞானேந்திரன்,
 வெறும்பய-ஜெயந்த்,நிலாஅதுவானத்துமேல!-ஸ்டார்ஜான், மற்றும் பலர். 
நிகழ்ச்சியில்,   பதிவுலக நண்பர்கள் அனைவரும்மனம் திறந்து தத்தம் எண்ண அலைகளை அரங்கில் எடுத்துரைத்தனர். அனைவரும் எதிர்பார்த்ததுபோல், நன்றாய், நகைச்சுவையாய், நம் நற்பண்புகளை நாடறியச்  செய்யும் விதமாய் அமைந்தது. 
வலையுலகில் மூத்த பதிவர் திரு.டாக்டர்  கந்தசாமி அய்யா அவர்கள், கோவையிலிருந்து முதல் நாளே வந்திருந்து நிகழ்வில் பங்கு பெற்றதும், வலைசரம் சீனா ஐயா, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராசன், வெடிவால் சகாதேவன் ஆகிய வலையுலக சீனியர்கள் வந்திருந்து,வலைப்பதிவிற்கு, வயசு ஒரு பொருட்டல்ல என்பதை உலகறிய செய்தனர். இருபதும், அறுபதும் இணைந்து இன்பமாய் கொண்டாடிய குடும்ப விழா என்றால், அது மிகையன்று.
நன்றி தினமலர் -நெல்லை
இந்த சந்திப்பின் மூலம் ,சிபியின் பக்கங்களை,   பெண்களும் சென்று பார்க்கும் வண்ணம்,நம் பதிவுலக சகோதரிகளால் பாவ மன்னிப்பு  வழங்கப்பட்டதும், கோமாளி செல்வாவின்- கொசுக்கடியும் சாரி மொக்கைகளும், நிகழ்ச்சியின் முடிவில், பதிவர்கள் சந்திப்பினை மற்ற சந்திப்புகளிலிருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாய், சமுதாய பணிக்கென்றுமனமுவந்து ரூபாய் 5615/- (ஐயாயிரத்து அறுநூற்று  பதினைந்து) வழங்கியதும், நிகழ்ச்சியின்  ஹைலைட்ஸ். 

என்ன அதிசயத்தை, இப்படி வளைந்து பார்க்கிறார்கள்   ?
நிகழ்ச்சி நாளன்று, சில தொழில் நுட்ப காரணங்களால்,பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டநேரடி ஒளிபரப்பிற்கு, நெருக்கடி வந்து விட்டது. விடுப்பு எடுத்து, வீட்டில் காத்திருந்த நிரூபனுக்கு, கடுப்பு மிக அதிகம் வந்துவிட்டது. எங்களுக்கு தெரிந்த எத்தனையோ வழிகளில் முயன்றும், சரி செய்ய இயலவில்லை. அதனால், நிரூபனிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். ஹி, ஹி, இது சிபி வழியென்று யாரேனும் சிந்த்தித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல நண்பர்களே!
நன்றி தினகரன்-நெல்லை
இதோ, நீங்கள் பார்த்திடும் பாத்திரங்களுக்கும் , பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் எனன தொடர்புகாத்திருங்கள், அடுத்த பதிவில், காரணம் சொல்கிறேன்.  
                      
என்ன  பிரச்சனை இவர்களுக்குள்? ஏன் முறைத்து கொள்கிறார்கள்? 
                                    இன்னும் வரும் . . . எதிர்பார்த்திருங்கள் . . . . . .
Follow FOODNELLAI on Twitter

70 comments:

இராஜராஜேஸ்வரி said...

பதிவர்கள் சந்திப்பினை மற்ற சந்திப்புகளிலிருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாய், சமுதாய பணிக்கென்று, மனமுவந்து ரூபாய் 5615/- (ஐயாயிரத்து அறுநூற்று பதினைந்து) வழங்கியதும், நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ். //

Realty High light. congrats.

எல் கே said...

நல்ல விஷயம் சார். அடுத்த முறை நான் கலந்துக் கொள்ள முயற்ச்சிக்கிறேன்

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
பதிவர்கள் சந்திப்பினை மற்ற சந்திப்புகளிலிருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாய், சமுதாய பணிக்கென்று, மனமுவந்து ரூபாய் 5615/- (ஐயாயிரத்து அறுநூற்று பதினைந்து) வழங்கியதும், நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்.

Realty High light. congrats.//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

//எல் கே said...
நல்ல விஷயம் சார். அடுத்த முறை நான் கலந்துக் கொள்ள முயற்ச்சிக்கிறேன்//
அவசியம் வாருங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்த சந்திப்பின் மூலம் ,சிபியின் பக்கங்களை, பெண்களும் சென்று பார்க்கும் வண்ணம்,நம் பதிவுலக சகோதரிகளால் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டதும்,

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஏண்ணே.. இப்படி? அதான் அங்கேயே கும்மீட்டீங்களே.. மறுபடியும் முதல்ல இருந்தா?

சி.பி.செந்தில்குமார் said...

பலா பட்டறை சங்கர்தான் கலந்து கொண்ட பதிவர்களிலேயே செம பர்சனாலிட்டி.. ஆள் சினிமா ஹீரோ கணக்கா இருக்காரே.. ஆனா பந்தா பண்ண தெரியாத நல்ல மனுஷன்.. விக்ரம் சாயல்

சி.பி.செந்தில்குமார் said...

மகா ஜனங்களே.. மனோவுக்குப்பின்னால இருக்கறது அவரோட மச்சினர்.. மனோவின் சம்சாரம் மனோவை நம்பாம உளவுக்கு ஆள் அனுப்பி இருக்காரு.. ஏஹே ஹேஹேய்

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>இந்த சந்திப்பின் மூலம் ,சிபியின் பக்கங்களை, பெண்களும் சென்று பார்க்கும் வண்ணம்,நம் பதிவுலக சகோதரிகளால் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டதும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஏண்ணே.. இப்படி? அதான் அங்கேயே கும்மீட்டீங்களே.. மறுபடியும் முதல்ல இருந்தா?//
ஒத்துக்கிட்டா சரி.இனி விட்டுடுவோம்ல!

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
பலா பட்டறை சங்கர்தான் கலந்து கொண்ட பதிவர்களிலேயே செம பர்சனாலிட்டி.. ஆள் சினிமா ஹீரோ கணக்கா இருக்காரே.. ஆனா பந்தா பண்ண தெரியாத நல்ல மனுஷன்.. விக்ரம் சாயல்//
உங்கள் சேட்டைகள, சுட்டிக்காட்டியபோது உங்களுக்கு சப்போர்ட் பண்ணினாரே,அதுக்கு கைமாறா? ஓவரா வழியாதீங்க சிபி! குற்றால கதைகளை போட்டு உடைச்சிட போறாரு!

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
மகா ஜனங்களே.. மனோவுக்குப்பின்னால இருக்கறது அவரோட மச்சினர்.. மனோவின் சம்சாரம் மனோவை நம்பாம உளவுக்கு ஆள் அனுப்பி இருக்காரு.. ஏஹே ஹேஹேய்//
மனோவிடம் வாலாட்டாதீங்க, குற்றாலம் படங்கள் பப்ளிஷ் பண்ணிடப்போறாரு!அவ்வ்வ்வ்வ்வ்.

Unknown said...

ஹிஹி மன்னிப்பா???சிபி தானே தொடக்கி விட்டவர்??ஹிஹி

Unknown said...

ஹிஹி லாஸ்ட்டு போட்டோ தான் பைனல் பன்ச்!!ரெண்டு மக்கா கொக்கா!!

சக்தி கல்வி மையம் said...

என்னால் வர முடியவில்லையே என வருத்தப்படுகிறேன்..
வாழ்த்துக்கள் ....

உணவு உலகம் said...

//மைந்தன் சிவா said...
ஹிஹி மன்னிப்பா???சிபி தானே தொடக்கி விட்டவர்??ஹிஹி//
ஆம்,அப்படியே ஆமோதிக்கிறேன்.

