இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 26 March, 2010

இறைச்சி தரும் இன்னல்கள்.

இறைச்சி தரும் இன்னல்கள்.
             விடுமுறை நாளென்றால் அன்று சைவ உணவிற்கும் விடுதலை.
               விரும்பி உண்ண விடிகாலையில் சென்று வாங்கி வருவதோ ஆட்டிறைச்சி. 
                 விதம் விதமாய் விருந்து படைக்க வீட்டில் விரும்பிச் செய்வதோ பல ரகம்.

  என்றேனும் எண்ணி பார்த்ததுண்டா எப்படி கிடைக்கிறதிந்த  இறைச்சியென்று?                              
       ஆட்டிறைச்சி கடைக்காரர்  வாரச்சந்தையில் வகை பிரித்து வாங்கி வந்து, எடை பார்த்து  ஆடறுப்பு மனைக்கு ஓட்டி வந்து, அங்கிருக்கும் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, ஆடு அறுப்பதற்குத் தகுதியானதுதான் எனச்சான்று பெற்று, ஓதி(ஹலால் முறையில்) அறுத்துச் சுத்தம் செய்து மீண்டும் கால்நடை மருத்துவரின் ஆய்விற்கு உட்படுத்தி, ஆட்டின் இடது தொடையில் உள்ளாட்சியின்  அனுமதி முத்திரை பெற்று, கடைக்குக்கொணர்ந்து எடை போட்டு விற்பது நடைமுறை. நடக்கிறதா?
சுத்தமற்ற இறைச்சி தரும் இன்னல்கள் எவை?

இறைச்சியை ஏந்தும் கைகளில் சுத்தம் இல்லையென்றால், தொடர்ச்சியாய் கொடுக்கும் நோய் . 
மனிதன் மலம் கழித்த பின் கிருமிநாசினி கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். சுத்தமாய்க் கழுவாத கைகளால், உருண்டைப்புழு, கொக்கிப்புழு உடனே பரவிவிடும். சால்மோனல்லா என்றொரு பாக்டீரியா சுத்தமின்றி சிறு கடைகளில்  விற்கப்படும் இறைச்சியில் இரண்டு முதல் 45 சதவிகிதம் இரண்டறக்கலந்திருக்குமென்றோர்  ஆய்வு அறிவிக்கிறதாம். வெட்டும் கத்தியில், வீற்றிருக்கும் மேஜையில், கட்டும் தாளிலும் கலந்திருக்கும் பாக்டீரியா உணவை நஞ்சாக்கும். உண்டவுடன் வயிற்றோட்டம் உருவாக்கும். 
                             சுத்தமற்ற நீரில் கழுவப்படும் இறைச்சி சத்தமின்றிக் கொடுக்கும் கொடும் நோய்கள். நீரினால் பரவும் நோய்கள் நிறைய உண்டு. டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை, அமீபியாஸிஸ், வைரஸ் வயிற்றோட்டம் அவற்றில் சில.
                     ஆடு மாடுகளுக்கு அளித்திடும் ஆன்டிபயாடிக், கால்நடைகளின் வளர்ச்சியை விரைவு படுத்தும் ஹார்மோன்கள் இறைச்சியின் வழியே இன்னல்கள் கொடுக்கும்.
Follow FOODNELLAI on Twitter

8 comments:

தாராபுரத்தான் said...

நான் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். உங்கள் இடுக்கையை இன்று தான் பார்க்கிறேன்.மிகவும் மகழ்ச்சி. மீண்டும் வருகிறேன்.வணக்கம்.

உணவு உலகம் said...

வாருங்கள். வந்து உங்கள் அனுபவத்தை எங்களுக்கு வழிகாட்ட உதவுங்கள்.

Ss said...

very nice article

உணவு உலகம் said...

Thank U Shahul. Share Ur thoughts often.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

உணவு உலகம் said...

தேடி எனை சிறப்பித்தமைக்கு சகோதரி ஆசியா உமர் அவர்களுக்கும்,தங்களுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.தனபாலன் சாருக்கும்,அரிய சேவை செய்து வரும் உங்களுக்கும் மிக்க நன்றி.

arul said...

thnaks for sharing