இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday, 27 February, 2011

ஆச்சரியம் ஆனால் உண்மை!


                                   செல்போனில் அதிக நேரம் பேசினால் மின் காந்த கதிர்களால், மூளைக்கு பாதிப்பு வரும் என்றே கேள்விப்பட்டுள்ளோம். அண்மைய  ஆராய்ச்சி ஒன்று, செல்போனில் தொடர்ந்து ஐம்பது  நிமிடங்கள் பேசினால், அதிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்கள் மூளை செல்களை வலுவாக்கி சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதாக சொல்கிறது. 


                                    சிகாகோவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனம்தான் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது. இதுவரை, நாம் கேள்விப்பட்டதெல்லாம், செல்லிலிருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னடிக்   கதிர்களின் வீச்சால், மூளை செயல்பாடு பாதிக்கும் என்பதும், மூளை புற்று நோயை உருவாக்கும் என்பதும்தான். இதற்கு நேர்மாறாய், டாக்டர் வோரா என்பவரால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,செல்களிலிருந்து  வெளியாகும்  மின் காந்த கதிர்கள், மூளை செல்களை ஆரோக்கியமாக்குவதும், சுறு சுறுப்பாக்குவதும் தெரியவந்துள்ளது. 
                                     எப்படி இது சாத்தியமாகிறது? 
                                       செல்லிலிருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மாக்னடிக்  கதிர்கள், மூலையில், "க்ளுகோஸ் மெட்டபாலிசம்"  என்ற மூளை செயல் பாட்டை அதிகரித்து, அதன் மூலம் மூளையை சுறு சுறுப்படைய செய்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். 
                         எப்பூடி? செல்லில்  கடலை போடுவது, மூளையை  பாதிக்கிறதோ இல்லையோ, உங்கள் பாக்கெட்டை நிச்சயம் பாதித்துவிடும். ஜாக்கிரதை!  
Follow FOODNELLAI on Twitter

17 comments:

tamilvaasi said...

அண்ணே... செல்பேசிக்கு இவ்வளவு திறமையா.. அருமை....

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

tamilvaasi said...

அட நாம தான் மொத ஆளா வந்திருக்கோம் போல! எப்புடி?

உணவு உலகம் said...

நன்றி. மிக்க நன்றி.
வடை உங்களுக்குத்தான்.
நிச்சயம் எனது கேள்விகளும் வரும்.

ராம்ஜி_யாஹூ said...

இந்த ஆய்வுகள், ஆய்வுச் செய்திகள் நம்பகமானவையா என்று தெரிய வில்லை.

உதாரணமாக முத்தாரம், ரீடர்ஸ் டைஜஸ்ட், கல்கி போன்ற பத்திரிகைகளில் மூன்றாம் பக்கத்தில் ஒரு செய்தி வரும். இரவில் பால் குடித்தல் ரத்த அழுத்தம் குறையும். பன்னிரண்டாம் பக்கத்தில் செய்தி, இரவில் பால் குடித்தால் மூளை காய்ச்சல் வர வாய்ப்பு உண்டு என்று பாஸ்டன் நகர ஆய்வு அறிக்கை சொல்கிறது.

உணவு உலகம் said...

எப்போதுமே, ஒரு ஆய்வு சொல்லும் செய்திகளை மற்றொரு ஆய்வு மறுக்கத்தான் செய்கிறது. இது செய்தி பகிர்வு மட்டுமே.நன்றி.

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவு ....

சுந்தரா said...

உண்மையா இருந்தா உலகத்துக்கு நல்லதுதான்.

பகிர்வுக்கு நன்றி!

Jana said...

செல்லில் கடலை போடுவது, மூளையை பாதிக்கிறதோ இல்லையோ, உங்கள் பாக்கெட்டை நிச்சயம் பாதித்துவிடும். ஜாக்கிரதை!


அனைவருக்கும் பொதுவான உண்மை.

Asiya Omar said...

ஒரு ஆய்வு இப்படி,மற்றொரு ஆய்வு அப்படி இது தானே உலகம்,என்னதான் சொல்லுங்க இப்ப செல்பேசி இல்லைன்னால் ஒரு கை உடைந்த மாதிரி சகோ.

அன்புடன் நான் said...

வியப்பானத் தகவல்.... மிக்க நன்றிங்க.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எப்பூடி? செல்லில் கடலை போடுவது, மூளையை பாதிக்கிறதோ இல்லையோ, உங்கள் பாக்கெட்டை நிச்சயம் பாதித்துவிடும். ஜாக்கிரதை!

it's true sir! i agree with you

சென்னை பித்தன் said...

புதிய தகவலுக்கு நன்றி!

உணவு உலகம் said...

வேடந்தாங்கல் கருன்
சுந்தரா
ஜனா
ஆசியா உமர்
கருணாகரசு
ஓட்ட வட நாராயணன்
சென்னை பித்தன்
வருக, வணக்கங்களும்,நன்றிகளும்.

MANO நாஞ்சில் மனோ said...

செல்போன்'ல இவ்வளவு மேட்டர் இருக்கா....ஆச்சர்யமாதான்யா இருக்கு....!!!

உணவு உலகம் said...

இன்னும் நெறைய இருக்கு. நன்றிங்க அண்ணே!

Jayadev Das said...

இதெல்லாம் புருடா. இப்ப சனம் கைபேசி ஆபத்து என்ற செய்திக்கலால் கொஞ்சம் திகிலடைன்ச் போயிருக்குது, அதை திசை திருப்ப இந்த மாதிரி வதந்திகளை பரப்புரானுங்க. 80 வயசு 90 வயசுன்னு வாழ்ந்த நம்ம பாட்டன் பட்டிகள் இந்த கருமாந்திரத்தை வைத்தா ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்? இதெல்லாம் வியாபார தந்திரம், முடிந்த அளவுக்கு கைபேசியைத் தவிர்ப்பது நல்லது.

உணவு உலகம் said...

சரிங்க