இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 19 May, 2010

பழச்சாறுகள் பலனளிக்குமா?


     பழச்சாறுகள் பலனளிக்குமா?           காலை உணவு நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று. நாலு இட்லி, ஒரு வடை இது நாகரீ உலகில் நம் காலை உணவு. நமக்குப்போதுமா இந்த உணவு?
           காலையில் உண்ணும் உணவில் பாதியளவே பிற்பகல் உணவாகவும் அதில் பாதியளவே இரவில் உணவாகவும் உண்ண வேண்டும். இரவில் நாம் தூங்கச்செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் உணவருந்துதல் உடல் நலத்திற்கு நல்லது.
           ஆக காலை உணவை ஒரு கட்டு கட்டுவதில் தவறில்லை. காலையில் உண்ணும் உணவே நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாய் செயல்பட உதவும். கார்ன் பிளேக்ஸூம் கால் லிட்டர் பழச்சாறும் காலை உணவாய் எடுத்துக்கொண்டால் நம் உடலில் கொலஸ்ட்ரால் கூடாதென்றோர் எண்ணம் நமக்குள். கார்ன் பிளேக்ஸைவிட கோதுமை பிளேக்ஸ் கலோரிகள் குறைவாய்க் கொடுக்கும். பழச்சாறுகள் பருகுவதற்குப்பதில் பழமாய்ச் சாப்பிட்டால் பலன் மிகக்கொடுக்கும்.
           ஏனெனில், டின் மற்றும் பாக்கட்களில்  அடைத்து விற்கப்படும் பழச்சாறு பேக்கிங் மீது நோ சுகர் ஆடட் என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டு ஏமாற வேண்டாம். பழங்களில் இயற்கையாய் உள்ள ப்ரக்டோஸ்”, இனிப்பின் அளவை ஏராளமாய் ஏற்றிவிடும். ஒரு பாட்டில் பழச்சாறில், ஒரு பாட்டில் கோக் கொடுக்கும் அதே அளவு கலோரிகள் உள்ளது.
     ரெடிமேட் பழச்சாறில், பழச்சாறு பத்து சதவிகிதம் மட்டுமே உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், இயற்கை மற்றும் செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மற்றும் பிரிஸர்வேட்டிவ்கள் மட்டுமே.
           உடலிற்கு நல்லதென உங்கள் முன் வைக்கப்படுபவை அனைத்தும் கலோரிகள் குறைந்ததல்ல. அதிலும், சாக்கரை வியாதி உள்ளவர்களுக்கு, பழச்சாறுகள் பகையாகும். உடல் எடையைக் குறைக்கப் பாடுபடுபவர்கள், பழச்சாறு பக்கம் பார்ககவே வேண்டாம். இளைஞர்களே! பழச்சாறு மட்டும் அருந்தினால் பலன் மிகக்குறைவு. பழச்சாறு அருந்துவதைவிட பழத்தைச்சுவைத்துச் சாப்பிடுவது பலனளிக்கும்.
          
Follow FOODNELLAI on Twitter

No comments: