இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 6 February, 2011

ஆண் குழந்தை வேண்டுமா? அப்ப படிங்க!


                                   இது முருங்கை காய் சமாச்சாரமல்ல! 
                                      சும்மா, சும்மா!  
                                          சமீபத்தில், உணவு உலகம், உணவு பற்றி கூறாமல், உலக நடப்புகளை பற்றி அதிகம் கூறிவருவதாக வந்த வசைமொழிகளை அடுத்து இந்த செய்தி. 

                                      
                                           சமீபத்தில், இங்கிலாந்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவர்கள் தேர்ந்தெடுத்தது கருவுறும்   நிலையிலிருந்த ஆயிரம் பெண்கள். அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவினருக்கு கால்சியம், மெக்னீசியம் அதிகம் உள்ள உணவு வகைகளை கொடுத்து வந்தனர். மற்றொரு பிரிவினருக்கு, வாழைபழம் மற்றும் உருளைக்கிழங்கு அதிக அளவில் கொடுத்து வந்தனர். கால்சியம், மெக்னீசியம் அதிகம் கொடுத்த பிரிவினருக்கு, என்பது சதவிகிதத்திற்கு மேல் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. வாழைபழம் மற்றும் உருளைக்கிழங்கு அதிக அளவில் கொடுத்து வந்த பிரிவினருக்கு, பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறந்துள்ளன. 
                                          கருவுறும் சமயத்தில், பெண்கள், அதிக அளவில் கால்சியம், மெக்னீசியம்எடுத்துகொண்டால், பெண் குழந்தை பிறப்பதற்கும்,அதிக அளவு வாழைபழம் மற்றும் உருளைக்கிழங்கு எடுத்துகொண்டால், ஆண் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். 
                                          அப்பாட, ஒரு வழியாய், இன்றைய பதிவில், உணவு வந்துவிட்டது. ஒரு விடுமுறை நாளின் தூக்கம் தொலைக்கபோவது யாரோ? 
                                           எங்க  கிளம்பிட்டீங்க? ஒரு ரூபாய்க்கு இரண்டு வாழைபழம் வாங்கவா?                               
Follow FOODNELLAI on Twitter

7 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எங்க கிளம்பிட்டீங்க? ஒரு ரூபாய்க்கு இரண்டு வாழைபழம் வாங்கவா? //

ஹி.... ஹி.... இப்பவெல்லாம் நகைச்சுவை கலந்து எழுதுகிறீர்கள்! பதிவு சுவாரசியமாக இருக்கு! பிரயோசனமாகவும் இருக்கு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்கள் பதிவை சேமித்து வைத்துக்கொள்கிறேன்! திருமணம் ஆனபின்பு தேவைப்படும் தானே!

உணவு உலகம் said...

1.நன்றி.
2. யாருக்கு?

Unknown said...

அப்போ பொண்ணு வேணுங்கறவங்க பதிவை படிக்க கூடாதா?

உணவு உலகம் said...

படிங்க, படிங்க பொண்ண பொறந்தா என்ன ? ஆணா பொறந்தா என்ன?
வருக்கைக்கு நன்றி.

NARAYANAN said...

Today I heard about the excellent nutritional value in the banana.
By S.Narayanan B.sc
Sanitary Officer
Theni-Allinagarm Municipality.

Wow said...

Super news here! Also one blogspot gives good news. visit there also.http://cricket-cry.blogspot.com/