கத்திரி வெயில் உச்சியை பொளக்குது. கண்ட கண்ட தண்ணீர் எல்லாம் குடிச்சி, தொண்டை கரகரங்குது. காரணம்தான் தெரியாம, காச அள்ளி வீசறோம். காசுக்கேத்த தரம் தண்ணீரில் இருக்கா, தேடுறோம்! காசு கொடுத்து வாங்கி பருகும் தண்ணீரினால் பரவும் நோய்கள்- அதிர்ச்சி தகவல்கள்.
வாட்டர் கேன்களில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் தண்ணீர் தரமானதுதானா? வீடுகளில் விநியோகிக்கப்படும் வாட்டர் கேன்களில், அறுபது சதவிகிதம் தரமற்றவையே! சொல்லியிருப்பது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர். இளங்கோ. வெயிலில் வெளியே செல்கிறோம், தாகம் எடுத்தால், கிடைக்கும் தண்ணீர் என்றாலும் சரி, அது தரங்கெட்ட குளிர்பானங்கள் என்றாலும் சரி, வாங்கி அருந்துவது நம் வாடிக்கை ஆகி விட்டது.
சாலை ஓரங்களில் கம்பங்கூழ் என்றும், கரும்புச் சாறென்றும், கண்ட கண்ட தண்ணீரில் தயாராகும் பானங்களை வாங்கி அருந்துகிறோம். விலை கொடுத்து, வீட்டிற்கு வாங்கும் வாட்டர் கேன்களுக்கும் இதே விதிதானா?
பாக்கெட்டு மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீருக்கு ஐ.எஸ்.ஐ. தரச் சான்று பெறுவது தவிர்க்க முடியாதது. அப்படி தரச் சான்று பெற்றிருப்பதாக போலி முத்திரை பதித்து விற்பவர்கள் ஒருபுறம். தரச் சான்று பெற்ற பின்னர், தரத்திற்கேற்ப தயாரிக்காதவர்கள் மறுபுறம். தண்ணீர் பிடிக்கப்படும் கேன்கள் 'உணவு தரத்தில்'(FOOD GRADE) இருக்க வேண்டும். மொத்தத்தில் பாதிக்கப்படுவதோ காசை கொடுத்து, உடல் நலத்தை காவு கொடுக்கும் உபயோகிப்பாளர்கள்தான்.
தொடர்ந்து ஒரு கம்பனி தயாரிக்கும் தண்ணீரை மட்டும் வாங்கி பயன்படுத்தும்போது, நம் உடல் அந்த தண்ணீரின் தரத்திற்கு தன்னை தயார்படுத்தி கொள்கிறது. தண்ணீர் மாறும்போதுதான், தொற்றுநோய் பிரச்சனையே தெரிய வருகுது. வாகனங்களில் வாட்டர் கேன்களை கொண்டு செல்லும்போதும், கோடை வெயில் கேன்கள் மீது கொடுமையாகப்படும் வண்ணம் கொண்டு செல்கிறார்கள்.அது மிக ஆபத்தானது.
தொண்டை கர கரப்பில் தொடங்கும் தொற்று, காய்ச்சல் வரை வந்து நிமோனியா தொடராக மாறி, நுரையீரல் வரை பாதிக்கிறது. நுரையீரல் தொற்று காரணாமாக ஏற்படும் நிமோனியா, எந்த மருந்திற்கும் கட்டுபடாத கிருமியாக உருவாகி, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூட எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிர்ச்சியின் உச்சம்:கடந்த சில மாதங்களாக, இந்தியாவில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இறந்தவர்களில் சுவாச மண்டல தொற்று காரணமாக இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொண்டை தொற்றிலிருந்து காத்துக்கொள்ள:
- குடிக்கும் நீரை நன்றாகக் கொதிக்க வச்சு குடிங்க- அது கார்ப்பரேசன் தண்ணீர் என்றாலும் , காசு கொடுத்து வாங்கும் கேன் வாட்டர் என்றாலும்!
- வெயிலில் அலைபவராக இருந்தால், கையில் இருக்கட்டும், வீட்டில் இருந்து எடுத்து செல்லும் ஒரு பாட்டில் தண்ணீர்.
- நாவறட்சியை குளிர்பானங்களை விட, சூடான ஒரு கப் தேநீர் தணிக்கும்.
- சாலை ஓரங்களில் விற்கப்படும், தரமற்ற குளிர்பானங்களையும், சுகாதாரமற்ற பழங்களையும் தவிர்ப்போம்.நோயின்றி நம்மை நாம் காப்போம். டிஸ்கி-1 : சோதனைகள், வழக்குகள், தண்டனைகள் என்று ஒரு பக்கம் தொடர்ந்தாலும், சந்தை படுத்துவோருக்கு, வாங்கி பயன்படுத்துவோருக்கும் அதை சரியாய் கொடுத்திடவும், வாங்கிடவும், சரியில்லை எனில், பயன்படுத்த மறுக்கவும் தொடங்கி விட்டால், துன்பங்கள் குறைந்துவிடும்.

77 comments:
வந்துட்டேன் தல!
வாங்க, வாங்க. முதல் வருகை.
சரியான நேரத்துல இட்ட விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பா!
எனக்கு ஒரு டவுட்டு....இந்த வீட்டுல யூஸ் பண்றாங்களே....water purifier அது உண்மைல சரியான படி சுத்தப்படுத்தி தான் கொடுக்குதான்னு எப்படி தெரிஞ்சிக்கறது....!
அய்யோ....அய்யோ.....தவிச்ச வாய்க்குத் தண்ணி வாங்கி குடிப்பதிலேயும் இத்தனை பிரச்சனையா?
தண்ணில கண்டமா??
பெரிய அக்கப்போராய் அல்லவா இருக்கிறது!!~
//விக்கி உலகம் said...
எனக்கு ஒரு டவுட்டு....இந்த வீட்டுல யூஸ் பண்றாங்களே....water purifier அது உண்மைல சரியான படி சுத்தப்படுத்தி தான் கொடுக்குதான்னு எப்படி தெரிஞ்சிக்கறது....!//
அதிலுள்ள கார்பன் ஃபில்டர்தான் தண்ணீரை சுத்தப்படுத்துது. அதை அடிக்கடி செக் பண்ணிக்கோங்க!
//Chitra said...
அய்யோ....அய்யோ.....தவிச்ச வாய்க்குத் தண்ணி வாங்கி குடிப்பதிலேயும் இத்தனை பிரச்சனையா?//
எதிலும் கவனம் தேவை என்பதே செய்தி. ஏமாந்துவிடக்கூடாது பாருங்க.
//மைந்தன் சிவா said...
தண்ணில கண்டமா??
பெரிய அக்கப்போராய் அல்லவா இருக்கிறது!!~//
ஆமா, கண்ட கண்ட தண்ணீரைக் குடிக்க கூடாது.கேன் வாட்டர் என்றாலும், கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
தாய்ப்பாலை தவிர்த்து அத்தனையும் கலப்படம்தான்
GOOD AWARENESS POST. THANKS FOR SHARING ¤
tamilmanam voted.
நமக்கெல்லாம் தண்ணில கண்டம்னு அண்ணன் சொல்றாரு.. ஆனா அண்ணனோட ஜாதகத்துல பார்த்தா அவருக்கு கன்னியால கண்டமாம். ஹே ஹே ஹேய்
தண்ணீரில் உள்ள கலப்படம் பற்றி விழிப்புணர்வு அருமை, தண்ணீரை மாற்றும் போது தான் தொற்று நோய்கள் பரவுகின்றன என்றால், ஊர் விட்டு ஊர் போகும் போது கொதித்தாறிய நீரையும் அல்லவா கையில் எடுத்துச் செல்ல வேண்டும்,
விழிப்புணர்வு பதிவிற்கு நன்றிகள் சகோ.
அருமையான விழிப்புணர்வு தரும் பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள். நன்றி.
தண்ணில கண்டம் இருக்குது ...ஹையோ ..ஹையோ
வீடுகளில் கொண்டுவந்து சப்ளை செய்யும் வாட்டர் கேன்களையும் எடுத்துப்போகும் காலி கேன்களையும் புழுதி சாலையில் எப்படி விசிறிப்போடறாங்க அந்த வேன் ஆட்கள் என்று கண்ணெதிரே பார்த்து நொந்து போயிருக்கேன்.
