மல்லிகை பூப்போல் இட்லியும், மணக்கும் சட்னியும் எத்தனை வீடுகளில் காலை உணவாய் கமகமக்கும்! ஆட்டு உரலில் அரைத்த அரிசி மாவும், அதனோடு சேர்க்கப்படும் உளுந்த மாவும், அளவான உப்பு சேர்த்து, அம்மாவின் கைகளால் பிசைந்து அடுத்த நாள் இட்லி, தோசையாக மலரும்போது, அடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் பறக்கும்.
இப்படி இருந்த காலம் மலையேறி போய்விட்டது. இன்று, தமிழகமெங்கும் தடுக்கி விழுந்தால், தெரு வீதியெங்கும், இட்லி தோசை மாவை விற்கும் கடைகள். சுலபமாய் இருப்பதால், இவற்றை வாங்கி சுகம் கண்டு விட்டோம்.
கடந்த மாதம், சென்னையை சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று (CONCERT- Centre for consumer education, research, teaching, training and testing), வேலை மெனக்கெட்டு, வீதிகளில் விற்கப்படும் இட்லி தோசை மாவு பாக்கெட்களை எடுத்து அவற்றில் எத்தனை பாக்கெட்கள் தரமானவை என்று ஆராய்ந்தது.
ஆய்வு முடிவுகள் பற்றி அறிந்து கொள்ள, CONCERTஇன் இயக்குனராக பணிபுரியும் என் ஆசான்(ஆம், பாளையங்கோட்டை, உணவு பகுப்பாய்வு கூடத்தில், பொது பகுப்பாளராக பணியாற்றியபோது, எனக்கு உணவு ஆய்வாளர் பயிற்சி அளித்தவர்) திரு. சந்தானராஜன் அவர்களை தொடர்பு கொண்டபோது, அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
சென்னை மாநகரில், பதினாறு வெவ்வேறு இடங்களிலுள்ள பெரிய வணிக வளாகங்கள் மற்றும் சிறு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இருபது பாக்கட்கள் ஈர இட்லி தோசை மாவை எடுத்து, அதில் பாக்டீரியாக்கள் இருக்கின்றதா என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சந்தைப்படுத்தும் ஹைட்ரஜன் சல்பைட் பாக்டீரியாவைக் கண்டறியும் டெஸ்ட் கிட்களால் சோதனை செய்தனர்.
அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாயிருந்தது. பதினொரு பாக்கட்களிலிருந்த இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது தெரிய வந்தது. மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை. தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்ப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும். இது பற்றிய முழு விபரங்களை காண: http://timesofindia.indiatimes.com/topic/search?q=idli-dosa%20batter .
பத்திரிக்கை செய்தி கண்டவுடன் சென்னை, பொது சுகாதாரத்துறை இயக்குனர், மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் இட்லி தோசை மாவினை ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். அதனடிப்படையில், கடந்த இரு தினங்களாக மாநிலம் முழுவதும் அதிரடி ஆய்வுகள்.
நெல்லையிலும் அதிரடி ஆய்வுகள் நடந்தன. அனுமதியற்ற அரிசி மாவு அரவை ஆலை இழுத்து மூடப்பட்டது. சுகாதாரமற்ற நூற்றி அறுபத்தி நான்கு கிலோ இட்லி மாவு கிருமி நாசினி தெளித்து அழிக்கப்பட்டது. அத்தனை செய்தி தாள்களிலும் அது பற்றிய செய்தி வந்தது.

செய்திகள் முக்கியமல்ல. செய்தி கண்டு சுதாரிக்கும் மக்களின் மனப்பக்குவமே முக்கியம்.
பார்த்து பார்த்து வாங்குங்க! அதைவிட வீட்டிலேயே
பக்குவமா தயாரிங்க.
காசு கொடுத்து கஷ்டங்களை வாங்காதீங்க!

25 comments:
செய்திகள் முக்கியமல்ல. செய்தி கண்டு சுதாரிக்கும் மக்களின் மனப்பக்குவமே முக்கியம்.
பார்த்து பார்த்து வாங்குங்க! அதைவிட வீட்டிலேயே
பக்குவமா தயாரிங்க.
காசு கொடுத்து கஷ்டங்களை வாங்காதீங்க!
......சரியான அறிவுரை! மக்கள் எளிதாக இருக்கிறது என்று காசு கொடுத்து சுகவீனத்தை வாங்கி கொள்கிறார்களே! பரிதாபம்!
செய்திகள் முக்கியமல்ல. செய்தி கண்டு சுதாரிக்கும் மக்களின் மனப்பக்குவமே முக்கியம்.
ரொம்ப கரெக்டு! தப்புகள் எல்லா இடங்களிலும் நடப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது! மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்!!
நன்றிங்க சார்.
//சித்ரா & ரஜீவன் said//
தங்கள் கருத்துக்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும். நன்றி.
//தாராபுரத்தான்//
நீண்ட இடைவெளிக்கு பின் வந்த உங்கள் பின்னூட்டம் ஆக்கமும், ஊக்கமும் அளித்திடும். நன்றி.
அடிக்கடி வந்து ஆசிகளை தாங்க.
ஐயையோ...இந்த மாவு பிசினெஸ் இப்போ எல்லாம் குடிசை தொழில் மாதிரி பறந்து விரிஞ்சு இருக்கே....இதில் கூட சுத்தம் இல்லை..ம்ம்...நான் பெரிய பெரிய கடைகளில் பாகெட் பண்ணியது சுத்தமா இருக்கலாம்னு நினைச்சிருக்கேன்...(பட் வாங்கியது இல்லை) பட் அதிலும் நச்சு பொருளா..ம்ம்...என்னத்தை சொல்ல..???
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்...
இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளுக்கு வாசகர்கள் அதிக முக்கியத்துவம் தந்து பிரபல படுத்த வேண்டும். வெறும் நக்கலும் நையாண்டியும்,கும்மி அடித்தலும் மட்டும் போதாது என்பதை உணருவோம். தொடருங்கள் ராசலிங்கம் அவர்களே! பகிர்வுக்கு நன்றி.
//ஆனந்தி said://
பாகெட்டையும் பார்த்து வாங்குங்க சகோ!
//sakthistudycentre கருன் said// வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
//கக்கு மாணிக்கம் said://
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Thanks for the post..! I go with chithra Maam, "The art of breaking the silence" is something which we need to learn as soon as possible.. My wishes!
சித்ரா'வின் கருத்துதான் என் கருத்தும்...
உண்மையில் அருமையான பதிவு..
உணவு சார்ந்த நிறைய விஷயங்களை தங்கள் மூலம் தான் அறிகிறேன்..
படங்கள்.. துண்டு செய்திகள்.. விளக்கங்கள் அருமை..
தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டையும் போட்டாச்சி.....
அருமை என்று ஒரு சொல்லில் சொல்லிவிடமுடியாது. இந்தக்கருத்துக்கள், பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும் என்பதும், உணவு முறை, உணவுகள் பற்றிய போதுமான விழிப்புணர்வு சாதாரண மக்களுக்கு வழங்கப்பட ஆன நடவடிக்கைகள் எடுக்கபடவெண்டும் என்பதே என் அவாவும்கூட.
//Pranavam ravikumar said://
Thanks for esteemed visit.
//Mano நாஞ்சில் Mano said://
சித்ராவிற்கு கூறிய கருத்துகளும், நன்றிகளும் உங்களுக்கும்.
//கவிதை வீதி சௌந்தர் said://
விமரிசனத்திற்கும் ஓட்டிற்கும் special நன்றி.
//Jana said://
சத்தியமான வார்த்தைகள் ஜனா!
நன்றி
செஞ்ச தப்பை திருத்திக்காம...காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்னு பாட்டை பாடிட்டு இருப்பானுங்க அதை வித்த அந்த டப்பா தலையனுங்க...
சுப்ஹானல்லாஹ்... இந்த பகுதியில் வரும் ஆக்கங்களை எல்லாம் என் பெற்றோருக்கும் அவ்வப்போது அனுப்பி வருகிறேன். தோசை மாவில் கூட கலப்படமா எனும்போது, கூழானாலும் வீட்டில் காய்ச்சியதையே குடிக்க வேண்டும் என தோன்றுகிறது. என்ன் சொல்ல, மனிதத்தையே அழிக்க வல்ல மனிதர்களின் பணத்தாசை. !!
இது போன்ற பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சார்.
//டக்கால்டி said://
நன்றி சகோதரரே, தங்கள் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும்.
//அன்னு said://
"எல்லாம் இறைவன் செயல்தான்". நீங்கள் படித்ததுடன் நிறுத்தி கொள்ளாமல், அதனை பெற்றோருக்கும் தெரிவிப்பது அனைவர் நலனுக்கும் நல்லதே! நன்றி சகோ.
எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். தகவலுக்கு நன்றி சார்!
என் ப்ளாக்கில் உங்கள் ப்ளாக்கிற்கு தனி இணைப்பு கொடுத்துள்ளேன்....!
நன்றி நன்றி நன்றி
புதுப் பயனுள்ள பதிவு சீக்கிரம் போடுங்க சார்...
பகிர்வுக்கு நன்றி சகோ.
@Sakthistudycentre-கருன் said:
உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? நன்றி நண்பரே.
@ஆசியா உமர் said:
நன்றி
வாழ்க்கையை எளிதாக்குகிற முயற்சியினால்
(சோம்பேறித்தனத்தினால்) இன்னும் என்னவெல்லாம் கஷ்டம் வருமோ...
தகவல் பகிர்வுக்கு நன்றி!
எதுவும் வரலாம். ஆனாலும் நாம் கவலைபடபோறதில்லை. நன்றி
Post a Comment