இலவசம், இலவசம், இலவசம். இப்படி கொடுத்து கொடுத்து, எதற்கெடுத்தாலும் இலவசம் கேட்டும் ,கொடுத்தும் பழகிட்டோம்.
அப்படிக் கொடுக்கப்பட்ட ஒரு இலவசம்தான், நெல்லையில் பிரச்சினையாயிருச்சு! அப்படி என்ன பிரச்சனைன்னு கேட்கிறீங்களா? சொல்றேன், கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க!
கடந்த வாரத்தில் ஒரு நாள்,காலை பொழுது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களும், பயிற்சிக்கு வந்திருந்த உணவு ஆய்வாளர்களும் இணைந்து, மீன் கடைகளில் சுகாதாரம் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய புறப்பட்டோம். சமாதானபுரம் பகுதியில், சாக்கடை மேலொரு கடை சற்றும் சுகாதாரமின்றி செயல்படுவதாக புகார்களை பெற்று வந்தோம்!
முதலில் சென்று பார்த்த கடையினில், மண் தரையினில் மீன்கள். மனம் வீசும் கழிவு நீரோடையும் அருகில். எப்படி மனம் வந்ததோ, தேடிப்பிடித்து மீன் வாங்க அங்கும் ஒரு கூட்டம். அப்படியே அள்ளி எடுத்து, அருகே குவித்து வைத்து, கிருமி நாசம் செய்து, அழித்தோம்.
தினசரி மார்கெட் சென்றோம். வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.ஆமா, இதுக்கெல்லாம் இலவசமா இதை யார் கேட்டாக?#டவுட்டு. ஏனிப்படி என்றால், எடுத்து விடுகிறோம் என்றார். எங்கு செல்லும் என்று எங்களுக்கு தெரியாதா? நாங்கள் சென்ற பின்னர், நன்றாய் கழுவி, புதிய கருவாடாய் பிறப்பெடுக்கும். அங்கும், அந்த கருவாட்டிற்கு, பினாயில் அபிஷேகம்தான்.
மீன்கள் மீது ஏனிந்த கோபம்?
தண்ணீரில் வாழும் மீன்களை கொண்டு வந்து தரையினில் போட்டு விற்கும்போது, மீன்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகும். மீனில் உள்ள பாக்டீரியாக்கள் அதன் புரதத்தை சிதைத்து, ஹிஸ்டமின்களை(HISTAMINES) உருவாக்கும். இரத்தத்தில் ஹிஸ்டமின் அளவு அதிகரிப்பதால், உடலில் அரிப்பு,வயிற்றோட்டம், வாந்தி, வாயிற்று வலி வர வழி வகுக்கும்.
என்னதான் எங்கள் பார்வை எல்லாப் பொருள்களிலும் விழுந்தாலும், உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் உள்ளது. எந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க. எந்தப் புகார் என்றாலும், எடுத்து சொல்ல தயங்க வேண்டாம். உரிய இடங்களில், உரிய விதத்தில் தெரிவிப்பது மட்டுமே, இந்த சமுதாயத்திற்கு நாம் செய்யும் சிறந்த தொண்டாகும், மறவாதீர்!
டிஸ்கி-1: இதற்கு முந்திய பதிவிடும் போது, பின்னூட்டம் போட்ட சி.பி. சார், நான், அதிகாலையில் பதிவிடுவதாக புகார்(!) செய்ததால், இன்று அவர் விழித்தபின் இந்த பதிவு.
டிஸ்கி-2 : அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி.

62 comments:
குட் மானிங் ஆபிஸர்..
சரி, குட்மார்னிங் சொன்னதால், வடை உங்களுக்குதான்! வருகைக்கு நன்றி.
உண்மையில் பதறவைக்கிறது..
மக்களை நம்பிதானே அனைத்து வியாபாரமும்.. அவர்களுக்கு சரியானதை தந்தால் தானே இருவருக்குமான உறவுகள் மேம்படும்...
வியாபார நோக்கம் கொண்டவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்...
இது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்..
சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வாங்க! :))
//Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...
உண்மையில் பதறவைக்கிறது..
மக்களை நம்பிதானே அனைத்து வியாபாரமும்.. அவர்களுக்கு சரியானதை தந்தால் தானே இருவருக்குமான உறவுகள் மேம்படும்...
வியாபார நோக்கம் கொண்டவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்...
இது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்../
உங்கள் சமுதாய சிந்தனை சிலரையாவது சிந்திக்க வைக்கவேண்டும்.
//Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வாங்க! :))//
இதென்ன புது கலாட்டா!
///
அதிகாலையில் பதிவிடுவதாக புகார்(!) செய்ததால், இன்று அவர் விழித்தபின் இந்த பதிவு./////
அவர் என்னங்க காலை 10 மணிக்கா விழிக்கிறார்...
இன்நேரத்திற்னே இரண்டு பதிவு ஓடிக்கிட்டுருக்குங்க..
//வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.//
வணக்கம் சார் ..முதல் முதலாக உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன் ..
கருவாடு எப்படி பதபடுத்தினாலும் ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு பிறகு புழு வந்துவிடுகிறதே .?ஏன் ..ஆனாலும் அதை கவரில் அடைத்து வியாபாரம் பார்க்க தானே செய்கிறார்கள் ...நான் கருவாடு வாங்கும் முன் ரொம்ப டெஸ்ட் பன்னி தான் வாங்குவேன் ..முடிந்த அளவு தவிர்ப்பேன் ..(ஆனாலும் நெத்திலி கருவாடு பார்த்த கொஞ்சம் ஆசை வரும் ...மனோ சார் கேட்டுகொங்க ..)...
//Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...
///
அதிகாலையில் பதிவிடுவதாக புகார்(!) செய்ததால், இன்று அவர் விழித்தபின் இந்த பதிவு./////
அவர் என்னங்க காலை 10 மணிக்கா விழிக்கிறார்...
இன்நேரத்திற்னே இரண்டு பதிவு ஓடிக்கிட்டுருக்குங்க..//
எப்படியும் சி.பி.சார் வந்து பார்ப்பாருல்ல!
நம் நாட்டிலேயே விற்கப்படும் இத்தகைய உணவுப் பொருள்கள் போதாது என்று வெளிநாட்டிலிருந்து கெட்டுப் போன ’சீஸ்’ இறக்குமதி ஆகிறதாம்!என்ன செய்ய இவர்களையெல்லாம்!
//Blogger இம்சைஅரசன் பாபு.. said...
//வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.//
வணக்கம் சார் ..முதல் முதலாக உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன் ..
கருவாடு எப்படி பதபடுத்தினாலும் ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு பிறகு புழு வந்துவிடுகிறதே .?ஏன் ..ஆனாலும் அதை கவரில் அடைத்து வியாபாரம் பார்க்க தானே செய்கிறார்கள் ...நான் கருவாடு வாங்கும் முன் ரொம்ப டெஸ்ட் பன்னி தான் வாங்குவேன் ..முடிந்த அளவு தவிர்ப்பேன் ..(ஆனாலும் நெத்திலி கருவாடு பார்த்த கொஞ்சம் ஆசை வரும் ...மனோ சார் கேட்டுகொங்க ..)...//
எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க!
பாவம் மனோ, அவர் என்ன நெத்திலியா? இல்ல நெத்திலி பிரியரா?
//சென்னை பித்தன் said...
நம் நாட்டிலேயே விற்கப்படும் இத்தகைய உணவுப் பொருள்கள் போதாது என்று வெளிநாட்டிலிருந்து கெட்டுப் போன ’சீஸ்’ இறக்குமதி ஆகிறதாம்!என்ன செய்ய இவர்களையெல்லாம்!//
எடுத்து சொல்ல நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை? அதையும் பார்த்துடுவோம்.
