இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 16 March, 2010

பருப்பிலும் பாழும் கலப்படம் பாரீர்.

                  பருப்பில்லாமல் கல்யாணமா? - இது பெரியோர் வாக்கு. ஒருவரின் முக்கியத்துவத்தை குறிப்பிட இப்படி கூறுவார்கள். நீங்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடக்குமா என்பதைத்தான்  பருப்பில்லாமல் கல்யாணமா? என்று பெரியோர் கூறுவார்கள்.
                     அந்த பருப்பு அன்றாடம் நாம் சமயலுக்கு பயன்படுத்தும் பொருள். அதில் எப்படி கலப்படம் செய்வது, காசு பார்ப்பது? கண்டுபிடித்தான் ஒரு வழியை!
                      துவரம் பருப்பு போன்றிருக்கும் கேசரி பருப்பு -வட மாநிலங்களில் வகை தொகையின்றி விளைந்து  கிடப்பவை. துவரம்பருப்புடன் அதை கலந்து விட்டால் வித்தியாசம் தெரியாது. வினை நமக்குத்தான். 
                 கேசரி பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம் முன்நின்று நம்மை தாக்கும். முடிவில்- நடக்கவே முடியாது. 
                 அரசுக்கு  வந்தன அடுக்கடுக்காய் பல புகார்கள். இந்த மாதம் பருப்பின் தரம் பார்க்க வந்த ரெய்டு. 
                   எப்படி கண்டுபிடிப்பது? கண்களுக்கு புலப்படுமா இந்த கலப்படம்? உங்களில் எழும் இந்த கேள்வி கேட்கிறது எனக்கும். எழுதுகிறேன் நாளை. நன்றி.

Follow FOODNELLAI on Twitter

No comments: