பிளாஸ்டிக் பற்றி அடிக்கடி பதிவிடுகிறேன் என்று எண்ணுபவர்களுக்காக ஒரு சில தகவல்கள்:
ஓராயிரம் ஆண்டுகளானாலும் (அ)ஒழியாது இந்த பிளாஸ்டிக். ஆம், பிளாஸ்டிக் பைகளை, உணவென்று தின்று, இன்று பல விலங்கினங்கள் உயிரை மாய்க்கின்றன. அந்த விலங்கினங்கள் மண்ணோடு மண்ணை மக்கி போனாலும், அவை உண்ட பிளாஸ்டிக் பைகள் மக்கி போவதில்லை. இறந்த விலங்குகளின் உடலை உண்ணும் உயிரினங்கள் தம்மை அறியாமல், அதனுடன் இருக்கும் பிளாஸ்டிக் பைகளை தின்று, அவையும் மாய்ந்து போகின்றன.
இன்று நாம் பூமி தாயின் மடியில் எறிகின்ற பிளாஸ்டிக் பைகள், நாளை நம் பேரன் பூட்டன் வந்து பார்க்கும்போதும் மக்காதிருக்கும். அதனிலும் கொடுமை, பிளாஸ்டிக் தயாரிக்க "திரவ தங்கம்" தான் பயன்படுத்தப்படுகிறது என்பது. இன்றைய நிலைமையில், காருக்கும், பைக்கிற்கும், எரிபொருளாய் பெட்ரோலை பயன்படுத்தவே நாமெல்லாம் சிரமப்படுகிறோம். இந்த லட்சணத்தில், பெட்ரோலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு, சுற்று சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தேவையா?
மறு சுழற்ச்சிக்கு பயன்படாத கேரி பேக்குகள் எரிக்கபடுகின்றன. அப்படி எரிக்கப்படும்போது அவற்றிலிருந்து 'டயாக்சின்' போன்ற நச்சு தன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியாகின்றன. அவை, மனித உயிரினங்களுக்கு புற்று நோய் கொண்டு தருவன. பிளாஸ்டிக் தயாரிப்பின்போது உருவாகும் Ethylene oxide, Benzene , Xylenes போன்றவை குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுகளுடன் பிறப்பதற்கும், புற்று நோய் உருவாவதற்கும் வழி வகுக்கின்றன.
மறு சுழற்ச்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் மட்டும் பிரச்சனைகள் தராதா? 'இல்லை' என்று சொல்வதற்கு இல்லை. மறு சுழற்சிக்காக பல நிலைகளில் பக்குவபடுத்தப்படும்போது, அதிலிருந்து வெளியாகும் ஹைட்ரோ கார்பன்கள் தோல் நோய்களுக்கும், மூச்சு குழல் நோய்களுக்கும் வழி வகுக்கும்.
சரி, நாம் பயன்படுத்தும் குடி தண்ணீர் பாட்டில்கள் தரமானதுதானா? பாலி கார்பனேட் ரெசின்களிலிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கிலிருந்து Bisphenol-A (BPA) என்ற ரசாயன பொருள் அந்த பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாத்திரங்களில் சேமிக்கப்படும் உணவு மற்றும் தண்ணீரில் ஊடுருவி மனித உடலில் ஹார்மோன்கள் உற்பத்தியை தடுக்கும். அத்துடன் நிற்பதில்லை அவற்றின் அகோர பசி. மனித மலட்டு தன்மைக்கும், மார்பகங்களில் முறையற்ற திசுக்கள் வளரவும், பிராஸ்ட்ரேட் வளரவும், விந்தணுக்கள் எண்ணிக்கை குறையவும் வழி வகுக்கின்றன.
இத்தனை இன்னல்கள் தரும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டாமா?
அண்மையில் கூட, திருப்பதி லட்டுகளை (மறு சுழற்ச்சிக்கு பயன்படும்) மக்கும் தன்மையுள்ள கவர்களில் விற்பனை செய்ய திருக்கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அண்மையில் கூட, திருப்பதி லட்டுகளை (மறு சுழற்ச்சிக்கு பயன்படும்) மக்கும் தன்மையுள்ள கவர்களில் விற்பனை செய்ய திருக்கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

21 comments:
சார்! மிக அருமையான விஷயம் சொல்லி இருக்கீங்க! பிளாஸ்டிக்கை அழிக்க வேண்டியதன் அவசியம் புரிகிறது! நல்ல தரமான, பயனுள்ள பதிவு!!
முந்திடீங்களே! நன்றி.
அருமையான பதிவு ..பயனுள்ள பதிவு.. நிறைவான பதிவு நண்பரே..
பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பதிவுக்காக பாராட்டுகிறேன்.
உங்கள் எல்லா பதிவும் சமுதாய, சமூக நலன் சார்ந்ததாகவே இருக்கிறது.
வாழ்த்துக்கள் மக்கா தொடரட்டும் சேவை....
பிளாஸ்ரிஜக் கறித்த வழிப்பணர்வு ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை.. மீண்டும் பிளாஸ்டிக் பாவனைகள் பெருகிவருவதை அவதானிக்கமுடிகின்றது.
//இளங்கோ said: //
நன்றி நண்பரே
//வேடந்தாங்கல்- கருன் said://
நல்ல பல பதிவுகளை தங்களை போன்றே தர முயல்கிறேன்.
//சித்ராsaid://
விழிப்புணர்வு பதிவுகள் இன்னமும் வெளியாகும் என்ற நம்பிக்கைகளுடன்.
//Manoநாஞ்சில்Mano said://
பத்திரமா இருங்கோ, நண்பரே!
//Jana said://
அனைவரும் முயான்றால் முடியாதது ஒன்றுமில்லை ஜனா!
நல்ல பதிவு ஐயா! இங்கு லண்டனில் compostable liners புழக்கத்திற்கு வந்துவிட்டன. நாம்தான் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை!
மிக்க நன்றி... மிகவும் அவசியமான பதிவு ஒன்று.... மீள் சுழற்சி உக்கவிப்பை அதிகரிப்பதே தற்போதைக்கு சிறந்த வழியாக இருக்க முடியும்....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.
//செல்வராஜ் said://
தகவலிற்கு நன்றி.
//ம. தி. சுதாsaid://
சரியான பாதை காட்டி உள்ளீர்கள். தங்கள் வலைப்பக்கம் சென்று வந்தேன். நன்றி.
இந்த பிளாஸ்டிக் நினைச்சா ரொம்ப பயமா இருக்கு...இதை பற்றி அடிக்கடி நீங்க நினைவு படுத்துவதில் இருந்தே தெரிகிறது இதன் கெடுதல்...
தொடரட்டும் உங்களின் மகத்தான பணி.
பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாதுன்னு சட்டம் போடுகின்ற அரசுகள் பிளாஸ்டிக் உற்பத்திசெய்ய கூடாது என சட்டங்கள் போடவேண்டும் இதுதான் நம் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்யக்கூடியது
//கௌசல்யா said://
தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி,சகோ.
//கௌசல்யாsaid://
மார்ச்சில் மலரட்டும் தொடரட்டும் உங்கள் "மனதோடு மட்டும் "
//FARHAN said://
நன்றி நண்பரே! நல்ல கருத்துதான். நடைபெறுமா?
அன்பின் சங்கரலிங்கம் - அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை. அரிய தகவல்கல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment