பிள்ளைகள் உணவில் பிளாஸ்டிக் கலப்படம்.
இரு தினங்களுக்கு முன், மாவட்ட அளவில்,நுகர்வோர் விழிப்புணர்வு தினம். பள்ளி மாணவியர் பலர் கலந்து கொண்டு அவர்களது பங்களிப்பை அளித்தனர்.
பிள்ளைகள் விரும்பி உண்ணும் ஒரு மெல்லிய(!) சிப்ஸில், பிளாஸ்டிக் கலப்படம் செய்யபட்டிருப்பதாக, செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.அரண்டு போயினர் அங்கிருந்தவர்கள். கண்முன் காட்டியதால் கண்டுகொண்டோம். இன்னும், கண்ணுக்கு தெரியாதவை எத்தனையோ!
பிள்ளைகள் விரும்பி உண்ணும் ஒரு மெல்லிய(!) சிப்ஸில், பிளாஸ்டிக் கலப்படம் செய்யபட்டிருப்பதாக, செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.அரண்டு போயினர் அங்கிருந்தவர்கள். கண்முன் காட்டியதால் கண்டுகொண்டோம். இன்னும், கண்ணுக்கு தெரியாதவை எத்தனையோ!
செய்தி சேகரித்து வந்த நிருபர் கேட்டார் - கலப்படத்தை ஒழிக்க உங்கள் பங்கு என்னவென்று? கடந்த பத்தாண்டுகளில் நெல்லையில் மட்டும், உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ்,தனி ஒருவனாய், எண்பத்தெட்டு வழக்குகள் தொடுத்து, குற்றவாளிகளுக்கு, சிறை தண்டனயும், எழுபத்திரண்டாயிரம் வரை அபராதமும் விதிக்க காரணமாக இருந்துள்ளேன் என்றேன்.
எத்தனை முறை சொன்னாலும், அதனை, அத்தனை முக்கியமாக நாம் எடுத்துகொள்வதில்லை. என்ன செய்யும் இந்த பிளாஸ்டிக்? என்று இருப்பது மடமைத்தனம். காலை உணவிற்கு பதில், கால் கிலோ பிளாஸ்டிக்கை உண்ண கொடுப்போமா? பின் விளைவுகள் தெரியா பிள்ளைகள் விரும்பி கேட்டாலும், எடுத்து உரைப்பது நம் கடமை.
எத்தனை முறை சொன்னாலும், அதனை, அத்தனை முக்கியமாக நாம் எடுத்துகொள்வதில்லை. என்ன செய்யும் இந்த பிளாஸ்டிக்? என்று இருப்பது மடமைத்தனம். காலை உணவிற்கு பதில், கால் கிலோ பிளாஸ்டிக்கை உண்ண கொடுப்போமா? பின் விளைவுகள் தெரியா பிள்ளைகள் விரும்பி கேட்டாலும், எடுத்து உரைப்பது நம் கடமை.

18 comments:
விழிப்புணர்வு பதிவு.. தொடரட்டும் உங்கள் சமுகப் பணி..
வாழ்த்துக்கள்..
நல்ல தகவல்...
உணவில் கலப்படம் இருப்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி நல்ல தகவல்களை தருகிறிர்கள்..
வாழ்த்துக்கள்..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.
good.i heatfully welcome your services.as a food inspector, you save the life of people.but they may not understand it.
Thanks Rajeevan. Today I saw Valaisaram also.
இது போல இன்னும் நிறைய விழிப்புணர்வை எங்களுக்குத் தெரியபடுத்துங்கள்.
குப்பை கொட்டிக் கிடக்கும் சாலை ஓரங்களில் சென்றாலே நாற்றம் வாட்டி எடுக்கும். ஆனால் சாயங்கால நேரங்களில் அதே இடத்தில், மீனும் கோழியும் வறுபடுகிறது. விலை அதிகமோ குறைவோ அது பிரச்சினையில்லை. அதனால் ஏற்படும் உடல் நலக் கேட்டை தடுக்க என்ன செய்வது.
இதை எல்லாம் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் தேவை.
நன்றிகள்.
இன்னும் வரும். "சாலையோர சாபங்கள்" http://unavuulagam.blogspot.com/2010/04/blog-post_08.html என்றொரு பதிவில் பாருங்கள். மேலதிக தகவல்கள் மெல்ல மெல்ல வரும். நாளை காலையில், நம் அன்றாட உணவு ஒன்றின் தரம் குறித்து ஒரு சோதனைக்கு செல்கிறோம். சென்று வந்து, பதிவிடுகிறேன். வந்து பாருங்கள்.
சிப்ஸ் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு உணவு...பெற்றோர்க்கு அந்த உணர்வு வரவேண்டும்..பிள்ளைகள் கேட்பதற்காக எல்லாவற்றையும் வாங்கித் தராமல் அவர்களுக்கு புரியும் படி எடுத்துக்கூறவேண்டும்...
விழிப்புணர்வு பதிவு.. தொடரட்டும் உங்கள் சமுகப் பணி..
வாழ்த்துக்கள்..
//பாலகிருஷ்ணன் said;//
எல்லோரும் விழிப்புடன் இருந்தால், இந்த பணியில் வெற்றி நிச்சயம்.
நன்றி பாலு. முகபுத்தகத்தில் சந்தித்ததின் விளைவு!
//பன்னிகுட்டி ராமசாமி said://
முதல் வருகை. முத்தான சொற்கள். வாழ்த்துங்கள் வளர்கிறோம் நண்பரே.
padikkarappave bayamaa irukku sir. avanga vettu kuzanthaigal ithellam saapida maattaangala?? kadavule...
ஒரு சின்ன டெஸ்ட்
குர்குரே யை லேசாக நெருப்பில் காட்டினால் என்னாகிறது என்று பாருங்கள்
இன்றுதான் தங்கள் தளத்திற்கு வந்து பார்த்தேன். மிக அவசியமான தேவையான பதிவுகள். நன்றிகளும், பாராட்டுக்களும். அடிக்கடி வந்துபோவேன். நன்றிகள்.
எல்லாமே வேலை தான்.அதை ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் செய்யும் உங்களுக்கு ஒரு ஸல்யூட்!
//அன்னு said//
முதல் வருகைக்கு நன்றி.நியாயமான கவலை.
//யாசவி said//
முதல் வருகைக்கு நன்றி. நான் சொன்னது கூட அத்தகைய ஒரு தின்பண்டம்தான்.
நன்றி.sakthistudycentre-கருன் தங்கள் வாக்கு பலித்து விட்டது. நிறைய பேர் பதிவை பார்வையிட்டுள்ளனர்.
இப்படி உங்களைப்போல ஒருவர் பதிவராய் இருப்பதினால் கலப்படத்தை பற்றிய நிறைய செய்தி தெரிந்து கொள்ள முடிகிறது.
Post a Comment