அடப்பாவிகளா.. நீங்களுமா?
அது சரி.. பதிவு போடரது உங்க உரிமை.. எந்த டைம் வேணாலும் நீங்க போடலாம்.. கண்ட கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் கேட்காதீங்க.. ஹா ஹா ( நாய்னு நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன் )
i voted sir! i come later
>>அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி.
அந்தாளை முதல்ல வெட்டறேன்
//என்னதான் எங்கள் பார்வை எல்லாப் பொருள்களிலும் விழுந்தாலும், உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் உள்ளது. எந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க//
நல்ல பதிவு பாஸ்!
/சி.பி.செந்தில்குமார் said...
அடப்பாவிகளா.. நீங்களுமா?
அது சரி.. பதிவு போடரது உங்க உரிமை.. எந்த டைம் வேணாலும் நீங்க போடலாம்.. கண்ட கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் கேட்காதீங்க.. ஹா ஹா ( நாய்னு நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன் )//
சார் சார், டேக் இட் ஈஸி சார்.
//Blogger சி.பி.செந்தில்குமார் said...
>>அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி.
அந்தாளை முதல்ல வெட்டறேன்//
அவர் பேருக்கு முன்னாலதானே அருவா சாரி அன்பு மனோன்னு போட்டேன். நீங்க என்ன அருவாள தூக்குறீங்க!
//Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
i voted sir! i come later//
Come soon to safeguard Si.Bi.
//Blogger ஜீ... said...
//என்னதான் எங்கள் பார்வை எல்லாப் பொருள்களிலும் விழுந்தாலும், உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் உள்ளது. எந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க//
நல்ல பதிவு பாஸ்!//
நன்றி உங்களுக்கு நண்பரே!
அடடா....மீன்கள் ஆரோக்கியமான உணவு வகை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதிலும் இவ்வளவு இருக்கா?
//ரஹீம் கஸாலி said...
அடடா....மீன்கள் ஆரோக்கியமான உணவு வகை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதிலும் இவ்வளவு இருக்கா?//
இன்னும் இருக்கு.வருகைக்கு நன்றி.
உங்க பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா........
ரெண்டு அண்ணன்களான....சிபி மற்றும், அருவா அண்ணன் மனோ அவர்களையும் நீங்க பதிவுல இணைச்சது உங்க அன்பை காட்டுது......அதுவும் அண்ணன் அருவாவ இணைச்சது சூப்பரு !ஹிஹி!
1.thanks 2.iru pathivulaga jbmbavaankal
//எந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க.//
Yes sir..
அடப்பாவிகளா.. நீங்களுமா?
அது சரி.. பதிவு போடரது உங்க உரிமை.. எந்த டைம் வேணாலும் நீங்க போடலாம்.. கண்ட கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் கேட்காதீங்க.. ஹா ஹா ( நாய்னு நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன் )/// எவ்வவளவு அடிச்சாலும் தாங்கறார்யா?
மறுபடியும் ஒரு விழிப்புணர்வு பதிவிற்கு நன்றிகள்..
இது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்
Scientific explanations add extra value.. due to this everyone can able to understand what is happening indeed.. Thank you! :)
http://karadipommai.blogspot.com/
THANKS ELANGO, KARUN, SKETCH SHAHUL. Coment thro mobile. So english.
தல கரூர் பக்கம் கொஞ்சம் இதெல்லாம் பன்ன சொல்லுங்க
இலவசம், இலவசம், இலவசம். இப்படி கொடுத்து கொடுத்து, எதற்கெடுத்தாலும் இலவசம் கேட்டும் ,கொடுத்தும் பழகிட்டோம். //
ஆஹா...விழிப்புணர்வில் அரசியல் நையாண்டி.
ரசித்தேன்.