உணவு உலகம் said...

//மைந்தன் சிவா said...
ஹிஹி லாஸ்ட்டு போட்டோ தான் பைனல் பன்ச்!!ரெண்டு மக்கா கொக்கா//
அடி பலமா விழுந்திருச்சு, சிவா!

உணவு உலகம் said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
என்னால் வர முடியவில்லையே என வருத்தப்படுகிறேன்..
வாழ்த்துக்கள் ....//
நீங்கள் வந்திருந்தால், ஆன்லைன் ஒளிபரப்பு சாத்தியப்பட்டிருக்கலாம். எனினும், உங்கள் மனம் முழுவதும், அன்று நெல்லையில்தான் இருந்திருக்குமென்பதை நானறிவேன்.

J.P Josephine Baba said...

இந்த விழாவுக்கு ஆக்கவும் ஊக்கவுமாக இருந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். எழுத்தின் வடிவில் கண்டவர்களை நேரில் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!

உணவு உலகம் said...

நன்றி சகோ

ஷர்புதீன் said...

என்ன இருந்தாலும் எனது பிடித்த உணவான பனீர் மசாலா சூப்பர் சார்.,அடுத்த முறை அது இல்லைனா வரமாட்டேன் என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். ஹி ஹி

பலாபட்டரை ஐநூறு ரூபாய்தான் கொடுத்தார், ஆனால் நான் ஆயிரம் ரூபாய் கொடுத்தேன் ., என்னை அஜித் போல என்று சொல்லாத சிபியை மிக வன்மையாக கண்டித்து ஒரு மைனஸ் வோட்டு போடபோகிறேன்

:-)

இம்சைஅரசன் பாபு.. said...

நானும் உங்களுடன் சேர்ந்து நன்றி சொல்லுகிறேன் எல்லோர்க்கும் ...அருமையாக குடும்ப விழாவாக நடந்தது ..என்றும் பசுமையாக இருக்கும் இந்த நிகழ்வுகள் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Thanks for sharing. I missed the function. அதனால இதை மறந்துட்டு மறுபடியும் முதல்ல இருந்து பதிவர் சந்திப்பு வைய்ங்க

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசருக்குதான் நன்றி சொல்லணும் எவ்வளவு அழகா சந்திப்பை நடத்தி அற்புதபடுத்திட்டார் பாருங்க...!!!!!

"நன்றி ஆபீசர் நன்றி"

MANO நாஞ்சில் மனோ said...

என்ன பிரச்சனை இவர்களுக்குள்? ஏன் முறைத்து கொள்கிறார்கள்?///

டேய் மூதேவி ஏண்டா அப்பிடி பாக்குறே ராஸ்கல்....?

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
மகா ஜனங்களே.. மனோவுக்குப்பின்னால இருக்கறது அவரோட மச்சினர்.. மனோவின் சம்சாரம் மனோவை நம்பாம உளவுக்கு ஆள் அனுப்பி இருக்காரு.. ஏஹே ஹேஹேய்//

எலேய் அதான் பகிரங்கமா அங்கே எல்லோரிடமும் சொல்லிட்டேனே, இங்கேயும் என்னை கேவல படுத்துறியா நாதாரி அருவா எடுக்குரதுக்குள்ளே ஓடி போயிரு கொய்யா.......

MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
//சி.பி.செந்தில்குமார் said...
மகா ஜனங்களே.. மனோவுக்குப்பின்னால இருக்கறது அவரோட மச்சினர்.. மனோவின் சம்சாரம் மனோவை நம்பாம உளவுக்கு ஆள் அனுப்பி இருக்காரு.. ஏஹே ஹேஹேய்//
மனோவிடம் வாலாட்டாதீங்க, குற்றாலம் படங்கள் பப்ளிஷ் பண்ணிடப்போறாரு!அவ்வ்வ்வ்வ்வ்.//

இருக்கு ஆபீசர் பாருங்க சிபி இனி எப்பிடி எல்லாம் நாற போறான்னு.....

