இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 9 May, 2011

ஒரு பயணம், பக்தி , பாராட்டு.


  ஒரு பயணம்:கத்திரி வெயில் சுட்டெரிக்க தொடங்கிருச்சு ! நெல்லையில் வெயில் நூற்றி நாலை நெருங்கிகிருச்சு.  நண்பர்கள் குழாம் நாலு நாளு, குளு குளு கொடைக்கானல், ஊட்டி என்று  நல்லா சுத்திட்டு வரலாமென்ற நச்சரிப்பு.  நமக்கோ, நாளும் ஒரு ரெய்டு என்று துலங்குது  காலைப்  பொழுது. 

                                      நண்பர்கள் கோரிக்கை தள்ளவும் மனமில்லை. ஒரு நாளின் மாலைப்  பொழுது.  உருவானது ஒரு கூட்டணி.ஆம், நண்பர் ஜோசப், செய்யது. இரு வேறு துறைகளில் கொடி கட்டி பறக்கும் நண்பர்கள்.  ஊட்டி கொடைக்கானல் ஊரு ரொம்ப தூரமப்பா- இது நான். நாளை காலை நானிங்கு இருக்க வேண்டும் முடியுமா சொல்லுங்க?  இப்படி என் கண்டிஷன்கள் எடுத்து வைத்தாலும், விட்டுச்செல்ல மனமில்லை அவர்களுக்கு.
தங்கிய அறையின் முன்புற தோட்டம்.
                                    அகஸ்தியர் அருவிக்கு மேலே, ஆனந்தமாய் தங்கிட கெஸ்ட் ஹவுஸ் உண்டே, போகலாமா?  நண்பர் ஜோசப் பத்திரிக்கை  துறை நட்பை பயன்படுத்தி, பாரெஸ்ட் ஏரியா செல்ல பர்மிசன் வாங்கினார். தங்கும் வசதி என் நட்பின் உபயம். செல்லும் வழியில், என் சொந்த ஊர் அம்பாசமுத்திரம் சென்று என் அன்னையை தரிசித்துவிட்டு, தங்கும் அறையினை அடைந்த நேரம், மாலை ஆறு  மணி. என்ன ஒரு அற்புதமான இயற்கையின் திருவிளையாடல். 
                                       நெல்லையில் சுட்டெரிக்கும் வெயில். இங்கோ மாலை ஆறு மணிக்கே, குளு குளு  தென்றல் கும்மியடித்தது. அங்கிருந்த வியூ பாய்ன்ட்டில் அமர அழகாய் சிமெண்ட் பெஞ்சுகள்.
வியூ பாய்ண்ட். 

நண்பர்கள் பட்டாளம்.
பொதிகைமலைத் தென்றல் தந்த  மெல்லிய வருடல, அப்பப்பா, சொர்க்கம் இங்கே இங்கே என்றது. சரியாய் அடுத்த ஒரு மணி நேரத்தில், வந்து சேர்ந்தது அடுத்த நண்பர்கள் பட்டாளம். அரட்டை,அரட்டை என்று நேரம் சென்றது தெரியாமல்  அரட்டை. இரவு பத்து மணிக்குமேல், அகஸ்தியர் அருவியில் ஆனந்த குளியல்.

இரவில் அகஸ்தியர் அருவி.
அந்த அதிகாலை பொழுதில், அருவிக்கரையில், மிளாக்கள் மற்றும் காட்டு பன்றிகளின் நடமாட்டம். தோட்டாவால் சுட்டால், துரத்திடுவார் ஜெயிலுக்குள் என்பதால்,  காமிராவில் மட்டும் சுட்டு வந்தோம், அவற்றை.

காட்டு பன்றிகள்.
 
குழந்தைக்கு பேன் பார்க்கும் தாய். 
 விடிகாலை மூன்று மணிக்கு அறைக்கு திரும்பினால், அன்று   எங்களுக்கு
 பத்து மணிக்குத்தான் பொழுது புலர்ந்தது. மீண்டும் அருவியில் ஒரு ஆனந்த குளியல். 
பகலில் அகஸ்தியர் அருவி.

 இந்த  அருவிக்கு மேல்பகுதியில் கல்யாண தீர்த்தம் அருவி உள்ளது. 
                                           கல்யாண  தீர்த்த அருவியின்   நீரோட்டம்.
அதற்கும் மேலே உள்ள பாறைகளின் மேல் உள்ளது, இந்த மண்டபம். அங்கு பதித்துள்ள கல்லில், வ.வே.சு. அய்யர் ஞாபகார்த்த மண்டபம் எனவும், சுதந்திர போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட்டு 08 .08 .1957   இல்   அப்போதைய முதலமைச்சர் திரு.காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என பொறிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் நடமாட்டம் குறைவு என்பதால், இன்னும் அந்த மண்டபம் அப்படியே இருக்கிறது.
மலைகளின் மேல் மணி மண்டபம்.
 
கல்யாண தீர்த்த அருவியின் மேற்புற பாறைகள்.

தொலைவில் குளம் போல பாபநாசம் தலையணை.

பாபநாசம் சிவன் கோயில்.

சிங்க வால் குரங்கு.
மரங்களில்மனிதமூதாதையர்கள். 
பக்தி:இதோ இங்கே நீங்கள் பார்ப்பது அகஸ்தியர் அருவிக்கரையில் உள்ள அகஸ்தியர் கோயில். 

அகஸ்தியர் கோயில்
சிவபெருமானுக்கு நடைபெற்ற திருமணத்தை காண பூமியின் வட பகுதியில்  ஆன்றோர் பெரியோர் என அனைவரும் கூடி நின்றதால், பூமி வடபகுதி தாழ்ந்து விட்டதாம். அப்போது இந்த அகஸ்திய மாமுனியை இறைவன் பொதிகை மலை சென்று பூமியின் பாரத்தை சமன்படுத்த பணித்தாராம். அப்போது இங்கு வந்த அகஸ்திய மாமுனியும், பொதிகை மலையில் அமர்ந்து தவம் செய்து சமன் செய்தாராம். அதுமுதல், இயற்கை எழில் சூழ்ந்த பொதிகை மலையில், சித்தர்கள் பலரும் சிறப்புடன் வாழ்வதாக செய்தியுமுண்டு. சமீபத்தில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மழை வேண்டி, கடல் மட்டத்திலிருந்து 6200 அடி உயரத்திலுள்ள பொதிகை மலைக்கு,  பக்தர்கள் கேரளம் வழியாக யாத்திரையாக சென்று , அங்குள்ள அகஸ்தியர் சிலைக்கு அபிஷேகம் செய்து வந்துள்ளனர். 
பாராட்டு: தொடர் ஆய்வுகள், தொடர்ந்து வந்த மிரட்டல்கள், எல்லையில்லா தொல்லைகள் என்றிருந்த ஏப்ரல் மாதம், சென்று வந்த பயணத்தினால், மனம் லேசாகிப் போனது,மே மாதத்தில். 
அன்று மாலையில், திருநெல்வேலி நகர் சுழற்கழகத்தில், மாவட்ட ஆளுநர் வருகையின்போது, என்னை அழைத்துப் பாராட்டி   சான்றிதழ் அளித்தனர்,  .பகிர்ந்து கொள்கிறேன் உங்களிடம். போலியோ ஒழிப்பு உள்ளிட்ட பல புனிதப்  பணிகள் செய்து வரும் சுழற்கழகம், என்னை  அழைத்து வாழ்த்தியதும், என் மீது வைத்துள்ள நம்பிக்கைகளும்,  என் பொறுப்புக்களை மேலும் உணரச் செய்தது. 
திருநெல்வேலி டவுண் சுழற்கழக விருது.                                                        சுழற்கழக சான்றிதழ்.

டிஸ்கி-1 : இன்று ஒரு பல்சுவை பதிவு-ஒரு பயணம், பக்தி,பாராட்டு. 
டிஸ்கி-2 :பதிவுலகில் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் உங்களுக்கும் இந்த பாராட்டில்  பங்குண்டு.
Follow FOODNELLAI on Twitter

46 comments:

விக்கி உலகம் said...

dating மாதிரின்னு சொல்லுங்க ஹிஹி!

உங்க பணி தொடர வாழ்த்துக்கள்!

FOOD said...

ஜாக்கிரதை ஜாக்கிரதை. பதிவு அப்ப்டி போட்டுட்டு பின்னூட்டம் இப்படியா . . . ?

Chitra said...

Congratulations!!! Super !

Chitra said...

நெல்லை மணம் கமழும் பதிவு.... குற்றாலம் போகும் ஆசையை தூண்டி விட்டாச்சு....

FOOD said...

//Blogger Chitra said...

Congratulations!!! Super !//
Thanks Chitra.

FOOD said...

//Chitra said...
நெல்லை மணம் கமழும் பதிவு.... குற்றாலம் போகும் ஆசையை தூண்டி விட்டாச்சு....//
எதோ நம்மால ஆனது.

இராஜராஜேஸ்வரி said...

அரட்டை,அரட்டை என்று நேரம் சென்றது தெரியாமல் அரட்டை. //
நாங்களும் குடும்பத்தோடு சென்று பாட்டுக்குப் பாட்டு அரட்டை என்று நிகழ்த்திய் மலரும் நினைவுகள் மலர்ந்தன.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

FOOD said...

Blogger இராஜராஜேஸ்வரி said...
அரட்டை,அரட்டை என்று நேரம் சென்றது தெரியாமல் அரட்டை. //
நாங்களும் குடும்பத்தோடு சென்று பாட்டுக்குப் பாட்டு அரட்டை என்று நிகழ்த்திய் மலரும் நினைவுகள் மலர்ந்தன.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி, சகோ.

asiya omar said...

வாழ்த்துக்கள்,மிக நல்ல பகிர்வு,அகஸ்தியர் அருவிக்கு மேல் பானதீர்த்தம் அருவி தானே!நாங்கள் சென்று இருக்கிறோம்,படகில் போய் மலை மீதி சிறிது தூரம் ஏறி பின் நடக்க வேண்டும்,நீங்கள் கல்யாண்தீர்த்தம்னு சொல்லிருக்கீங்க,அது வேறு அருவியா?அல்லது பானதீர்த்தம் மறுபெயரா?

இம்சைஅரசன் பாபு.. said...

தொடரட்டும் ..உங்கள் பணி ..

# கவிதை வீதி # சௌந்தர் said...

தங்களிடம் ஒரு வித்தியாசமான பதிவு..

அரிய விஷயங்களை அறிந்துக் கொண்டேன்..

தொடரட்டும் தங்கள் அனுபவங்கள்...

FOOD said...

@asiyaomar: This kalyana theertham is different from vaanatheertham. Tell about it in another post

FOOD said...

@imsai arasan babu, kavithai veethi soundar // thanks

ராம்ஜி_யாஹூ said...

super, thanks for pictures sharing

நிரூபன் said...

வாக்குகளோடு இப்போது வருகிறேன், பின்னூட்டங்களோடு பின்னாடி வாறேன்!

மொக்கராசா said...

///இரவு பத்து மணிக்குமேல், அகஸ்தியர் அருவியில் ஆனந்த குளியல்.மீண்டும் அருவியில் ஒரு ஆனந்த குளியல்

ரெம்ப நாளைக்கு அப்பறம் நல்லா குளிச்சேன்னு சொல்லுங்க.....

சென்னை பித்தன் said...

இன்னும் பல புதிய உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன்.
குளு குளு பதிவு!
நன்றி சங்கரலிங்கம்!
(வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே பதிவுகள் இல்லை,பின்னூட்டங்களும் இல்லை !மன்னிக்கவும்,)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதலில் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார்! அப்புறம் உங்க ட்ரிப்.... ஆ.... எனக்கும் போகணும் போல இருக்கு! போட்டோக்களப் பார்க்கும் போது அவ்வளவு ஆசையா இருக்கு!!

