தோண்ட தோண்ட துயரங்கள்.
மரித்து விட்ட மனிதங்கள்.
லாபம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு
காலாவதியான உணவு பொருட்களை, கடுகளவும் விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்திடும் விபரீதங்கள்.
ஆய்வுகள் மட்டுமல்ல அறிவுரை கூட்டங்களும்தான்!
உணவாக உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மாதாந்திர கூட்டத்தில், என்ன செய்ய வேண்டும், எப்படி சுகாதாரம் பேண வேண்டுமென எங்களிடம் கேட்டார்கள். எப்படி சுகாதாரம் பேண வேண்டும் என்றும், என்னவெல்லாம் எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்தும், உணவருந்தும் மக்களுக்கு இன்னல் கொடுக்கும் என்று அதனையும் எடுத்து கூறினோம்(நானும் நண்பர் காளிமுத்தும்). மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். மாறட்டும் மனித மனம். மலரட்டும் மனிதம்.

No comments:
Post a Comment