இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 6 June, 2011

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.


                       
தன் இரத்தத்தை பாலாக மாற்றி கொடுக்கும் பசுக்களையும் மரபணு மாற்றம் மறப்பதாயில்லை. தாய்ப்பாலுக்கு நிகர் தரணியில் இல்லை என்ற காலம் மாறி, தாய்ப்பாலை தயாரிக்கும் இயந்திரங்கள் உருவாகப் போகின்றன. என்ன அதிர்ச்சியா இருக்கா?  

தாய்ப்பாலின் தனித்துவமே, அது நோய் எதிர்ப்பு சக்தியை  குழந்தைகளுக்கு கொடுக்குமென்பதுதான். எப்படி நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது?  தாய்ப்பாலில் 'லைசோசைம்' எனும் புரதம் உள்ளது. இந்த புரதமே, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. இது தெரிந்து விட்டால் போதாதா, நம் சீன விஞ்ஞானிகளுக்கு! 
சீப்பான பொருள் வேணும்னா, சீன சந்தையில் சீக்கிரம் கிடைக்குமென்பர்.   இன்று, சீன வேளாண் விஞ்ஞானிகள், தாய்ப்பாலுக்கு ஈடான சத்துக்கள் கொண்ட பாலைத்  தரும் பசுக்களை, மரபணு மாற்றம் மூலம் உருவாக்கியுள்ளனர். 

முதற்கட்டமாக, முன்னூறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்களை உருவாக்கியுள்ளனர். அந்த பசுக்களுக்கும், நம் வீட்டு பசுக்களுக்கும் வேறுபாடு இருக்காது. இந்த பசுக்கள் தரும் பால், சாதாரண பசுக்கள் தரும் பாலை விட சுவையாக இருக்கும். சத்துக்களும் அதிகமிருக்கும். இந்த பாலை, குழந்தைகள்  பருகினால், பாதிப்பு ஏதும் ஏற்படுமோ என்று பயம் வந்தது.
மனித மரபணுக்களை பசுக்களுக்கு தந்து, மரபணு மாற்ற பசுக்களை உருவாக்கி வரும், சீன வேளாண் விஞ்ஞானி 'நிங் லீ' இடம் வினவியபோது, இவ்வாறு உருவாக்கப்படும் பசும்பால், மற்ற பசும்பாலை போன்றே பாதுக்காப்பானது. குழந்தைகள் பருக கொடுக்கலாம், பக்க விளைவுகள் ஏற்படுத்தாது என்று உறுதி அளித்துள்ளார்.  
அத்தோடு நிற்க வில்லை அவர்கள் முயற்சி. லைசோசைம் அடங்கிய பாலை சுரக்க வைத்தவர்கள், அடுத்து, லாக்டோபெரின் எனும் நோய் எதிர்ப்பு  திறன் கொண்ட புரதம் கொண்ட பாலைக்  கொடுக்கும் வகையில், அடுத்து ஒரு மரபணு மாற்றம் செய்தனர். 
இவை போதாதென்று, மரபணு மாற்றம் மூலம், ஆல்பா லாக்டால்புமின் எனும் புரதம் செறிந்த பாலைக் கொடுக்கும் பசுக்களையும் உருவாக்கியுள்ளனர். அடுத்து, தாய்ப்பாலை விட, பசும்பாலில், கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட் உள்ளிட்ட பிற சத்துக்கள் குறைவு என்பதால், ஊட்டச்சத்து குறைபாடு  ஏற்படுமேன்றோர் குற்றச்  சாட்டு எழுந்தபோது, பசும்பாலின் கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட் ஆகியவற்றை அதிக்கப்படுத்தவும் முயற்சித்தனர். 

இருந்தும் என்ன, பிராணிகள் நல அமைப்பினர்,  மரபணு மாற்றம் பசுக்களின் உடல் நலனை பாதிக்கும் என்று போராடி வருகின்றனர்.  இரு வெவ்வேறு  ஆய்வு களங்களில், உருவாக்கப்பட்ட 42 மரபணு மாற்றம் செய்யப்பட்ட கன்றுகளில்,  பத்து கன்றுகள் உடனேயும், ஆறு கன்றுகள் உருவாக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள்ளும் இறந்து போயின. 
டிஸ்கி:இத்தனை இடையூறுகள் இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளில், தாய்ப்பாலுக்கு நிகரான பசும்பால், தகர டப்பாக்களில் தயாராய் உலா வரும். தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள்தான் விரைவில் உயிரை விடும்.
Follow FOODNELLAI on Twitter

47 comments:

எல் கே said...

