1987ல், நியூயார்க்கின் பீச்நட் என்ற நிறுவனம், செயற்கையாக மணமேற்றப்பட்ட சர்க்கரை கலந்த நீரை ஆப்பிள் பழச்சாறு என போலியாக விற்பனை செய்ததற்காக, அந்நாட்டு நீதிமன்றத்தில், 2.2மில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கு பொறுப்பான துணைத்தலைவருக்கு ஒரு வருடம் ஒரு நாள் சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்நிறுவனத் தலைவர் ஆறு மாதம் பொதுச்சேவை புரியவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
1997ல், கான் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் ஒரு அலகில், சேமித்து வைத்த தானியங்களில் எடையேற்றம் செய்ய தண்ணீர் தெளித்ததற்காக, அரசு தொடர்ந்த குற்ற வழக்கில்,அந்நிறுவனம் தான் செய்த தவறிற்கு மன்னிப்பு கோரியது.
சீனாவின் மெலமைன் புரட்சி.2008ல், சீனாவில் விநியோகிக்கப்பட்ட பாலில் பெரும்பகுதி மெலமைன் எனும் வேதிப்பொருளால் நச்சுத்தன்மை அடைந்திருந்தது. அதன் தாக்கம், மெலமைன் கலந்த பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பால் பவுடர் பல குழந்தைகள் இறப்பிற்கும், பல குழந்தைகள் பாதிப்படைவதற்கும் வழிவகுத்தது.

2 comments:
கலப்படம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ள செய்தி இனிப்பாக உள்ளது.இதற்காக பாடுபட்ட உணவு ஆய்வாளர்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.இந்த இனிப்பை என் போன்ற உணவு ஆய்வாளர்களுக்கு ஊட்டிய தங்களுக்கு நன்றி.
நன்றி சக்தி. சென்னை மாநகராட்சியில் தங்கள் டீம் எப்படியோ அப்படியே அனைவரும் அயராது பாடுபடுவோம்.
Post a Comment