இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 13 February, 2011

உப்பு- கரிக்கும் உள்ளேயும் தள்ளும்.

                                     உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உப்பில்லா பண்டம் குப்பையிலே! இப்படி எத்தனையோ பழமொழிகள் சொன்னாலும், என்னை பொறுத்தவரை, உப்பு - கரிக்கும் உள்ளேயும் தள்ளும் என்றே எண்ணுகிறேன்.  

DINAMALAR-13.02.11
                                     நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், நண்பகல் வேளை. சிந்துபூந்துறை பகுதியில் சோதனை மேற்கொண்டோம். அங்குள்ள பலசரக்கு கடையில், சிறு சிறு பாக்கெட்களில் அடைத்து வைத்து உப்பு விற்பனை. கலப்படம் என சந்தேகம். பகுப்பாய்விற்கு  அனுப்பி வைத்தோம்.
MALAIMURASU-13.02.11
                                 என்ன பார்ப்பார்கள்?
  •     ஈரப்பதம் ஆறு சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது.                         
  •     சோடியம் குளோரைட் தொன்னூற்றாறு சதவிகிதத்திற்கு குறைவாக       
         இருக்ககூடாது.            
  •     தண்ணீரில் கரையாத பொருட்கள் ஒரு சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்க 
         கூடாது.
  •      அயோடின் சத்து, விநியோகஸ்தர் நிலையில், 25 PPM  அளவிற்கு
          சதவிகிதத்திற்கு குறையக் கூடாது.
 
DINAMANI-13.02.11
                                  இதில் மாறுபாடு இருந்ததால், அந்த உப்பு கலப்படமான உப்பு என்று கருதப்படும். இங்கும் அப்படித்தான். ஈரப்பதம் அதிகமிருந்தது. அயோடின் சத்து மிக குறைவாக இருந்தது. அயோடின் உப்பில் சேர்பதே,கழுத்து கழலை நோயிலிருந்து மக்களை மீட்கவே. அதுவும், குறைந்த பட்ச அளவைவிட, குறைந்தே இருந்தது.  வழக்கு  தொடர்ந்தோம். வாதாடினோம். நான்கு வருடங்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்தது.
THE HINDU-13.02.11
                                  அடுத்தவர்களுக்கு எச்சரிக்கை. திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு. திருந்துவார்களா?
DINAKARAN-13.02.11
Follow FOODNELLAI on Twitter

9 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல பதிவு! எமக்கும் கூட புதிய தகவல்! சார் நீங்கள் உணவு ஆய்வாளர் என்பதால் நீங்கள்தானே, ஊரில் உள்ள கலப்பட உணவுகளை எல்லாம் கண்டு பிடிப்பீர்கள்!தேவைப்பட்டால், சீல்வைத்து மூடியும் விடுவீர்கள்! அப்படியானால், பலருக்கு உங்க மீது கோபமாக இருக்கும்! அத பத்தி கவலைப்படாதீங்க சார்! கடமைதான் முக்கியம்!!

அன்புடன் நான் said...

உங்க துணிச்சலான செயலுக்கு என் வாழ்த்துக்கள்......
புதிய தகவலுக்கு நன்றிகள்

MANO நாஞ்சில் மனோ said...

அசத்திட்டீங்க சங்கரலிங்கம்......
உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.....

உணவு உலகம் said...

//மாத்தி யோசி said://
நன்றி. நேரம் கிடைக்கும் போது, என் முந்திய பதிவுகளை பாருங்கள். பல தகவல்கள் கொடுத்துள்ளேன். நீங்கள் சொல்லும் பணிகள் எல்லாம் நானும் பார்த்து வருகிறேன். எனினும், எவரிடமும் பகைமை பாராட்டுவதில்லை. கடமையை செய்யும் போது, கவலைகள் எதற்கும் படுவதில்லை.
//சி. கருணாகரசு said://
//Mano நாஞ்சில் மனோ said://
நன்றிகள் உங்களுக்கு. நாளும் நன்றாய் உழைத்திட உற்சாகம் தந்ததற்கு.

Asiya Omar said...

பகிர்வுக்கு நன்றி.உங்கள் பணி தொடரட்டும்.

உணவு உலகம் said...

நன்றி. தங்கள் பதிவுலக பிரவேசத்தின் முதலாண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்.

பாட்டு ரசிகன் said...

பொது ம க்கள் உணணும் உ ணவை சிலர் தரக்குறைவாக செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது..
அப்படி பட்டவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்

சக்தி கல்வி மையம் said...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..

உணவு உலகம் said...

//பாட்டு ரசிகன்//
உங்கள் பாட்டையும் படித்து, வோட்டளித்து வந்தேன். முதல் வருகைக்கு நன்றி.
//sakthi study centre கருன்//
உங்கள் பதிவுகள் பார்த்து வந்தேன். அருமை.அடிக்கடி வாருங்கள்.