கலர் கலராய் குளிர்பானங்கள்-கலப்படம்தான் காணுங்கள்.
கோடை வெயிலின் கொடுமை
நாவறண்டு போனவுடன் நாடி நாம்
கடைக்குப்போனால், கலர் கலராய் குளிர்பானங்கள்.
கண்டவுடன் குடிக்கத் தோணும்.
உடைத்துக்குடித்தால், உருவாகும் நோய்கள்
என்னவென்று எடுத்துச் சொல்வேன்
பிழைத்துக் கொள்வது உங்கள் திறமை:
1. சுத்தமில்லாத குடிநீரி ல் தயாரிக்கப்படும் குளிர்பானங்களால்
வாந்தி-பேதி, வயிற்றுவலி வந்து உடல் வற்றிப்போகும்.
2. அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்கள்
சேர்க்கப்படுவதால், புற்றுநோயை உடலில் புதிதாய்த்
தோற்றுவிக்கலாம்.
3. உணவுத்தரமில்லாத கவர்களில் குளிர்பானங்கள்
அடைக்கப்படுவதால் உருவாகும் வேதியியல் மாற்றத்தால்,
உயிருக்கே அது உலை வைக்கலாம்.
என்ன செய்யலாம்?
தாகம் எடுத்தால் சுத்தமான நீரை அருந்தலாம்.
குளிர்ந்த நீரை விட சூடான தேநீரே தாகம் தீர்க்கும்.
துயில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1¼ லிட்டர் தண்ணீர்
தொடர்ந்து குடித்து வந்தால், வெயிலின் கொடுமை விலகிப்போகும்.
இளநீரைப்போல் இனிமை ஒன்றுமில்லை.
சித்த மருத்துவர் உரையில் செய்தி ஒன்று கேட்டேன்:
இளநீரை உணவுக்கு முன் அருந்தினால் விஷமாகும்.
உண்ட பின் அருந்தினால் அதுவே அமிர்தமாகும்.
நுங்கு சாப்பிடலாம்.
நுங்குடன் பதநீர் சாப்பிட்டால் - கவனம் தேவை.
பதநீரில் சாக்காரின் கலப்படம் செய்யப்படுகிறது.
நாங்கள் என்ன செய்கிறோம் - நாளை பார்ப்போமா!

5 comments:
உண்மையில் நல்ல தகவல் நண்பரே! உண்மையில் நான் உங்கள் தளத்தில் இருந்து நிறைய தகவல்கள் அறிந்துக் கொண்டேன். நன்றி நண்பரே. வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா
தங்களைபோன்ற துறைசார்ந்த நல்லோர்களின் கருத்துகள் இங்கே பதிவு செய்யப்படுவது
மகிழ்ச்சியும் வரவேற்கத்தக்கதுமானதாகிறது
நன்றி நண்பர்களே . தகவல்கள் தொடரும் உங்கள் நல் ஆசியோடு.
KULIRPANAM SAPPITAL ENNA THENGU VILAIUM ENA ARINTHOM & MAKKAL VELIPPUDAN IRRUGAVENDUM
தங்கள் ஆர்வத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி. தொடர்ந்து வா(பா)ருங்கள்.
Post a Comment