MANO நாஞ்சில் மனோ said...

இப்படிபட்ட பயணங்கள் மனசை லேசாக்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
dating மாதிரின்னு சொல்லுங்க ஹிஹி!//

எலேய் நீ உருப்படவே மாட்டே....

சமுத்ரா said...

படங்கள் அருமை

MANO நாஞ்சில் மனோ said...

ஏற்க்கனவே நானும் பார்த்த இடம்தான், இருந்தாலும் மறுபடியும் ஒரு முறை போய் வந்த உணர்வு புதுமையாய் உங்கள் பதிவை படித்த பின்பு....

MANO நாஞ்சில் மனோ said...

நீங்கள் வாங்கிய விருதுகளுக்கு வாழ்த்துகள் ஆபீசர்....

MANO நாஞ்சில் மனோ said...

படங்களும் சூப்பர் ஆபீசர்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா அருமையான பயணம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படங்கள் மிக அருமை

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சந்தோசம் வாழ்க வாழ்க

FOOD said...

@ராம்ஜி_யாஹூ
நிரூபன்
மொக்கராசா
சென்னை பித்தன்
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப்
மாத்தியோசி
MANO நாஞ்சில் மனோ
சமுத்ரா
ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி நன்றி நன்றி நன்றி!

vijay said...

Vaazhthukal.

ஜீ... said...

Nice post, pictures too! Congratz!!
:-)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நாமும் ஒரு டூர் போன மாதிரியே ஒரு பீலிங் ... அசத்தல்..

FOOD said...

!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி கருன். வலைச்சரம் -வாழ்த்துக்கள்.

இளங்கோ said...

பயணம் பக்தி என பகிர்வுகள் அருமைங்க.
பாராட்டுக்கு எனது வாழ்த்துக்கள், இன்னும் நிறைய விருதுகளைப் பெற வேண்டும் நீங்கள்.

FOOD said...

நன்றி நண்ப்ரே!

டக்கால்டி said...

Super sir...A different post from you...

டக்கால்டி said...

Thanks for sharing

FOOD said...

Thanks for your visit & encouragement

கக்கு - மாணிக்கம் said...

மனம் கவரும் அருமையான இடங்கள். செல்லவேண்டும்போல ஒரு உணர்வு.
உங்களுக்கு பாராட்டும் சுழல் கழக விருதும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

சிராஜ் said...

nice

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. உங்க பிளாக் டைட்டில் க்ளிக் பண்ணுனா தமிழ் மணம் ஓட்டுப்பட்டை வரனும். ஆனா சைனீஸ் மொழில ஏதோ வருது...கவனிங்க..

மாலதி said...

வாழ்த்துக்கள்,மிக நல்ல பகிர்வு,

FOOD said...

நன்றி: கக்கு மாணிக்கம்,சிராஜ்,சி.பி.எஸ்.&மாலதி.

நிரூபன் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ,

ஆரோக்கியமான உலகத்தையும், சுற்றுச் சூழலையும் கட்டியெழுப்பும் உங்கள் உழைப்பிற்கு இன்னும் பல விருதுகள் கிடைக்கவும், நீங்கள் மேலும் மேலும் முன்னேறவும் வாழ்த்துகிறேன் சகோ.

நிரூபன் said...

தமிழ் நாட்டின் அம்பாசமுத்திர அழகினைத் தரிசிக்க இப்பவே ஓடி வர வேண்டும் என்று ஆவலைத் தூண்டுகிறது தங்களின் சுற்றுலாப் பதிவு.

அப்பாதுரை said...

விவரங்களும் புகைப்படங்களும் சுவை. நண்பர் குழாத்துடன் நேரம் கழிப்பது என்றைக்கும் உற்சாகமூட்டக் கூடியதே. பகிர்வுக்கு நன்றி.

அகத்தியர் அருவி எங்கே இருக்கிறது? என்ன ஊர்? குற்றாலமா?

அப்பாதுரை said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.