எப்படி இருந்தாலும் அது மருந்துகள் மூலம் நடப்பதுதானே ? அது எப்படி தாய்ப்பாலுக்கு நிகராகும் ?

இராஜராஜேஸ்வரி said...

தாய்ப்பாலுக்கு நிகர் தரணியில் இல்லை என்ற காலம் மாறி, தாய்ப்பாலை தயாரிக்கும் இயந்திரங்கள் உருவாகப் போகின்றன. என்ன அதிர்ச்சியா இருக்கா? //
Thank you for new Information.

மைந்தன் சிவா said...

என்ன கொடுமை பாஸ் இது??

மைந்தன் சிவா said...

குடிக்க மனம் வருமா பாஸ்??வாசிக்கவே அருவருக்குது

விக்கி உலகம் said...

இயற்கை எப்பவுமோ நம்மை விட முன்னோடி என்பதும்.....செயற்கையால் பல விஷயங்களை எளிதாக அழிக்க முடியும் என்பதையும் உணரும் விதமாக இருக்கிறது உங்க பதிவு.......நன்றி அண்ணே!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இது ஒரு புதுமையான விஷயம் கொண்ட பதிவு.. விழிப்புணர்வு பதிவும் கூட.. நன்றி..

சி.பி.செந்தில்குமார் said...

இயற்கையை மனிதன் வெல்ல ஒரு ஸ்டெப் முன்னால் வைக்கும்போது இயற்கை தன் சீற்றங்கள் மூலம் அவனை பல ஸ்டெப் பின்னே தள்ளி விடுகிறது

FOOD said...

//எல் கே said...
எப்படி இருந்தாலும் அது மருந்துகள் மூலம் நடப்பதுதானே ? அது எப்படி தாய்ப்பாலுக்கு நிகராகும் ?//
மருந்து உபயோகம் அல்ல. மரபணு மாற்றம் அது.

FOOD said...

//இராஜராஜேஸ்வரி said...
தாய்ப்பாலுக்கு நிகர் தரணியில் இல்லை என்ற காலம் மாறி, தாய்ப்பாலை தயாரிக்கும் இயந்திரங்கள் உருவாகப் போகின்றன. என்ன அதிர்ச்சியா இருக்கா? //
Thank you for new Information.//
நன்றி சகோ.

FOOD said...

//மைந்தன் சிவா said...
என்ன கொடுமை பாஸ் இது??//
கொடுமை இல்ல, இதுதான் இன்றைய நிதர்சனம்.

FOOD said...

//மைந்தன் சிவா said...
குடிக்க மனம் வருமா பாஸ்??வாசிக்கவே அருவருக்குது//
சின்ன புள்ளன்னு நெனைச்சேன். கமெண்ட் சூப்பர்.

FOOD said...

//விக்கி உலகம் said...
இயற்கை எப்பவுமோ நம்மை விட முன்னோடி என்பதும்.....செயற்கையால் பல விஷயங்களை எளிதாக அழிக்க முடியும் என்பதையும் உணரும் விதமாக இருக்கிறது உங்க பதிவு.......நன்றி அண்ணே!//
நன்றிங்க தல.

FOOD said...

// வேடந்தாங்கல் - கருன் *! said...
இது ஒரு புதுமையான விஷயம் கொண்ட பதிவு.. விழிப்புணர்வு பதிவும் கூட.. நன்றி..//
நன்றி நண்பரே.

FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
இயற்கையை மனிதன் வெல்ல ஒரு ஸ்டெப் முன்னால் வைக்கும்போது இயற்கை தன் சீற்றங்கள் மூலம் அவனை பல ஸ்டெப் பின்னே தள்ளி விடுகிறது//
நன்றி சார்.
புள்ள இன்னைக்குதான் ஒழுங்கா உருப்படியா கமெண்ட் போட்டிருக்கு.

# கவிதை வீதி # சௌந்தர் said...

காலையில் ஒரு நல்ல செய்தி...

ஆன என்னவிருந்தாலும் இயற்கையின் சக்தியை செயற்க்கை விஞ்சி விட முடியாது...

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ் மணம் 7

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல பகிர்வு ஆப்பீசர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளே இன்னும் பலநாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, அதற்குள்ளாக, இது வேறயா?

FOOD said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
காலையில் ஒரு நல்ல செய்தி...
ஆன என்னவிருந்தாலும் இயற்கையின் சக்தியை செயற்க்கை விஞ்சி விட முடியாது...//
நண்பரே, உங்கள் தமிழ்மண ஏழாவது ஓட்டும்எனக்கு நல்ல செய்திதானே!நன்றி.

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல பகிர்வு ஆப்பீசர்//
நன்றி, தங்கள் வருகைக்கு.
ஆஃபிசர் என்று நீங்களும் என்னை அன்னியப்படுத்தித்தான் வைத்துள்ளீர்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மரபணு மாற்றம்/க்ளோனிங்/ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் இன்னும் வளர வேண்டி இருக்கிறது. விரைவில அனைத்து துறைகளிலும் இவை நிச்சயம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போகும்!

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளே இன்னும் பலநாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, அதற்குள்ளாக, இது வேறயா?//
எல்லாம் காலத்தின் கட்டாயம், நண்பரே. சகிச்சுகோங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல பகிர்வு ஆப்பீசர்//
நன்றி, தங்கள் வருகைக்கு.
ஆஃபிசர் என்று நீங்களும் என்னை அன்னியப்படுத்தித்தான் வைத்துள்ளீர்கள்.
////////

அட என்னங்ணா நம்ம சொல்ற ஆப்பீசரே வேற (கவுண்டர் சொல்ற குட்மார்னிங் ஆப்பீசர்...... அந்த மாதிரி).... ஹஹஹஹா இது தேவையா........?

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மரபணு மாற்றம்/க்ளோனிங்/ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் இன்னும் வளர வேண்டி இருக்கிறது. விரைவில அனைத்து துறைகளிலும் இவை நிச்சயம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போகும்!//
வளரட்டும் நம்மை வளப்படுத்தட்டும்.

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல பகிர்வு ஆப்பீசர்//
நன்றி, தங்கள் வருகைக்கு.
ஆஃபிசர் என்று நீங்களும் என்னை அன்னியப்படுத்தித்தான் வைத்துள்ளீர்கள்.
/////////
அப்ப என் புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

அட என்னங்ணா நம்ம சொல்ற ஆப்பீசரே வேற (கவுண்டர் சொல்ற குட்மார்னிங் ஆப்பீசர்...... அந்த மாதிரி).... ஹஹஹஹா இது தேவையா........?

FOOD said...

////பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல பகிர்வு ஆப்பீசர்//
நன்றி, தங்கள் வருகைக்கு.
ஆஃபிசர் என்று நீங்களும் என்னை அன்னியப்படுத்தித்தான் வைத்துள்ளீர்கள்.
/////////

அட என்னங்ணா நம்ம சொல்ற ஆப்பீசரே வேற (கவுண்டர் சொல்ற குட்மார்னிங் ஆப்பீசர்...... அந்த மாதிரி).... ஹஹஹஹா இது தேவையா........?//
அப்ப என் புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல பகிர்வு ஆப்பீசர்//
நன்றி, தங்கள் வருகைக்கு.
ஆஃபிசர் என்று நீங்களும் என்னை அன்னியப்படுத்தித்தான் வைத்துள்ளீர்கள்.
/////////
அப்ப என் புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.///////

சொரிங்க ஆப்பீசர்......ஆங்..சரிங்க ஆப்பீசர்..........!

FOOD said...

//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல பகிர்வு ஆப்பீசர்//
நன்றி, தங்கள் வருகைக்கு.
ஆஃபிசர் என்று நீங்களும் என்னை அன்னியப்படுத்தித்தான் வைத்துள்ளீர்கள்.
/////////
அப்ப என் புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.///////

சொரிங்க ஆப்பீசர்......ஆங்..சரிங்க ஆப்பீசர்..........!//
இப்ப இது நல்லாருக்கு.

சங்கவி said...

நல்ல விசயம்...

koodal bala said...

இன்னும் என்னல்லாம் நடக்கப்போவுதோ ........

bandhu said...

