இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 23 May, 2011

நடை மேடைகள் நடப்பதற்கு அல்ல!

                                 பஸ் என்றால் படிக்கட்டில் பயணமும் , ரயில் என்றால், வாசல்  அருகே வந்தமர்வதும் நம் வாடிக்கை. இப்படி எதிலும் எங்கும் வித்தியாசங்களையே விரும்பும் நாம், நடைமேடையில், நடப்பதில்லை. ஏன், அங்குதான் கடை இருக்கும், 'கல்லா' இருக்கும், கக்கா போவாங்க, நம் வாகனங்கள் நமக்காக அங்கே காத்திருக்கும்.
இப்படி நாம் அன்றாடம் செய்யும் சில காரியங்கள், எல்லைகள்   தாண்டும்போது, இன்னல்கள் மட்டுமே தந்திடும். எடுத்து சொன்னோம், எச்சரிக்கை விடுத்தோம், இருந்தும் பயனில்லை. இறங்கி விட்டோம், நடவடிக்கைகளில். 
நெல்லையில், ஏற்கனவே இருந்த பேருந்து நிலையம் இட நெருக்கடியால் தவித்தபோது, மாற்று இடமாய் உருவானது வேய்ந்தான்குளம் பேருந்து நிலையம். விமான நிலையம் போல், ஒரு பேருந்து நிலையம் என்று வந்தன, அன்றைய காலகட்டத்தில் விமரிசனங்கள்.  
                             காலம் செல்ல செல்ல, கடும் ஆக்கிரமிப்பின் பிடிகளில் சிக்கியது அந்த பேருந்து நிலையம். காவல் துறை எச்சரிக்கை, மாநகராட்சியின் மாசற்ற நடவடிக்கைகளால் எல்லாம் திருந்துவதாய் இல்லை நம் மக்கள். அதற்க்கு சாட்சிகள், இங்குள்ள காட்சிகள்: 
வீடல்ல வேய்ந்தான் குளம் பேருந்துநிலைய நடைமேடை.
பயணிகள் பயனடைய, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (R.O.WATER) குழாய்களில் குடிப்பதற்கு வழங்கப்பட்டன. குடித்து, மக்கள் பயன்பெறுவதை விட, அங்குள்ள கடைகளில் பயன்படுத்த பிடித்து செல்லப்பட்டவையே அதிகம். சிறை பிடிக்கப்பட்டன, நல்லிகள். ஆம், அவற்றை சுற்றி கூண்டுகள் அமைத்து, குடிப்பதற்கு பிடித்திட, தம்ளர்கள்  தொங்க விடப்பட்டன. இப்போது கடைக்காரர்கள் தொல்லை குறைந்துவிட்டது.
                                      நம் மக்கள், அந்த நீரில், பல் துலக்குவது முதல், முகச்சவரம் செய்வது வரை 'சிறப்பாக' பயன்படுத்துகின்றனர்.
                                 அடுத்து காண்பது, அவசர கால அவலம். பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு நடை மேடையிலும், கட்டணக்கழிப்பறை இருந்தாலும், கட்டாயம் நாங்கள் மரத்தடிகளை மட்டுமே பயன்படுத்துவோம் என்று சொல்லும் மனிதர்கள் சிலர்.
வாகனங்களை நிறுத்தி வைக்க வாகன காப்பகம், தனியார் வசமிருந்தால், தறி கெட்ட வகையில்  கட்டணம் வசூல் செய்கின்றனர் என்ற புகார் எழுந்ததால், மாநகராட்சி வசம் வைக்கப்பட்டிருந்தும், வாசலிலும், வழிப்பாதைகளிலும், நடை மேடைகளிலும் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு  வாகனங்கள் அணி வகுப்பு. 
அள்ளி எடுத்து வந்து அத்தனையும் ஒப்படைத்தோம் காவல் நிலையத்தில். அதிகமில்லை 35 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 17 மிதி வண்டிகள். இவை  போதாதென்று, கடைக்காரர்கள் தம் பங்கிற்கு கடைகளின் முன் நடைபாதையில் ஆக்கிரமித்து வைத்திருந்த பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. 

அன்று தொடங்கிய ஆப்பரேசன், அடுத்த நாளும் தொடர்ந்தது, சந்திப்பு பேருந்து நிலையத்தில். அதிகாலை ஆறு மணிக்கே அதிரடியாய் ஆரம்பித்த ஆக்கிரமிப்பு அகற்றம், பொது மக்கள் நடமாட இடம் கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டது. 
மற்ற மொழி பத்திரிக்கைகளையும் விடுவதாயில்லங்க.
டிஸ்கி :காலையில் எடுத்து வந்தால், மாலையிலேயே தொடரும் மனித மனங்களின் சபலங்கள். மன மாற்றங்கள் வந்தால், மகிழ்வுறும் மனித சமுதாயமே!  
Follow FOODNELLAI on Twitter

34 comments:

Unknown said...

தல நச் பதிவு...........
தொடரட்டும் உம் பணி.....மாறட்டும் மக்களின் மனம்...!

சி.பி.செந்தில்குமார் said...

காலை 5.50 ஆனா.. அண்ணன் பதிவு போட்டுடறாரு.. அண்ணி கிட்டே சொல்லி கண்டிக்க சொல்லனும்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ada.. இப்பதான் பார்த்தேன். 5.10க்கே பதிவா? குற்றம் நடந்தது என்ன? ஹி ஹி

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said...
தல நச் பதிவு...........
தொடரட்டும் உம் பணி.....மாறட்டும் மக்களின் மனம்...!//
நன்றி. சிபி எப்போ மாறுவார்?

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
காலை 5.50 ஆனா.. அண்ணன் பதிவு போட்டுடறாரு.. அண்ணி கிட்டே சொல்லி கண்டிக்க சொல்லனும்.. ஹி ஹி//
போட்டு குடுக்கறதிலே குறியா இருங்க.

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
ada.. இப்பதான் பார்த்தேன். 5.10க்கே பதிவா? குற்றம் நடந்தது என்ன? ஹி ஹி//
நீங்க உங்கள் பின்னூட்டத்திற்கு நான் போடும் பதில் படிப்பதில்லையா? அது, ஆட்டோ பப்ளிஷ் மோடு.

எல் கே said...

எல்லா ஊரிலும் இதுதான் நிலை. சென்னை போன்று ஒரு சில இடங்களில் மட்டும் இதற்க்கு வாய்ப்பில்லை . சேலத்திலும், கோவையிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகம்

Unknown said...

அதிரடி செய்திகள் உணவு உலகத்தில்!!!ஹிஹி
எத்தினை பேப்பர் கட்டுகளை மனுசர் அப்லோட் பண்ணி இருக்கார்னு !!

Unknown said...

அவ அஞ்சு மணிக்கு பதிவு போட்டால் சி பி ஏன் முளிச்சிருக்குதாம்??
குற்றம் என்ன???
தள்ளிட்டு போன கில்மா மேட்டர் என்னாச்சு??
மனோவிடம் தான் கேட்கணும்~!!

சக்தி கல்வி மையம் said...

நீங்க எங்க ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடுங்க ....

சக்தி கல்வி மையம் said...

ஏலே சிபி மாப்ள பதிவ படிச்சுட்டு கமென்ட் போடு.... அவ்...........

உணவு உலகம் said...

//எல் கே said...
எல்லா ஊரிலும் இதுதான் நிலை. சென்னை போன்று ஒரு சில இடங்களில் மட்டும் இதற்க்கு வாய்ப்பில்லை . சேலத்திலும், கோவையிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகம்//
முடிந்தவரை விழிப்புணர்வை ஊட்டுவோம்.

உணவு உலகம் said...

//மைந்தன் சிவா said...
அதிரடி செய்திகள் உணவு உலகத்தில்!!!ஹிஹி
எத்தினை பேப்பர் கட்டுகளை மனுசர் அப்லோட் பண்ணி இருக்கார்னு !!//
இன்னும் இருக்கு,சிவா.

Chitra said...

டிஸ்கி :காலையில் எடுத்து வந்தால், மாலையிலேயே தொடரும் மனித மனங்களின் சபலங்கள். மன மாற்றங்கள் வந்தால், மகிழ்வுறும் மனித சமுதாயமே!


..... இதை விட தெளிவாக சொல்ல முடியாது.

டிஸ்கி: நான் ஊருக்கு வாரேன் என்று தெரிந்ததும் - சிங்கார நெல்லை ஆக்கத் திட்டம் என்று அறிவித்தார்களே..... அதில் முதல் கட்ட நடவடிக்கை இதுதானா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

உணவு உலகம் said...

//Blogger மைந்தன் சிவா said...
அவ அஞ்சு மணிக்கு பதிவு போட்டால் சி பி ஏன் முளிச்சிருக்குதாம்??
குற்றம் என்ன???
தள்ளிட்டு போன கில்மா மேட்டர் என்னாச்சு??
மனோவிடம் தான் கேட்கணும்~//
மனோ புது பதிவு ஒன்று போட்டுட்டு வருவார்.சிபி போல!!! அல்ல.

உணவு உலகம் said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
நீங்க எங்க ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடுங்க ....//
நெல்லைக்கு வாங்க,சேர்ந்து கலக்கலாம்.

உணவு உலகம் said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
ஏலே சிபி மாப்ள பதிவ படிச்சுட்டு கமென்ட் போடு.... அவ்...........//
சிபி என்னைக்கு பதிவ படிச்சாரு! படம் மட்டும்தான்.

உணவு உலகம் said...

//Chitra said...
டிஸ்கி :காலையில் எடுத்து வந்தால், மாலையிலேயே தொடரும் மனித மனங்களின் சபலங்கள். மன மாற்றங்கள் வந்தால், மகிழ்வுறும் மனித சமுதாயமே!
..... இதை விட தெளிவாக சொல்ல முடியாது.//
சொல்றத சொல்லீட்டே இருப்போம்.

உணவு உலகம் said...

@சித்ரா:
டிஸ்கி: நான் ஊருக்கு வாரேன் என்று தெரிந்ததும் - சிங்கார நெல்லை ஆக்கத் திட்டம் என்று அறிவித்தார்களே..... அதில் முதல் கட்ட நடவடிக்கை இதுதானா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....//
வருவது யார்? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா வாங்க,வாங்க! வந்து பார்த்து,உங்க ஆலோசனைகளையும் சொல்லுங்க.

இராஜராஜேஸ்வரி said...

நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கோவையில் நாங்கள் ஹௌஸ் அரஸ்ட். வீட்டின் முன் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களால் நடந்து கூட வீட்டிற்குள் நுழைய முடியாது.எப்படி கார், பைக் எடுத்து அவசரத்திற்கு, பள்ளி, வங்கி செல்வது??

நோ பார்க்கிங் போர்டுக்கெல்லாம் மரியாதையே கிடையாது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கிடீங்க ஆப்பீசர்...........!

பொன் மாலை பொழுது said...

எந்த ஆட்சி வந்தாலும் இந்த ஆக்கிரமிப்பு கொடுமை என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. நமது மக்களின் மனோ பாவமும் இதற்கு பெரிதும் காரணம். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறவேண்டும்.இல்லையேல் மீண்டும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்கதைதான். தங்களின் பணி தொடர் வாழ்துக்கள்.

சென்னை பித்தன் said...

எங்கு இல்லை இந்த அவல நிலை? ஒவ்வொரு ஊரிலும் ஒரு சங்கரலிங்கம் வேண்டும்!
நன்று!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இப்படியெல்லாமா நடக்குது? ஜனங்கள் இன்னும் நிறைய விஷயத்துல மாறவேண்டி இருக்கு!!

MANO நாஞ்சில் மனோ said...

ஹேய் நெல்லை பதிவர் சந்திப்புக்கு முன்னரே ஆபீசர் நெல்லையில் அதிரடி பண்ணி கிளீன் பண்ண வச்சுட்டாரு...

MANO நாஞ்சில் மனோ said...

மக்கள் மனதிலும் விழிப்புணர்வு வரவேண்டும் இல்லையா...?

MANO நாஞ்சில் மனோ said...

அதிரடி புதிரடி பதிவு ஆபீசர்...!!!

Lali said...

அனைத்து இடங்களிலும் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றங்கள் வருமா லிங்கம் சார்?
ஒரு சாதாரண மனுஷியின் ஏக்கங்கள்... :(
http://karadipommai.blogspot.com/

Sivakumar said...

நீங்க கொஞ்ச நாள் சென்னை தி.நகர் பக்கம் வேலைக்கு வந்தா புண்ணியமா போகும் சாமி!! அசதில ரெண்டு செகண்ட் சும்மா நின்னா கூட சட்டை பாக்கெட்ல பத்து பேனாவை சொருகி நம்மளை நடமாடும் கடையா மாத்திடுவாங்க.

Speed Master said...

சார் தயவு செய்து கரூருக்கு ஒரு மாதம் வேலைக்கு வரவும்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ஒரு காதல் கதை
http://speedsays.blogspot.com/2011/05/love-story.html

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! சமூக பதிவு... அருமையான கட்டுரை.


எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

Jana said...

நடைபாதை ஆக்கிரமிப்பு என்பது தெற்காசிய நாடுகள் அனைத்திலும் பாரியதொரு பிரச்சினையாகத்தான் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அரசுகள் அவற்றிற்கான தீர்வுகளையும் செய்யவேண்டியது கடப்பாடு.
வழமைபோல தேவையானதொரு பதிவு. நன்றிகள்.

செல்வா said...

நடை பாதை ஆக்கிரமிப்பு எல்லா ஊர்லயுமே இருக்குங்க! ஆனா இதுக்கு நாமளும் கொஞ்சம் கவனம் செலுத்தனும் .. என்னன்னா நடைபாதைல கடை போட்டு விக்கிற பொருட்களை வாங்காம விடுறது கூட ஒரு வகைல அதுக்கு எதிர்ப்பான நடவடிக்கைதான் :-)

நிரூபன் said...

நான் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன் சகோ. பயனுள்ள பதிவு. உங்களின் சேவை! தொடர்ந்தும் நெல்லை மாவட்டத்திற்குத் தேவை.

விழிப்புணர்வுப் பதிவு, கவிதை கலந்த மொழி நடையில் அருமையாக வந்திருக்கிறது.
நடை பாதை வியாபாரம் தான் தொற்று நோய்கள் பரவுவதற்கு வழியாக அமைகிறது. நாம் அனைவரும் இந்த வியாபாரங்களைப் புறக்கணிப்பதன் மூலம் தான் நடை பாதைத் துப்பரவினைப் பேண முடியும்.