MANO நாஞ்சில் மனோ said...

J.P Josephine Baba said...
இந்த விழாவுக்கு ஆக்கவும் ஊக்கவுமாக இருந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். எழுத்தின் வடிவில் கண்டவர்களை நேரில் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!//

நிகழ்ச்சி'ல அருமையா உருக்கமா பேசுனீங்க மேடம் நன்றிகள்....

MANO நாஞ்சில் மனோ said...

பலாபட்டரை ஐநூறு ரூபாய்தான் கொடுத்தார், ஆனால் நான் ஆயிரம் ரூபாய் கொடுத்தேன் ., என்னை அஜித் போல என்று சொல்லாத சிபியை மிக வன்மையாக கண்டித்து ஒரு மைனஸ் வோட்டு போடபோகிறேன்//

அண்ணே நீங்க அஜீத் மாதிரி ஏன் அண்ணே இருக்கோணும்...? ஏன் ஒரு விவேக் மாதிரி இருந்தா குறைஞ்சா போவீங்க...? ஏய் பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் சிபி, தம்பியை பார்த்தா ஹீரோ மாதிரி இல்லையாக்கும்...? ராஸ்கல் உனக்கு பொறாமைடா என் மேல....போடாங்......

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஒர்க் ஆகலை ஆபீசர்...?

rajamelaiyur said...

Enjoy panerukeka. . . . I will try to attent next time ;) (varalama?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செமையா இருந்திருக்கும் போல.......! கலக்கிப்புட்டீங்க ஆப்பீசர்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இந்த சந்திப்பின் மூலம் ,சிபியின் பக்கங்களை, பெண்களும் சென்று பார்க்கும் வண்ணம்,நம் பதிவுலக சகோதரிகளால் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டதும், ////////

அப்படின்னா இனி சிபி பக்கங்கள பாக்க முடியாதா... படிக்கனுமா? என்ன கொடும சார் இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வாவின்- கொசுக்கடியும் சாரி மொக்கைகளும், ///////

அடப்பாவி அங்கேயுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பதிவர்கள் சந்திப்பினை மற்ற சந்திப்புகளிலிருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாய், சமுதாய பணிக்கென்று, மனமுவந்து ரூபாய் 5615/- (ஐயாயிரத்து அறுநூற்று பதினைந்து) வழங்கியதும், நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ். ///////

வெல்டன் ஆப்பீசர்........ நல்லவிஷயம்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இதோ, நீங்கள் பார்த்திடும் பாத்திரங்களுக்கும் , பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் எனன தொடர்பு? //////

எல்லாத்தையும் அங்க ஏலம் விட்டீங்களா ஆப்பீசர்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////என்ன பிரச்சனை இவர்களுக்குள்? ஏன் முறைத்து கொள்கிறார்கள்?
////////

என்ன பெரிய இண்டர்நேசனல் பிரச்சனையாவா இருக்க போவுது? சிபி நைசா ரெண்டு ஜூசு (?) எக்ஸ்ட்ரா அடிச்சிருப்பாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆப்பீசர் தமிழ்மணத்த காணல, போய் கண்டுபுடிச்சிட்டு தூக்கிட்டு வாங்க..........!

Unknown said...

கலக்கியிருக்கீங்க ஆபீசர்! வாழ்த்துக்கள்!! :-)

Kousalya Raj said...

சந்திப்பை மிக அற்புதமாக கொண்டு சென்று முடித்து வைத்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும், பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்த நேச நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்.

இப்படி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் அண்ணாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Anonymous said...

1.முதல் படத்தில் உங்களுக்கு வலதுபுறம் வெள்ளை சட்டை போட்டு அமர்ந்து இருக்கும் அப்பாவி யார் சார்?

2. க்ரூப் போட்டோ படம் சிறியதாக உள்ளது. அதில் இருப்பவர்கள் பெயரை பத்திரிகையில் வருவது போல் வலம் இருந்து இடம் என்று குறிப்பிட்டு பெயர் போட்டால் பலருக்கு விவரம் தெரியும். செய்வீர்களா?

3. கடைசி படத்தில் இருக்கும் ரோஸ் சொக்கா மற்றும் வெள்ளை சொக்கா (புதிய) பதிவர்கள் யார் என்று தெரியவில்லை?

4. வீடியோ எடுத்த பதிவு எப்போது வெளிவரும்?

நிரூபன் said...

ஆப்பிசர், சிறியவனான என்னிடம் பெரியவர் நீங்கள் மன்னிப்புக் கோருவது அழகல்ல..

பிச்சுப் புடுவேன் பிச்சு.

விரிவான கருத்துக்களோடு மாலை வருகிறேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மையில் பெருமைப்படவைக்கிறது. இன்னும் வரும் காலங்களில் நூற்றுக்காணக்கான பதிவர்கள் ஒன்று சேர்ந்து மாபெறும் மாநாடு ஒன்றை நடத்த இந்த கூட்டம் கண்டிப்பாக மிகப்பெரிய ஆதராமாக இருக்கும் என நம்புகிறேன்..

இதன் மூலம் உணவு உலகமகிய தாங்கள் எங்கள் மனதில் நீங்கத இடத்தை பெற்றுவிட்டீர்...

இது போன்ற சிறந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றிகள்...


புகைப்படங்கள் என் கணினியை அலங்கரிக்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வீடியா காட்சிகளை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...

நன்றி

சென்னை பித்தன் said...

படிக்கும்போது,நாம் அங்கு இல்லாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம்தான் அதிகமாகிறது!வரும் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என் நன்றிகள்.

பெசொவி said...

நான் கலந்து கொண்ட முதல் பதிவர் சந்திப்பு இதுதான், நிகழ்ச்சியை நன்கு நடத்த உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

Jana said...

அனைவரும் சந்தித்திருக்கின்றீர்கள் என அறியும்போது எனக்கும் மட்டற்ற சந்தோசமே.
இதுபோல குறைந்தது காலாண்டுக்கு ஒருமுறையாவது சந்திப்புக்கள் நடைபெற்றால் நன்றாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியமைக்கு நன்றி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியமைக்கு பாராட்டுக்கள்!

Unknown said...

பதிவர் சந்திப்பில் மிக்க மகிழ்ச்சியும் உங்களக்கு எனது நன்றிகளும் ,சார் அப்பறம் வீடியோ எப்ப சார் ரிலிஸ்

Paleo God said...

அருமையான சந்திப்பு சார்!

மிகச் சிறப்பான ஏற்பாடுகள். அன்பான மக்கள், மகிழ்ச்சியான தருணங்கள். உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றியும். :)))

உணவு உலகம் said...

@ஷர்புதீன்
@இம்சைஅரசன் பாபு.
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@MANO நாஞ்சில் மனோ
@"என் ராஜபாட்டை"- ராஜா
@பன்னிக்குட்டி ராம்சாமி
@ஜீ
@Kousalya
@! சிவகுமார் !
@நிரூபன்
@# கவிதை வீதி # சௌந்தர்
@சென்னை பித்தன்
@Starjan ( ஸ்டார்ஜன் )
@பெசொவி
@Jana
@tamil444news.blogspot.com
@நா.மணிவண்ணன்
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
அன்புள்ளங்கள் அனைவர் கருத்துக்களுக்கும் நன்றி. உங்கள் கருத்துக்கள் அடுத்த முறை பதிவர் சந்திப்பின்போது எங்களை வழிநடத்தும். இது ஒரு கூட்டு முயற்சி. என் தனிப்பட்ட முயற்சியென்று சொல்ல முடியாது.இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின்னணியில், சித்ரா,மனோ,கெளசல்யா,பாபு ஆகியோரின் உழைப்பும் உள்ளது.
அடுத்த முறை பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்த இந்த சந்திப்பு வழிகாட்டியது.
மீண்டும் ஒரு முறை நம் உறவுகளை அழைத்து இதனினும் சிறப்பாய் சந்திக்கலாம். அதில், இந்த நிகழ்விற்கு வர முடியாத நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

ப.கந்தசாமி said...

