 |
நெல்லையப்பர் தேர். |
திக்கெட்டும் புகழ் பரவும் திருநெல்வேலி சீமையிலே, நடந்தது தேர்த்திருவிழா. தமிழகத்தில், பல சிவசபைகள் உண்டு. அவற்றிலே, தாமிரசபை அமைந்துள்ள இடம் திருநெல்வேலி. அன்னை காந்திமதிக்கும், நெல்லையப்பருக்கும் தனித்தனி ஆலயங்கள் எழுப்பப்பட்டு,அவ்விரு ஆலயங்களும், கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாய் பல சிற்பங்கள் உள்ளன. அத்தகைய சிறப்பு மிக்க நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனித்தேரோட்டம்.
 |
நெல்லையப்பர் கோவில் பிண்ணனியில்-சுவாமி,அம்பாள் தேர் |
தலபுராணம்: சிவபெருமானின் திருவிளையாடல் புகழ் பெற்ற்து. நெல்லுக்கு வேலியிட்ட பெருமான் என்பதால், நெல்லையப்பர் என்று பெயர் பெற்ற தலம். வேதபட்டர் என்ற பக்தர் வறுமையின் பிடியில் வாடியபோதும், இறைவன் மீதான பக்தியில் சிறந்தவர். இறைவனுக்கு நெய்வேத்யம் செய்வதற்காக, வீடு வீடாகச் சென்று நெல்மணிகளைச் சேகரித்து, அதை சன்னதி முன் காயப்போட்டு விட்டு, தாமிரபரணியில் குளிக்கச் சென்றார்.
குளித்துக்கொண்டிருக்கும்போது திடீர் மழை பெய்ததால், நெல்மணிகள் நனைந்துவிடுமே என்று பதைபதைத்து, நெல்லையப்பர் சன்னிதானத்திற்கு ஓடோடி வந்தார். வேதபட்டர் நெல் காயவைத்திருந்த சன்னதிமுன், வேலீட்டது போல், வெயிலடித்துக்கொண்டிருந்தது. என்னே, இறைவனின் கருணை என்று மகிழ்ந்தார். நெல்லுக்கு வேலியிட்டதால், நெல்லையப்பர் என்று பெயர் வந்ததாக தலபுராணம் சொல்கிறது.
 |
தேருக்கு மேலே வட்டமிட்டு செல்லும் கருடன். |
செவ்வாயன்று காலை எட்டு மணிக்கு தேரோட்டம். சுவாமி, அம்பாள் காலை நாலு மணிக்குத் தேரில் எழுந்தருளினர். சரியாக 07.59க்கு கருடன் வானில், தேரை வலம் வந்தார். பக்தர்கள், மகிழ்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர். தேரைக் கருடன் வட்டமிடும் காட்சியை, மேலே படத்தில் காணலாம்.
அடுத்து, சுவாமிக்கு கற்பூர ஆராதனை காட்டப்பட்டு, தேர் வீதியுலா துவங்கியது. பக்தர்கள் நெல்லையப்பா,மகேசா, சிவ சிவா என விண்ணதிரக் கோஷமிட, மக்கள் வெள்ளத்தில், தேர் மிதந்து வந்தது.
 |
தேரின் பின்புற தோற்றம்.
|
|
 |
திரும்பும் தேர். |
இயக்குனர்கள்:தேர் முன் செல்ல, தேரின் பின்புறம் இயக்குனர்கள் சிலரின் பணி அத்யாவசியமாகிறது. ஆம், தேருக்குப் பின்னே, தண்டோரா போடுபவர்களும், தடிபோட்டுத் தேரை நகர்த்துபவர்களும் ஆற்றும் பணி அரும்பணியாகும். இந்தப் பணி செய்வதற்கென்று, இளைஞர் பட்டாளம் ஒன்று, எப்போதும் தயாராய் இருக்கும்.
 |
தேர் முன் செல்ல, பின்னிருந்து தண்டோரா மற்றும் தடி போடுபவர்கள்.
|
 |
அலைகடலென மக்கள் |
சுவாமி தேரைக் காலை பத்து மணிக்கெல்லாம், மூன்று ரதவீதிகளைக் கடந்து இழுத்து வந்துசேர்த்தனர். அதன் பின்னர், அம்மன் தேரையும் இழுத்து வந்தனர். முன்பெல்லாம், பத்து பட்டி ஜனங்களும், ஊர் கூடி தேர் இழுப்பார்களாம். பத்து நாட்கள் கழித்தே, தேர் நிலையம் வந்து சேரும். தற்போது,தேருக்கு இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், நான்கு ரதவீதிகளிலும், தேர் நில்லாமல் விரைந்து வந்து, மாலையில் நிலையம் வந்து சேர்ந்தது.
 |
அம்மன் கோபுர பிண்ணனியில் தேர்.