ஸீரோ பி ஒன்னு இல்லைன்னா அக்வாகார்ட் வாங்கிக்கிட்டால்தான் தேவலை.
//எல் கே said...
தாய்ப்பாலை தவிர்த்து அத்தனையும் கலப்படம்தான்//
சரிதான்.
//தமிழ்வாசி - Prakash said...
1.GOOD AWARENESS POST. THANKS FOR SHARING
2.tamilmanam voted.//
தங்கள் அன்பிற்கு நன்றி.
//சி.பி.செந்தில்குமார் said...
நமக்கெல்லாம் தண்ணில கண்டம்னு அண்ணன் சொல்றாரு.. ஆனா அண்ணனோட ஜாதகத்துல பார்த்தா அவருக்கு கன்னியால கண்டமாம். ஹே ஹே ஹேய்//
நல்ல நேரம் சதீஷ் கோச்சுக்க போறார்.
//நிரூபன் said...
தண்ணீரில் உள்ள கலப்படம் பற்றி விழிப்புணர்வு அருமை, தண்ணீரை மாற்றும் போது தான் தொற்று நோய்கள் பரவுகின்றன என்றால், ஊர் விட்டு ஊர் போகும் போது கொதித்தாறிய நீரையும் அல்லவா கையில் எடுத்துச் செல்ல வேண்டும்//
சரிதான். சிறு இடைவேளைக்குப் பின் உங்கள் வருகை-நன்றி.
விழிப்புணர்வு பதிவிற்கு நன்றிகள் சகோ.
//இராஜராஜேஸ்வரி said...
அருமையான விழிப்புணர்வு தரும் பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள். நன்றி.//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி, சகோதரி.
//இம்சைஅரசன் பாபு.. said...
தண்ணில கண்டம் இருக்குது ...ஹையோ ..ஹையோ//
யாருக்கு சார்? ஹா ஹா!
//துளசி கோபால் said...
வீடுகளில் கொண்டுவந்து சப்ளை செய்யும் வாட்டர் கேன்களையும் எடுத்துப்போகும் காலி கேன்களையும் புழுதி சாலையில் எப்படி விசிறிப்போடறாங்க அந்த வேன் ஆட்கள் என்று கண்ணெதிரே பார்த்து நொந்து போயிருக்கேன்.
ஸீரோ பி ஒன்னு இல்லைன்னா அக்வாகார்ட் வாங்கிக்கிட்டால்தான் தேவலை.//
அதையும் அடிக்கடி சர்வீஸ் பண்ணனும்.
ஆமாம். வருசத்துக்கு மூணு முறை சர்வீஸ் பண்ணறோம்
என்ன சார் இது கேன்களில் வரும் தண்ணீரையே நம்பி பருக முடியவில்லை என்றால்? ம்.... வியாபாரப் போட்டியால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே! அரசுதான் இறுக்கிப் பிடிக்கவேண்டும்!
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
என்ன சார் இது கேன்களில் வரும் தண்ணீரையே நம்பி பருக முடியவில்லை என்றால்? ம்.... வியாபாரப் போட்டியால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே! அரசுதான் இறுக்கிப் பிடிக்கவேண்டும்!//
ரைட்டு!
ssssssssssssshhhhhhhhhhhhhhhh mudiaaaaaaaaaaalllllllllllllllla kekum podhu kannna katudhe. Usur vaazhuradhe siramama irukkum pola.
ippavevaa? innum neraya irukke!
அனைத்து தினசரி நாளிதழ்களில் முதல் பக்கத்தில் போட வேண்டிய மிக முக்கிய பதிவு இது...
நடப்புக்களை பார்த்தால் அரசு எத்தனை தான் சோதனை முறைகள், கட்டுபாடுகள் கொண்டுவந்தாலும் பத்தாது போல அல்லவா உள்ளது? புற்றீசல் போல தினமும் கிளம்புகிறார்களே! நினைக்கவே பயமாக உள்ளது.
திரட்டிகளில் முதன்மை திரட்டியான --- தமிழ் திரட்டியில்--- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெறுங்கள் --தமிழ் திரட்டியின்--- முகவரி
http://tamilthirati.corank.com/
தங்கள் வரவு இனிது ஆக
வெல்டன் ஆபீசர், சரியான நேரத்தில், தேவையான பதிவு!
தண்ணீர் விஷயத்தில் நம்மவர்கள் வெகு அசிரத்தையாகவே இருக்கிறார்கள்!
ஆஹா ! அருமையான தலைப்பு ..!
அடப்பாவிகளா இதென்ன அநியாயமா இருக்கு...!!!!
//சாலை ஓரங்களில் விற்கப்படும், தரமற்ற குளிர்பானங்களையும், சுகாதாரமற்ற பழங்களையும் தவிர்ப்போம்.நோயின்றி நம்மை நாம் காப்போம். //
கரெக்ட் ஆபீசர்....
//டிஸ்கி-1 : சோதனைகள், வழக்குகள், தண்டனைகள் என்று ஒரு பக்கம் தொடர்ந்தாலும், சந்தை படுத்துவோருக்கு, வாங்கி பயன்படுத்துவோருக்கும் அதை சரியாய் கொடுத்திடவும், வாங்கிடவும், சரியில்லை எனில், பயன்படுத்த மறுக்கவும் தொடங்கி விட்டால், துன்பங்கள் குறைந்துவிடும். //
சரியாக சொன்னீர்கள் ஆபீசர்....
//குடிக்கும் நீரை நன்றாகக் கொதிக்க வச்சு குடிங்க- காசு கொடுத்து வாங்கும் கேன் வாட்டர் என்றாலும்!//
நல்ல அறிவுரை!நான் அப்படித்தான் செய்கிறேன்!
சரியான நேரத்தில், தேவையான பதிவு!
தொடரட்டும் உங்களின் சமூகப் பணி..
சரியான நேரத்தில் , பகிர்ந்து இருக்கீங்க/
Please Seize the above 20 liters Water Can. I saw a Hotel at Thirunelveli.They are very ugly and not fit for use.
உங்களின் ஒவ்வொரு பதிவும் படித்தால் மட்டும் போதாது...கவனமாக மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டியவைகள்.
மக்களுக்கு மிக மிக அவசியமான விழிப்புணர்வு பதிவுகள்...
உங்களின் வேலை பளுவிற்கு நடுவில் இது போன்ற விசயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நீங்கள் மேற்கொள்ளும் இந்த அற்புத பணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.
பொதுவாக எந்த தண்ணீராக இருந்தாலும் நம் கண் முன்னால் கொதிக்க வைத்து ஆறிய பின் குடிப்பதே மிக நல்லது. பல வியாதிகளை கொண்டு வருவதே சுகாதாரமற்ற தண்ணீர் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
தொடரட்டும் உங்களின் சீரிய பணி...!!
கோடை காலத்திற்கு ஏற்ற சரியான பதிவு.. உபயோகமான தகவல்கள்
நன்றி சார்!
http://karadipommai.blogspot.com/
சரியான நேரத்தில் உங்களின் பதிவினை பகிர்தமைக்கு நன்றிகள்.
தண்ணீர் பாட்டிலில் கூட
அடிப்பாகத்தில் 1 அல்லது 2 என இருக்கும் அதில் 2 தான் வாங்க வேண்டும் என எங்கோ படித்துள்ளேன்
அதைப்பற்றி ஒரு பதிவிடவும்
சூடு தண்ணீர் தான் பெஸ்ட்
//மொக்கராசா said...
அனைத்து தினசரி நாளிதழ்களில் முதல் பக்கத்தில் போட வேண்டிய மிக முக்கிய பதிவு இது...//
நன்றி ராசா!
//கக்கு - மாணிக்கம் said...
நடப்புக்களை பார்த்தால் அரசு எத்தனை தான் சோதனை முறைகள், கட்டுபாடுகள் கொண்டுவந்தாலும் பத்தாது போல அல்லவா உள்ளது? புற்றீசல் போல தினமும் கிளம்புகிறார்களே! நினைக்கவே பயமாக உள்ளது.//
பயப்பட தேவையில்லை,பார்த்து விழிப்புடன் இருந்தால் போதும்.
விழிப்புணர்வு பதிவிற்கு நன்றிகள் அருமையான விழிப்புணர்வு தரும் பயனுள்ள
தகவல்கள் .
பாராட்டுக்கள். பாராட்டுக்கள். பாராட்டுக்கள். பாராட்டுக்கள். பாராட்டுக்கள். பாராட்டுக்கள். பாராட்டுக்கள். பாராட்டுக்கள். பாராட்டுக்கள்.
உபயோகமான தகவல் !
//சண்முககுமார் said...
திரட்டிகளில் முதன்மை திரட்டியான --- தமிழ் திரட்டியில்--- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெறுங்கள்//
நன்றி சார். இணைத்துள்ளேன்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வெல்டன் ஆபீசர், சரியான நேரத்தில், தேவையான பதிவு!
தண்ணீர் விஷயத்தில் நம்மவர்கள் வெகு அசிரத்தையாகவே இருக்கிறார்கள்!//
நன்றி சார். ஊர் வந்து விருந்து பலமா? பதிவுலகில் அடிக்கடி பார்க்க முடியவில்லை!
//koodal bala said...
ஆஹா!அருமையான தலைப்பு..!//
அதைவிட அருமை உங்களின் வருகை.
//MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவிகளா இதென்ன அநியாயமா இருக்கு...!!!!//
இன்னும் இருக்கு.
//MANO நாஞ்சில் மனோ said...
//சாலை ஓரங்களில் விற்கப்படும், தரமற்ற குளிர்பானங்களையும், சுகாதாரமற்ற பழங்களையும் தவிர்ப்போம்.நோயின்றி நம்மை நாம் காப்போம்.
கரெக்ட் ஆபீசர்....//
பஹ்ரைன் மன்னர் வருகைக்கு நன்றி.
//சென்னை பித்தன் said...
//குடிக்கும் நீரை நன்றாகக் கொதிக்க வச்சு குடிங்க- காசு கொடுத்து வாங்கும் கேன் வாட்டர் என்றாலும்!
நல்ல அறிவுரை!நான் அப்படித்தான் செய்கிறேன்!//
உங்களைப் பார்த்து ஊரார் படிக்க வேண்டும்.நன்றி.
//வேடந்தாங்கல் - கருன் *! said...
சரியான நேரத்தில், தேவையான பதிவு!
தொடரட்டும் உங்களின் சமூகப் பணி..//
நன்றி கருன்.
//Jaleela Kamal said...
சரியான நேரத்தில் , பகிர்ந்து இருக்கீங்க//
நன்றி சகோ.
//bala said...
Please Seize the above 20 liters Water Can. I saw a Hotel at Thirunelveli.They are very ugly and not fit for use.//
You may please inform the details to my mail ID.
//Kousalya said...
உங்களின் ஒவ்வொரு பதிவும் படித்தால் மட்டும் போதாது...கவனமாக மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டியவைகள்.
மக்களுக்கு மிக மிக அவசியமான விழிப்புணர்வு பதிவுகள்...
உங்களின் வேலை பளுவிற்கு நடுவில் இது போன்ற விசயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நீங்கள் மேற்கொள்ளும் இந்த அற்புத பணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.
பொதுவாக எந்த தண்ணீராக இருந்தாலும் நம் கண் முன்னால் கொதிக்க வைத்து ஆறிய பின் குடிப்பதே மிக நல்லது. பல வியாதிகளை கொண்டு வருவதே சுகாதாரமற்ற தண்ணீர் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
தொடரட்டும் உங்களின் சீரிய பணி...!!//
தொடரும் சகோதரி, உங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பால்!
//Lali said...
கோடை காலத்திற்கு ஏற்ற சரியான பதிவு.. உபயோகமான தகவல்கள்
நன்றி சார்!//
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Voted in all moderator sites...Thanks for sharing...
கேன் வாட்டர் பல தனியார் நிறுவனங்களில் உபயோகிக்கின்றனர். அதை சூடுபடுத்தி குடிக்க இயலாது. இதற்கு மாற்று வழி உண்டா?
//Mahan.Thamesh said...
சரியான நேரத்தில் உங்களின் பதிவினை பகிர்தமைக்கு நன்றிகள்.//
நன்றி.
//டக்கால்டி said...