அன்புள்ள சங்கரலிங்கம், நன்றிகள் பல. என் போட்டோவை என்னால் அடையாளம் காண முடிந்தது. நன்றி. மற்றவர்களின் முகங்களையும் பெயர்களையும் இணைத்து நினைவில் கொள்ள முடியவில்லை.
குரூப் போட்டோவை பெயர்களுடன் பதிவிட்டால் நலமாக இருக்கும்.

சிநேகிதன் அக்பர் said...

பதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துகள் சார்.

நானும் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இன்னும் தீரவில்லை.

Unknown said...

நல்ல பகிர்வு!

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவர்கள் சந்திப்பை சிறப்பாக நடதியமைக்கு நன்றி உணவு சார்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

மதிய உணவுகள் சுவையோ சுவை.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தாமதமான கருத்துக்கு மன்னிக்கவும்.

ராஜி said...

என்னால் கலந்துக் கொள்ள முடியலைனு வருத்தமா இருக்கு.

cheena (சீனா) said...

அன்பின் சங்கரலிங்கம் - சந்திப்பினை வெற்றிகரமாக நடத்தியமைக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நிரூபன் said...

பதிவர் சந்திப்பு பற்றிய விரிவான பதிவினைத் தந்திருக்கிறீங்க. இன்னும் கொஞ்சம் படங்கள் சேர்த்திருக்கலாமே.

அப்புறமா அடுத்த வருட சந்திப்பிற்கு நானும் வரலாம் என தீர்மானித்துள்ளேன்.

நிரூபன் said...

சிபி, மனோ இரண்டு சுட்டிப் பசங்களையும் வைத்துக் கொண்டு,
அவர்களின் லூட்டி, குறும்புகளைச் சகித்துக் கொண்டு வெற்றிகரமாகச் சந்திப்பினை நடாத்திய உங்களுக்கு ஒரு சல்யூட் ஆப்பிசர்.

Unknown said...

நல்ல முயற்சி சார்,
இது போன்ற சந்திப்புகள் அடிகடி நடக்க வேண்டும், வருடம் இரண்டு அல்லது மூன்று முறை.

பதிவில் மட்டும் சந்தித்து நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் நேரில் சந்தித்து அது மட்டும் இல்லாமல் சமுதாய பணிகளுக்கு தங்கள் பங்களிப்பை அளிப்பது மேலும் பெருமை சேர்க்கும். நான் என்பது மறைந்து நாம் என்பது வரும்.

செல்வா said...

//கோமாளி செல்வாவின்- கொசுக்கடியும் சாரிமொக்கைகளும்,//

ஹி ஹி .. அங்க சொன்ன கதையை விரைவில் பதிவு செய்யப்போறேன் சார் :-)

GEETHA ACHAL said...

பதிவர்களின் சந்திப்பு ரொம்ப சந்தோசம் அளிக்கின்றது.....

காதர் அலி said...

பதிவர் சந்திப்பை நிறைவாக நடத்தியதற்கு நன்றி.செல்லும்பொழுது அனைவருக்கும் நெல்லை ஸ்பெசல் அல்வாவையும்,காளிமார்க் கடலை மிட்டாயயும் கொடுத்து நெல்லை மண்ணின் விருந்தோம்பலை அனைவருக்கும் அறிய வைத்ததற்கு நன்றி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

மிக்க மகிழ்ச்சி

துபாய் ராஜா said...

பதிவர்களின் நெல்லை சந்திப்பு ரொம்ப சந்தோசம் அளிக்கின்றது.

அடுத்த முறை நான் கலந்துக் கொள்ள முயற்ச்சிக்கிறேன்

சாந்தி மாரியப்பன் said...

சந்தோஷமான சந்திப்பு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சந்திப்பு சிறப்பாக நடந்திருப்பதறிந்து மகிழ்ச்சி.. நெல்லைப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.