|
|
அம்மன் தேரைத் தொடர்ந்து, பிற தேர்களும் நிலையம் வந்து சேர்ந்தன.அனைத்து தேர்களும் வந்து சேர்ந்த பின்னர், சண்டிகேசுவரர் தேர், ரதவீதியில் வலம் வரும். மக்கள் வெள்ளத்தில், ஆடி அசைந்து வரும் தேரைக் காணக் கண் கோடி வேண்டும்.
 |
அம்மன் தேர். |
|
பிரேக் இன்ஸ்பெக்டர்கள்:தேர் ஒரு ரதவீதியிலிருந்து, அடுத்த ரதவீதிக்குத் திரும்ப, தேரின் முன்பக்கம், சறுக்கு வைக்கும் தொழிலாளர்கள் எடுக்கும் ரிஸ்க், வார்த்தகளால் வர்ணிக்க முடியாது.கரணம் தப்பினால், மரணம் என்பதுபோல், சறுக்கு வைக்கும்போது, சிறிது தவறினாலும், தேர் நிலை தடுமாறும். தவறாகக் கையாண்டால், இவர்கள் விரல்கள் மட்டுமல்ல, கைகள் கூட பழுதாகும்.
 |
விநாயகர் தேர். |
 |
சுப்பிரமணியர் தேர். |
கோயிலின் சிறப்புகள்:1) இந்த கோயிலுக்கு வருபவர்கள், முதலில் அம்மன் சன்னதிக்குச் சென்று வணங்கிவிட்டு, அதன் பின்னரே, நெல்லையப்பரை வழிபட செல்கின்றனர்.
2) சைவம், வைணவம் என்று பிரிவினைகள் பேசுவோர் மத்தியில், மூலவர் சன்னதிக்கு அருகிலேயே, விஷ்ணு, அனந்த சயனத்தில் இருந்து அருள் பாலித்து வருவது கூடுதல் சிறப்பு.
 |
சண்டிகேசுவரர் தேர். | |
41 comments:
நல்ல பதிவு.
தேர்த் திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள்.
தேர்த்திருவிழா பதிவு சூப்பருண்ணே!...
ஸ்தல புராணம் அழகு!
ஸ்தலத்திற்கு அழைத்துச்சென்ற அருமையான படங்களுக்கும் பகிர்விறகும் மனம்நிறைந்த நன்றி.
தேர்த்திரு விழா நேரில் பார்த்தது போல் இருந்தது
பக்தி பரவசமூட்டும் பதிவு....
வழிபாடு நடக்கும் ஒழுங்கையும் வரிசைப்படுத்தியது நன்று. புகைப்படங்களுக்கு சொந்தக்காரர் யார்?
@Rathnavel:
வருகைக்கு நன்றி அய்யா.
@விக்கியுலகம்:
நன்றிங்க.
@இராஜராஜேஸ்வரி:
வருக்கைக்கு நன்றி.
@நாய்க்குட்டி மனசு:
ஆஹா, நேற்று உங்களுக்கு விடுமுறை கிடையாதே!
@சரியில்ல......
கருத்துக்களுக்கு நன்றி.
புகைப்படத்திற்கு சொந்தக்காரர் நானேதான். பின்ன, கோயில் வாசல்ல யாராவது எடுத்துக் கொடுத்து அதைப் போட்டுட்டேன்னு நினைச்சீங்களோ!
மக்கள் கூட்டத்தைக் காட்டும் இரு படங்கள் மட்டும் பத்திரிக்கையில் வெளிவந்தவை.
தேர்த் திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள்.
ஆபீசர் இன்னைக்கு ஆன்மீக பதிவு போட்டு அசத்திட்டாரு போங்க....
அருமை ......தேரோட்டத்தை அட்டென்ட் பண்ணுன ஃபீலிங் .....
தேரோட்டம் பார்க்க போன எனக்கு அண்ணன் குச்சி மிட்டாயும் ..குருவி ரொட்டியும் வாங்கி தந்தான்களே ...!!
அண்ணே முதல்லயே சொல்லி இருந்தா வந்து 2 வேளை ஓ சி சாப்பாடு சாப்பிட்டிர்ப்பேனே?!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அண்னன் மைண்ட் வாய்ஸ்_ நாயே, அதாண்டா சொல்லலை>>>
நல்ல பதிவு.
தேர்த் திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. THANKS
good post...
//வேடந்தாங்கல் - கருன் *! said...
தேர்த் திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள்.//
நன்றி கருன்.
//MANO நாஞ்சில் மனோ said...
ஆபீசர் இன்னைக்கு ஆன்மீக பதிவு போட்டு அசத்திட்டாரு போங்க....//
வாங்க வாத்யாரே!
//koodal bala said...
