செய்தி-1:கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதாக புகார்களுடன்,நெல்லையில் உள்ள தனியார் பள்ளியொன்றை, இன்று பெற்றோர்கள் முற்றுகை இட்டனர். இந்த பள்ளிக்கு நெல்லையில் இரண்டு மூன்று இடங்களில் கிளைகள் உண்டு. அரசு, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்த்வுடன், இப்பள்ளிகள் தளரவில்லை. மாறாக, மாற்று வழிகள் கண்டுபிடித்தனர். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மட்டுமே ரசீது. ஆனால், பெற்றோர் கட்ட வேண்டியதோ, அப்பள்ளிகள் நிர்ணயிக்கும் கட்டணத்தைதான். அது அவர்களின் தலையெழுத்து. மரத்தடியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்தவர்கள் எல்லாம், இன்று தன்னாட்சி பல்கலைகழகங்கள் பகட்டாய் ஆரம்பித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்துவோம் என்று கூறும் பெற்றோரின் பிள்ளைகள் தீண்ட தகாதவர்கள் ஆகின்றனர். ஆம், அவர்கள் கடைசி பெஞ்சில்தான் உட்காரவேண்டும், அவர்களின் வீட்டு பாடங்கள் திருத்தபடாது. இதுகூட, துணிந்த பெற்றோர் ஒருவர் தெரிவித்ததுதான்.
இன்னும் ஒரு சுதந்திர போராட்டம் இதற்கென்று வரவேண்டும் போல!
செய்தி-2 : நாசரேத்தில், போலி நர்சிங் கல்லூரி நடத்தியவருக்கு, சாத்தான்குளம் நீதிமன்றம், இன்று மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்று சொல்லி, ஏராளமான மாணவியரை அக்கல்லூரியில் சேர்த்துள்ளார். இறுதியாண்டு முடித்தவர்களுக்கு, போலி சான்றிதழ் வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில், ஜெனட் என்ற மாணவி அளித்த புகார், அந்த போலியின் முகத்திரை கிழிதெறிந்துள்ளது.
சபாஷ் ஜெனட்!
சிறப்பு செய்தி: இன்று காலை, நெல்லையை சார்ந்த இரு பிரபல பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர் "பலா பட்டறை சங்கர்" இவர் நெல்லையில் பிறந்து, கேரளத்தில் வளர்ந்து, மீண்டும் தமிழக தலைநகரில் தனி முத்திரை பதித்து வருபவர். மற்றொருவர், "எறும்பு". இவரும் உயர்-திருநெல்வேலியில் பிறந்து, சென்னையில் பல தொ(ல்)லைபேசிகளில் தொடர்பை துறப்பவர். இருந்ததென்னவோ இருபது நிமிடங்கள்தான். பல பதிவர்களை பற்றி, கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம். இன்னும் இரு தினங்கள், இந்த இருவரோடு நானிருப்பேன். எங்கள் பகிர்வுகள், உங்கள் பார்வைக்கு விரைவில்.

6 comments:
உங்கள் நண்பர்கள் " பால பட்டறை சங்கர் " " எறும்பு " ஆகியோருக்கு என்னையும் அறிமுகப்படுத்தி வையுங்கள் நண்பரே!
// இன்னும் ஒரு சுதந்திர போராட்டம் இதற்கென்று வரவேண்டும் போல!//
கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்விநிலையத்துக்கு நல்ல சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்! உங்கள் எழுத்துக்கள் சமூகத்தை சீர்படுத்தும்!
பள்ளியின் பெயரையும் தெரிவித்து இருக்கலாமே.... மற்றவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க உதவுமே.
நானும் தாமிரபரணி ஆத்தாங்கரை ஆளுதான்.... பதிவர் தான்.... அங்கே எல்லோரையும் சந்திப்பதை மிஸ் பண்றேனே! பதிவர்கள் இருவருக்கும், என் வாழ்த்துக்களை தெரியப்படுத்தி விடுங்க. நன்றி. Have a great time!
லிட்டில் பிளவர் பள்ளியா
@மாத்தி யோசி:
சொல்லிட்டன்ல,உங்கள பத்தி.
@சித்ரா:
பாளை பகுதியில் உள்ள ரோஜா பூ . . . . . . . பள்ளிதாங்க அது.
@சித்ரா:
பலா பட்டறை சங்கருடன் மற்றொரு பதிவர் துபாய் ராஜாவும் இன்று மாலை எங்களுடன் அளவளாவ வந்துள்ளார். அவர்கள் மணிமுத்தாறு அருவியும், சிங்கம்பட்டி அரண்மனையும் பார்த்து வந்தனர். பலா பட்டறை சங்கரின் அடுத்த பதிவில் விரிவாக எழுதுவார் என்றே எண்ணுகிறேன். நானும் சங்கரும் அமர்ந்துதான், தங்கள் பின்னூட்டத்தை படித்து ரசித்தோம். நன்றி.
@ராம்ஜி யாஹூ
தங்கள் கேள்விக்கான பதில் வந்து விட்டதில் திருப்தியா?
என்னை மாட்டி விட்டுடீங்களே நீங்களும் சித்திராவும் சேர்ந்து!
Post a Comment