முதலில் சென்று பார்த்த கடையினில், மண் தரையினில் மீன்கள். மனம் வீசும் கழிவு நீரோடையும் அருகில். எப்படி மனம் வந்ததோ, தேடிப்பிடித்து மீன் வாங்க அங்கும் ஒரு கூட்டம். அப்படியே அள்ளி எடுத்து, அருகே குவித்து வைத்து, கிருமி நாசம் செய்து, அழித்தோம்.//
இது மாதிரி தான் நம்ம ஊரிலை கழிவு நீர் வாய்க்காலில் இருக்கும் கீரையினை, இலைகளை கொண்டு வந்து மார்க்கட்டில் போட்டும் வித்து மாட்டியிருக்காங்க..
விழிப்புணர்வு பதிவு அருமை சகோ.
இதற்கு முந்திய பதிவிடும் போது, பின்னூட்டம் போட்ட சி.பி. சார், நான், அதிகாலையில் பதிவிடுவதாக புகார்(!) செய்ததால், இன்று அவர் விழித்தபின் இந்த பதிவு.//
அவர் தான் இன்னமும் விழிக்கவே இல்லையே..அவ்...அவ்..
தினசரி மார்கெட் சென்றோம். வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.ஆ//
அதிர்ச்சியாக இருக்கிறது இப்படியெல்லாமா பண்றானுக
உங்கள் புனித பணி தொடரட்டும்
மீன் கடை வேட்டை அருமை..கசாப்பு கடையில ஈ மொய்க்க விக்கிறாங்க..அதை எதுவும் பண்ண முடியாதா சார்...பெரிய ஆடே செத்து கிடக்கு..உனக்கு ஈதான் பிரச்சனையான்னு கேட்க கூடாது-;))
//Blogger Lali said...
Scientific explanations add extra value.. due to this everyone can able to understand what is happening indeed.. Thank you! :)//
Thanks to the efforts of Scientists.
//Blogger Speed Master said...
தல கரூர் பக்கம் கொஞ்சம் இதெல்லாம் பன்ன சொல்லுங்க//
சொல்லீட்டா போச்சு!
kalakuringa sir hotella raid pannamatingala?
இங்கு பகிர்ந்திருக்கும் இலவசம் பற்றிய செய்திகள் வருங்காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்துகிறது . பகிர்ந்தமைக்கு நன்றி
நான் நெட் கனேக்ஷனில் இல்லாத நேரம் பார்த்து பதிவை போட்டமைக்கு வன்மையாக கண்டிக்கிறேன்....
//என்னதான் எங்கள் பார்வை எல்லாப் பொருள்களிலும் விழுந்தாலும், உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் உள்ளது//
இது நூற்றில் ஒரு வார்த்தை...
//டிஸ்கி-2 : அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி. ///
இது அநியாயம், அக்கிரமம், நானொரு பச்சை பிள்ளைங்கோ...அவ்வ்வ்வ்...
//கவிதை வீதி # சௌந்தர் said...
குட் மானிங் ஆபிஸர்..//
அடடடடா ராத்திரியா இருந்தாலும் இதுதான்னு சொல்லாம விட்டுட்டீறீய்யா...
//இம்சைஅரசன் பாபு.. said...
//வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்.//
வணக்கம் சார் ..முதல் முதலாக உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன் ..
கருவாடு எப்படி பதபடுத்தினாலும் ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு பிறகு புழு வந்துவிடுகிறதே .?ஏன் ..ஆனாலும் அதை கவரில் அடைத்து வியாபாரம் பார்க்க தானே செய்கிறார்கள் ...நான் கருவாடு வாங்கும் முன் ரொம்ப டெஸ்ட் பன்னி தான் வாங்குவேன் ..முடிந்த அளவு தவிர்ப்பேன் ..(ஆனாலும் நெத்திலி கருவாடு பார்த்த கொஞ்சம் ஆசை வரும் ...மனோ சார் கேட்டுகொங்க ..)...//
எலேய் தேரூர்'காரா,எதுக்குலேய் என்னைய கோர்த்து விட்டுட்டு போற....ஹி ஹி ஹி ஹி நம்ம ஊரு பயதேன்....
//பாவம் மனோ, அவர் என்ன நெத்திலியா? இல்ல நெத்திலி பிரியரா?//
உங்களுக்கெல்லாம், தனி தனி பதிவு எழுதி வருத்தாதான் சரிபடுவீங்க அவ்வ்வ்வ்வ்வ்....
//சி.பி.செந்தில்குமார் said...
அடப்பாவிகளா.. நீங்களுமா?
அது சரி.. பதிவு போடரது உங்க உரிமை.. எந்த டைம் வேணாலும் நீங்க போடலாம்.. கண்ட கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் கேட்காதீங்க.. ஹா ஹா ( நாய்னு நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன் )///
இன்னைக்குதான்ய்யா இந்த நாதாரி உண்மைய சொல்லி இருக்கான் ஹா ஹா ஹா ஹா மக்கா நீ நாயாலேய் ஹே ஹே ஹே ஹே ஹே லொள் லொள் லொள்...
mano giiiiiiiiiiii
you and CP senthil kumar talking in own language, we are not able to follow.sorry.
யோவ் சி.பி & மனோ உங்க பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.......கொஞ்சம் சமுதாயத்தை பார்ப்போம்...
அப்படி பார்த்தேங்கனா உங்களுக்கு நல்ல லெக் பீஸ் உள்ள சிக்கன் பிரியாணி வாங்கி தரென்......
அன்பு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்: என் வலைப் பதிவினை ப்ளாக்கரில் இருந்து டாட்காம் ஆக மாற்றி இருப்பதால், என் வலையினைப் பாலோ பண்ணும், உங்களது டாஷ் போர்ட்டின் Google Reader இல் என் வலைப் பதிவின் Updates இனைக் காண முடியாது, ஆகவே நண்பர்கள் அனைவரும், சிரமத்தினைப் பாராது, மீண்டும் என் வலையினை பாலோ பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன். இடையூறுகளுக்கு- மன்னிக்கவும்,
http://www.thamilnattu.com/
வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.
I am very late...Sorry sir...Read the article...I am a vegetarian...Karuvaadu la kooda oozhalaa? Athuvum phenyl pottu sutthamaa?
Super...Plz keep up your good work...
Thank You Sir
//வைத்திருந்த கருவாட்டில், வகை வகையாய் புழுக்கள்//
நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது.
//அவரவர் பங்கிற்கு சி.பி.சாரை போட்டு வாங்கிட்டாங்க, இன்னும் உங்க பங்கை செய்யவில்லையே என்று என் மெயிலில் எச்சரிக்கை :)) விடுத்த அருவா சாரி அன்பு மனோவிற்கு நன்றி. //
நீங்க வேற மனோ நேத்து செஞ்ச காரியத்த நெனச்சா சிபியே மேல்னு தோணுது (ஹே..ஹே..)
எந்த பொருளானாலும், எப்படி இருக்கிறதென்பதை எல்லா நிலையிலும் பார்த்து வாங்குங்க...
Thats it. :)
நெல்லை பெற்ற பேறு எல்லா ஊரும் பெறனும் வேண்டிக்கிறேன்..நல்லது தொடருங்கள்..
நெல்லை பெற்ற பேறு எல்லா ஊரும் பெறனும் வேண்டிக்கிறேன்..நல்லது தொடருங்கள்..
நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்.
வந்து வாழ்த்திய நெஞ்சங்களின் வருகைக்கு நன்றி!
தங்களது இடுகையில் இந்த சமுதாய்த்திற்கு ஒரு செய்தி காத்துக் கொண்டு இருக்கிறது,உண்மையிலேயே!!
Post a Comment