பெரும் வரவேற்ப்புடன் வரும். சில வருடங்கள் கழித்து இதில் இருக்கும் பக்க விளைவுகளை 'கண்டு பிடிப்பார்கள்'!

சென்னை பித்தன் said...

பிரமிப்பாக இருக்கிறது.ஆனால் அசலுக்கு மாற்றாக எந்த நகலும் இருக்க முடியாது.காலம் தன் பதிலைச் சொல்லும்!

! சிவகுமார் ! said...

காலக்கொடுமை. எல்லா இயற்கை செல்வங்களும் டப்பாவுக்குள் அடங்கி விட்டன.

நிலாமகள் said...

பாரில் இய‌ற்கை ப‌டைத்த‌தை எல்லாம் பாழும் ம‌னித‌ன் கெடுத்து வைத்தானே!

சி.பி.செ. சொன்ன‌தையும் ஆமோதிக்க‌த் தோன்றுகிற‌து.

Speed Master said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

லேப்டாப் மனோவின் New Keyboard
http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html

ஷர்மிளா said...

வேகமான உலகம் என்பதாலா ?

Jana said...

வரவு கொஞ்சம் பிந்திவிட்டது மன்னிக்கவும். செயற்கைத்தாய்ப்பால் தயாரிப்பு தொடர்பான வீடியோ டாக்குமென்ரி ஒன்றை அண்மையில் பார்க்க கிடைத்தது. உண்மைதான் உலகப்போக்கில் எதுவும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடேயப்பா பால் பத்தி அருமையான கட்டுரை..சோயாபால் ந்னு சொல்றாங்க..அதை பத்தி சொல்லுங்க..பாலில் பிரபல தேனீர் கடைக்காரர்கள் மில்க் எசன்ஸ் கலக்குகிறார்களாம்..இதை பத்தி சொல்லுங்க சார்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Thanks for sharing this new information

தமிழ்வாசி - Prakash said...

இப்படி வேற நடக்குதா?

FOOD said...

வந்து கருத்துக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

நிரூபன் said...

தாய்ப்பாலுக்கு நிகர் தரணியில் இல்லை என்ற காலம் மாறி, தாய்ப்பாலை தயாரிக்கும் இயந்திரங்கள் உருவாகப் போகின்றன. என்ன அதிர்ச்சியா இருக்கா?//

அதிர்ச்சியாக இல்லைச் சகோ,
இவ் இடத்தில் பச்சையாகப் பேசுவதற்கு மன்னிக்கவும்,
மார்பழகு கெட்டு விடும் என்ற உயரிய நோக்கில் இக் கால நவீன நங்கைகள் பலர் தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்திப் பிள்ளைகளுக்கு பீடரில் தகரப் பலைத் தானே கொடுக்கிறார்கள். இதனால் பிள்ளைகளின் போஷாக்கு தான் குறை வடையும்.

ஆகவே எதிர் காலத்தில் தாய்ப்பாலுக்கு நிகரான தகரப் பால் வரும் போது, அது வரவேற்கத் தக்க விட்யமாகிறது சகோ.

நிரூபன் said...

இத்தனை இடையூறுகள் இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளில், தாய்ப்பாலுக்கு நிகரான பசும்பால், தகர டப்பாக்களில் தயாராய் உலா வரும். தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள்தான் விரைவில் உயிரை விடும்//

ஹா...ஹா...

வரவேற்கத் தக்க விடயம், சீன விஞ்ஞானிகளின் முயற்சியும் அருமை..

இந்தப் புதிய தகவலைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள் சகோ.

FOOD said...

@நிரூபன்:
எப்பவும்போல் நச்சுன்னு கருத்து பதிவு.நன்றி.

Lali said...

Transgenic research is making lot of wonders, even if bio-safety of the product is very essential before introducing the stuff. In the path of research it's really a mile stone, however we feel it awkward because it's trying to replace the natural products. What to say... accept the change or fight against the change, but nothing can stop the changes, bitter truth. Thanks for the info Lingam sir!

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ஏற்கனவே நிறைய பேரு தாய்பால் குடுக்குறதில்லை, இப்பிடி வேற கிடைக்க ஆரம்பிச்சா சுத்தம் என்ன சொல்ல கலி காலம்....

asiya omar said...

வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? இடுகைகளை நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன்.