அருமை ......தேரோட்டத்தை அட்டென்ட் பண்ணுன ஃபீலிங் .....//
அப்ப்டியே நெல்லைக்கு ஒரு விசிட் வந்திட்டு போங்கோ.
//இம்சைஅரசன் பாபு.. said...
தேரோட்டம் பார்க்க போன எனக்கு அண்ணன் குச்சி மிட்டாயும் ..குருவி ரொட்டியும் வாங்கி தந்தான்களே ...!!//
இப்ப இது எதுக்கு?
கௌசல்யாவும், சித்ராவும் எங்கிட்ட சண்டை போட பத்த வெச்சாச்சா!
//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே முதல்லயே சொல்லி இருந்தா வந்து 2 வேளை ஓ சி சாப்பாடு சாப்பிட்டிர்ப்பேனே?!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
இப்ப ஒண்ணும் கெட்டுபோகல. வாங்க, வந்து பசியாறிட்டுப் போங்க, சிபி.
அண்னன் மைண்ட் வாய்ஸ்_ நாயே, அதாண்டா சொல்லலை>>>
//ராம்ஜி_யாஹூ said...
நல்ல பதிவு.
தேர்த் திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. THANKS//
நெல்லை நினைவுகளால், ஆனந்தம் பொங்குதோ, நண்பரே!
//தமிழ்வாசி - Prakash said...
good post...//
Thanks Prakash.
வணக்கம் ஆப்பிசர்,
தாமிரசபை என இந்து சமயத்திலே சிறப்பிக்கப்படும் திருத் தலம் அமைந்துள்ள திருநெல்வேலியில் இடம் பெற்ற தேர்த் திருவிழா பற்றிய பதிவினைத் தந்து, திருநெல்வேலிக்கு ஆன்மீக தரிசனத்திற்கு வர வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியிருக்கிறிருக்கிறீங்க.
பதிவு, பக்தி ரசம் நனி சொட்டும் வண்ணம் படங்களோடும், விளக்கத் தகவல்களோடும் கலக்கலாக வந்துள்ளது.
திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று தேர்த் திருவிழாவைக் காண்பித்து எங்கள் மனதில் நெல்லையப்பரைக் கொண்டு நிறுத்தியமைக்கு நன்றி!
தேர்த் திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
The role of BREAK INSPECTORS explanation is very nice
நாங்களும் திருவிழாவில் கலந்து கொண்ட திருப்தி..நன்றி சார்.
நிறைவான பதிவு, நேரில் பார்த்தது போல் உணர்வு!
//நிரூபன் said...
வணக்கம் ஆப்பிசர்,
தாமிரசபை என இந்து சமயத்திலே சிறப்பிக்கப்படும் திருத் தலம் அமைந்துள்ள திருநெல்வேலியில் இடம் பெற்ற தேர்த் திருவிழா பற்றிய பதிவினைத் தந்து, திருநெல்வேலிக்கு ஆன்மீக தரிசனத்திற்கு வர வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியிருக்கிறிருக்கிறீங்க.
பதிவு, பக்தி ரசம் நனி சொட்டும் வண்ணம் படங்களோடும், விளக்கத் தகவல்களோடும் கலக்கலாக வந்துள்ளது.//
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்னு ஒரு பழமொழி உண்டே!
//சென்னை பித்தன் said...
திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று தேர்த் திருவிழாவைக் காண்பித்து எங்கள் மனதில் நெல்லையப்பரைக் கொண்டு நிறுத்தியமைக்கு நன்றி!//
அய்யா அப்படியே,சுற்றுலாக்கட்டணம் கொஞ்சம் கம்பெனிக்கு கொடுத்திருங்க. ஹா ஹா ஹா.
//nellai ram said...
தேர்த் திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.//
நெல்லை பக்கம் வரும்போது, நேரில் வாருங்கள்.
//shahul said...
The role of BREAK INSPECTORS explanation is very nice//
Inspector(Shahul-Sanitary Inspector) likes another inspector's role.He he.
//செங்கோவி said...
நாங்களும் திருவிழாவில் கலந்து கொண்ட திருப்தி..நன்றி சார்.//
நன்றி நண்பரே.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நிறைவான பதிவு, நேரில் பார்த்தது போல் உணர்வு!//
உங்களுக்கு துபாயிலிருந்து ஃப்ளைட் கட்டணம் வசூலிக்கணும். நன்றி.
pakirvirku nanri...
தேரோட்டத்தை நேரில் பார்த்தமாதிரி இருக்கு..
அட்டகாசம் பாஸ்! நேரில் பார்த்த அனுபவம்! நன்றி!
நல்ல வலைப்பூ இது.
நன்றி............
ஐயா இதே போல் கோவில் நிர்வாகம் மற்றும் தவறுகளை சுட்டி காட்ட வலைப்பூ இருந்தால் சொல்லவும்.
www.krish2rudh@gmail.com
Post a comment