Voted in all moderator sites...Thanks for sharing...//
மகிழ்ச்சி!
//Speed Master said...
தண்ணீர் பாட்டிலில் கூட
அடிப்பாகத்தில் 1 அல்லது 2 என இருக்கும் அதில் 2 தான் வாங்க வேண்டும் என எங்கோ படித்துள்ளேன்
அதைப்பற்றி ஒரு பதிவிடவும்//
படிக்க நீங்க இருக்கும்போது, பதிவிட நான் ரெடி.
//சிவகுமார் ! said...
கேன் வாட்டர் பல தனியார் நிறுவனங்களில் உபயோகிக்கின்றனர். அதை சூடுபடுத்தி குடிக்க இயலாது. இதற்கு மாற்று வழி உண்டா?//
அட்லீஸ்ட் அதை கேண்டில் ஃபில்டர் மூலம் சுத்தப்படுத்தி பயன்படுத்தலாம்.
Thanks Sir.
விழிப்புணவு பதிவு. நன்றிகள்.
மினரல் வாட்டர் காசு கொடுத்து வாங்கினாலும் காவு வாங்கிடுறானுக
திருப்பூரில் குடம் தண்ணீர் ஒரு ரூபாயாம்
நன்றி: டக்கால்டி
ஆர்.கே.சதீஷ்குமார்
தண்ணீரை காய்ச்சி குடிப்பது கூட கெடுதல்தான். தண்ணீரில் உள்ள உயிர்சத்துக்கள் அழிந்து விடுகின்றன. கடைகளில் விற்கும் தண்ணீரில் மினரலே இல்லை! ஆனால் அதற்கு பெயர் மினரல் வாட்டர்.
விக்கி உலகம் சார் வீட்டில் உபயோகப்படுத்தும் வாட்டர் பியூர் கெடுதலே. தண்ணீரில் உள்ள அணைத்து சத்துகளுமே அது அகற்றி விடுகிறது. அதில் உள்ள கழிவைப்பார்த்து இயந்திரத்தை பெருமையாக நாம் நினைக்கிறோம். அது அகற்றும் கழிவுகள் அனைத்துமே சத்து என்று நான் சொன்னால் நீங்க நம்ப மாட்டீங்க! தண்ணீரை டாக்டர் காய்ச்சி குடிக்க சொல்றார். கேட்டால் அதில் உள்ள கிருமி அழியும் என்கிறார். காய்ச்சும் போது கிருமி மட்டும் அழிவதில்லை. தண்ணீரில் உள்ள தாதுப்பொருட்களும் அழியாதா? இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். காய்ச்சாமல் குடித்தால் கிருமிகள் வயிற்றுக்குள் சென்று உபாதையை ஏற்படுத்தாதா என்று. கண்டிப்பாக ஏற்படுத்தாது. நமது உடம்பில் எதிர்ப்புசக்திகள் இருப்பதால் கிருமிகளை அழித்துவிடும். ஆனால் தண்ணீரில் உள்ள தாதுப்பொருட்கள் கிடைக்குமா? இப்போது மேலும் ஒரு ஐயம் உங்களுக்கு வரலாம். புது இடங்களுக்கு சென்றால் தண்ணீர் குடித்தால் சளி ஏற்படுகிறதே என்று. எல்லா இடத்திலும் கிடைக்கும் தண்ணீரில் ஒன்று ஏதாவது ஒரு சத்து பொருள் குறைவாகவோ, அல்லது ஒரு உயிர்சத்து அதிகமாக இருக்கும்போது இவ்வாறு சளி ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை நாம் வைத்திருக்கும் உடம்பு பார்த்து கொள்ளும்.
வேற என்ன வழி இருக்கு..முடியல..
http://zenguna.blogspot.com/
/////அப்படி தரச் சான்று பெற்றிருப்பதாக போலி முத்திரை பதித்து விற்பவர்கள் ஒருபுறம். தரச் சான்று பெற்ற பின்னர், தரத்திற்கேற்ப தயாரிக்காதவர்கள் மறுபுறம்/////
எல்லோருக்கும் பணம் தான் பிரதானம்.. அதுக்காக என்னவெல்லாம் செய்யுறாங்கள் சகோதரம்...
nice awareness post
Post a Comment