செய்தி-1 : நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் புளியங்குடியை சார்ந்த சுடலைமாடன், அழகர்ராஜா மற்றும் காளிராஜன் ஆகியோர் பிழைப்பு தேடி அலைந்தனர். அவர்களை ஆசை வார்த்தைகள் கூறி, ஆந்திர மாநிலம் கடப்பாவிற்கு அழைத்து சென்றது ஒரு கும்பல். வேலையிலும் சேர்த்து விட்டனர், வினையும் வந்தது. வேளையில் இருந்தவர்கள் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்தி சென்று, அவர்களின் சிறுநீரகத்தை களவாடி சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த பின்னரே, விஷயம் தெரிந்து, அதிர்ச்சியுற்றுள்ளனர். சுடலைமாடன் மட்டும் அங்கிருந்து தப்பி, சொந்த ஊருக்கு வந்து, சிறுநீரக மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். மீதி இருவரை மீட்க காவல்துறை நடவடிக்கை தொடங்கியுள்ளது.என்ன கொடுமை சார் இது!
செய்தி-2 : புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போயிருந்தாலோ, கிழிந்தோ, பயன்படுத்த இயலாத நிலையில் இருந்ததாலோ, அதற்க்கு பதிலாக நகல் அடையாள அட்டை வழங்கும் முகாம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கென, நெல்லை மாவட்டத்தில், வரும் 19 மற்றும் 20ஆகிய தேதிகளில், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நகல் அடையாள அட்டை வழங்க, பதினைந்து ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.

8 comments:
one good news , one sad news.thanks for sharing it.
Thanks for Your esteemed visit.
என்ன கொடுமைங்க இது? ஏற்கனவே வறுமையின் பிடியில் இருக்கும் இவர்களை ஏமாற்ற எப்படித்தான் மனது வந்ததோ?
மனசாட்சியற்ற மனிதர்கள்!
இந்த களவாணிங்களை அடையாளம் காணாமுடியாமல் அநேகர் ஏமாறுவது இப்ப சகஜமாக போச்சு.உங்கள் செய்திகள் எங்களுக்கு நெல்லையுடன் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது.
விழிப்புணர்வு வரவேண்டும் இந்த வீணர்களை விரட்ட்யடிக்க.
Awarness needed in this regard to the innocent public and capital punishment may be awarded to the defaulters.
By S.Narayanan B.Sc.,
Sanitary Officer
Theni Municipality
Certainly Narayanan!
Post a Comment