சத்து மாத்திரைகளின் சித்து விளையாட்டு.
நம் உடலில் வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது நம் உடம்பிற்கு ஒவ்வாத சில பொருட்கள் உருவாகின்றன. அதை நாம் ப்hP ரேடிக்கல்(FREE RADICAL)-ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகள் என்கிறோம். நச்சுப்பொருட்கள் நம் உடம்பில் சோ;ந்தால் அவையும் ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகளின் அளவை அதிகாpக்கின்றன. ஆக்ஸிஜன் எனும் பிராண வாயுவே நம் உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். நம் உடலின் செல்கள் பிராண வாயு எடுப்பதை தடுப்பவை- இந்த ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகள். அவை நம் உடலில் உருவாக்கும் பாதிப்புகளே ஒரு மனிதனின் இளமையைக் கொன்று முதுமையைக்கொணர முதற்சங்கு ஊதுகின்றது. விரைவு படுத்துகின்றன. இரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் தமனிகளில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. நம் செல்களில் அவை உருவாக்கும் பாதிப்புகள் புற்றுநோய் உருவாகவும் வழிவகுக்கும்.
நாம் இயற்கையாய் உண்ணும் உணவில் காணப்படும் வைட்டமின்-சி வைட்டமின்-இ செலீனியம் தாது மற்றும் கரோட்டினாய்ட்கள் பிராண வாயு எடுப்பதைத் தடுக்கும் ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகளை ஓட ஓட விரட்டும் தன்மை கொண்டவை. தாவரங்கள் பழம் மற்றும் பு+க்களுக்கு சிகப்பு ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் நிறங்களைக் கொடுப்பது இந்த கரோட்டினாய்ட்கள். அடர் பச்சை நிறத்தாவரங்களிலும் கரோட்டினாய்ட்கள் அதிகம் காணப்படுகின்றது. கரோட்டினாய்ட்களில் பீட்டா கரோட்டின் அதிகம் அறியப்பட்ட ஒன்றாகும். இவையெல்லாம் இயற்கையாய் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைத்தால் நம் உடலும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் சத்து மாத்திரை சாப்பிடுகிறேன் என ஸ்டைலாய் செயற்கையான வைட்டமின்-இ மற்றும் கரோட்டினாய்ட்களை அதிகளவில் எடுப்பவா;களுக்கு ஆபத்து காத்திருக்குது கவனம். வைட்டமின் மாத்திரைகளை அதிகளவில் எடுத்துக்கொள்வது எதிh;மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக அண்மைய ஆராய்ச்சிகள் அம்பலப்படுத்துகின்றன. அலட்சியப்படுத்த வேண்டாம்.
புகைபிடிக்கும் பழக்கமுள்ளவா;கள்- செயற்கையாக பீட்டா கரோட்டின் செறிவு+ட்டப்பட்ட சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் அது புத்துயிரை ஊட்டுவதற்குப்பதில் புற்று நோயை அவருக்குள் புறப்படச்செய்யலாம். விஞ்ஞானிகளே வியக்கும் விந்தையிது. நித்தமும் விட்டமின்-இ மாத்திரைகள் 200 மில்லிகிராம் அளவில் உட்கொள்வது உடல்நலம் காக்கும். அதுவே தினசாp நாம் உட்கொள்ளும் விட்டமின்-இ 400 மி;ல்லிகிராமிற்கு மிஞ்சினால் இதய நோய்கள் உதயமாக உதவுமாம். விட்டமின்-சியும் செலீனியமும் விவகாரத்தில் சிக்கவில்லை. எனினும் செயற்கையாய் உருவாக்கப்பட்டவையெனில் குறைந்த அளவே எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
கலர் கலர்; பழங்களும் சமைக்காத காய்கறிகளும் நம் உணவில் அதிக அளவில் இடம் பிடித்தால் விட்டமின்களும் பீட்டா கரோட்டினும் இயற்கையாய் உடலில் சேரும். முளைவிட்ட கோதுமை மற்றும் நவதானியங்களில் விட்டமின்-இயும் புளிப்புச் சுவையுள்ள பழங்களில் விட்டமின்-சியும் செறிந்துள்ளன. நாம் உண்ணும் உணவில் அதிக பழங்களும் காய்களும் இடம் பெற்றால் நம் வாழ்வும் பெற்றிடும் இனிமை. சத்து மாத்திரைகளை சற்றே தள்ளி வைப்போம்.

3 comments:
உணவே மருந்து என்பதை விளக்கும் நல்ல பதிவு.
நித்யானந்தரையும் நிலை தடுமாற வைத்தது இந்த போதைதான். நினைவிருக்கட்டும்.
http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/blog-post_4877.html
நன்றி சார்.
உங்கள் அனுமதியுடன் இதனை இணைத்து உள்ளேன். மிக்க நன்றி.
Post a Comment