இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday, 19 February, 2011

மார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு.

                                  சகோதரிகளுக்கான சிறப்பு பதிவு. 
                                இது அவசர யுகம். ஆற அமர யோசிக்க நேரமில்லை. வீட்டில் உணவு தயாரிக்கவும், விருந்தினருடன் உட்கார்ந்து   சாப்பிடவும் நமக்கு நேரமில்லை. நம் நாட்டு உணவகங்களிலும்,  குறிப்பாக துரித உணவகங்களிலும், பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்தும்  எண்ணையினை ஒரு முறை, இரு முறை அல்ல, பல முறை மீண்டும், மீண்டும் சூடு படுத்தி பயன்படுத்துகின்றனர். 

                            சமையல் எண்ணெய்களை, குறிப்பாக, ரீபைண்ட்  எண்ணையினை, ஒரு முறை சூடு படுத்தினால், ஒன்றுமில்லை. பல முறை, மீண்டும், மீண்டும், சூடுபடுத்தும்போது, அதில் கேன்சரை உருவாக்கும் காரணிகள் உருவாகி, வயிற்று புற்றுக்கு வழி வகுக்கும். அதிக எடை போடுதல் மற்றும் முறையான உடற்பயிற்சி மேற்கொள்ளாதது ஆகியவை புற்று நோய்க்கான கூடுதல் காரணிகளாகும். 


                                  இந்தியாவில், ஆண்டு ஒன்றிற்கு, பத்து லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கபடுகின்ற்றனர்.  குறிப்பாக,  புற்று  நோயால் பாதிக்கபடுவோர்களில் ஆறு லட்சம் பேர் நோய் முற்றிய நிலையிலையே மருத்துவர்களை நாடுகின்றனர். முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு,  மார்பக புற்று நோய் தாக்கம் அதிகம் ஏற்படுகிறது. உலக புற்று நோய் தினத்தன்று,காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்காட்சியை திறந்தது வைத்து பேசும்போது, தமிழக சுகாதார துறை செயலர், மார்பக புற்று நோய்க்கு, ஆஸ்த்ரேலியாவில் புதிய மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற நல்ல தகவல்  ஒன்றை கூறியுள்ளார்.                                 
                           நாற்பதை எட்டிய பெண்களில் பலருக்கு, மார்பக புற்று நோய் என்பது நாளும் தொல்லை தரும் ஒரு பிரச்னை. மார்பக புற்று நோய்க்கான காரணங்களை மேலோட்டமாகப் பார்த்தால், மனிதனால், மாற்ற தகுந்தவை, மாற்ற இயலாதவை என  இரு வகையாய் அவற்றை பிரிக்கலாம்.
மாற்றத்தகுந்தவை                                            மாற்ற இயலாதவை   

உடல் எடை                                                        வயது
புகை பிடித்தல்                                                          ஜீன்கள்
மது அருந்துதல்                                                         பரம்பரை
சத்தான உணவு உண்ணுதல்                       
           இவை தவிர உயிர்ச்சத்து-டி குறைபாடு, உணவு,பிளாஸ்டிக், சன்ஸ்கிரீன், தண்ணீர் மற்றும் அழகு சாதன பொருட்களிலுள்ள வேதிப்பொருட்கள், பெண்களின் உடலில் வினை புரிதலும் மார்பக புற்று நோய் வர வழி வகுக்கின்றன
எப்படி கண்டுபிடிப்பது?
                    மேமோகிராம், மார்பக எம்.ர்.. மற்றும் பயாப்சி போன்ற பரிசோதனைகள் மூலம், மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுகொள்ளலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமானது, நாற்பது வயதைக்கடந்த ஒவ்வொரு பெண்ணும், மார்பக சுய பரிசோதனையை, மாதம் ஒருமுறை மறக்காமல் செய்வதுடன், ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக குடும்ப மருத்துவரிடம் ஆலோசனையும் பெறவேண்டும்.
                   சமீப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முப்பரிமாண நுண்கதிர் மேமோகிராபி, மற்றும் Taxotere  உடன் cyclophosphamide சேர்த்து கொடுக்கப்படும் மருந்தும், மார்பக புற்று நோயாளிகளிடம் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வரும்.
               மார்பக புற்று நோய்க்கு ஆஸ்த்ரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தின் விலை வெறும் மூவாயிரம் மட்டுமே. இந்த்த மருந்தை நம் மத்திய அரசு அங்கீகரித்து அனுமதிக்கவில்லை. அரசு அனுமதித்தவுடன், இந்தியாவில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும்.   
                          தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் தாக்காது என கண்டுபிடித்துள்ளனர்.
Follow FOODNELLAI on Twitter

33 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

முதல் வணக்கம்

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல பயன்படும் தகவல்..
வாழ்த்துகளும்..
வாக்குகளும்..

FOOD said...

வருக வணக்கம்.
நன்றிகளும்

வேடந்தாங்கல் - கருன் said...

நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ....

S.Sudharshan said...

பயனுள்ள பதிவு ..தகவலுக்கு நன்றி :)

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...

Wow......! super message..... thanks sir

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான உபயோகமான தகவல் நன்றி மக்கா...

Jana said...

தேவையான ஒரு பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

FOOD said...

@வேடந்தாங்கல் கருன் said:
வருகைக்கும், வாழ்துக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் மேலும் எழுதவைக்கும்.

FOOD said...

@S.SUDHARSAN said:
வருகைக்கும், வாழ்துக்கும் நன்றி.
தங்கள் பதிவை சென்று பார்த்தேன். அருமையான தகவல்கள்.

FOOD said...

@மாத்தி யோசி said:
எப்போதும் உங்கள் பின்னூட்டம் சற்று வித்தியாசமாகவே வருகிறது. அதையும் மாற்றி யோசிகிரீங்களோ!
நன்றி றஜீவன்.

FOOD said...

@Manoநாஞ்சில்Mano said:
மனோ, நன்றிங்கோ!

FOOD said...

@Jana said:
தேவைகள் நிறைவேற்றப்படும்.

அன்னு said...

நல்ல பதிவு சார். ஆனால் இரும்பு கம்பிகள் கொண்ட உள்ளாடைகள் அணிவதாலும் அதனால் சில glands மீது அழுத்தம் ஏற்படுவதாலும் கூட மார்பக புற்ரு நோய் வர சாத்தியமிருக்கிறது. தாங்கள் வேண்டுமானால் கன்ஃபேர்ம் செய்து கொண்டு இந்த தகவலை சேர்த்திக் கொள்ளலாம். வெளிநாடுகளில் பெண்களுக்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை டாக்டர்கள் கட்டாயம் இந்த சோதனைகளை செய்கின்றனர். இன்னுமொன்று தாய்ப்பால் தராவிட்டாலும் இந்த புற்று நோய் வரு சாத்தியக்கூரு அதிகம்!!

asiya omar said...

பயனுள்ள தகவல்.நன்றி.

FOOD said...

@அன்னு said:
தங்கள் கருத்துக்கள் சரிதான். இன்னும் நிறைய சொல்ல வேண்டியதிருக்கின்றது. துரித உணவுகள், கிரில் உணவுகள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், நான் சொல்ல மறந்த முக்கியமான தகவல் ஒன்றை நினைவுபடுதிதர்க்கு நன்றி. தாய்பால் கொடுக்காமல் இருப்பதும், மார்பக புற்று நோய் வருவதற்கு காரணம் என்பது. இன்னும் சொல்லபோனால், தாய்ப்பால் கொடுபவர்களுக்கு, மார்பக புற்று நோய் தாக்காது என கண்டுபிடித்துள்ளனர். நன்றி.

FOOD said...

@ஆசியா உமர் said:

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ.

ஆனந்தி.. said...

இப்ப தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் பற்றி நிறைய கேள்விபடுறேன் ராசலிங்கம் சார்..எங்கள் உறவிலேயே ஒரு ஆன்ட்டி சமீபத்தில் மரணம் அடைஞ்சாங்க...சமையல் எண்ணெயை திரும்ப திரும்ப உபோயாகபடுத்தினாலும் புற்றுநோய் வாய்ப்பு பற்றி இப்போ தான் தெரிஞ்சிட்டேன்..உபயோகமான பதிவு சார்...நன்றி..

FOOD said...

இன்னும் நிறைய தகவல்கள் வரும். நன்றி.

அன்புடன் மலிக்கா said...
This comment has been removed by the author.
அன்புடன் மலிக்கா said...

நல்ல பயனுள்ள தகவல்..
இன்னும் நிறைய அறியத்தாருங்கள்..

வாழ்த்துகள்.
http://niroodai.blogspot.com/

FOOD said...

முதல் வருகை. நன்றி சகோ.

FARHAN said...

அறிந்திராத தகவல்
தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் தாக்காது என கண்டுபிடித்துள்ளனர்.

FOOD said...

ஆம் உண்மைதான். வருகைக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

>> தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் தாக்காது என கண்டுபிடித்துள்ளனர்.

idhu தெரிஞ்ச பின்னாவது தாய்க்குலங்கள் பவுடர் பாலை குடுக்காம இருந்தா சரி.. விழிப்புணர்வுப்பதிவு.. ம் ம்

சென்னை பித்தன் said...

தேவையான,முக்கியமான தகவல்.நன்றி!

FOOD said...

@சி.பி. செந்தில்குமார் said:
ரொம்ப சரி.
@ சென்னை பித்தன்said:
முதல் வருகை. அடிக்கடி வந்து ஆசி தாருங்கள். நன்றி

sakthi said...

நல்ல கருத்துக்கள் எப்போதும் பயனுள்ளதுதான்.ஆனால் அவை அடித்தட்டு மக்கள் பயனடையும் வகையில் அமைய தங்களது இந்த முயற்சிக்கு நன்றி.

FOOD said...

நன்றி சக்தி

சுந்தரா said...

பெண்களுக்கான நல்ல தகவல்.

நன்றி!

FOOD said...

தகவல்கள் தொடரும். நன்றி.

Jaleela Kamal said...

மிகவும் விழிப்புணர்வு தரும் பதிவு

இதை பற்றி என் பதிவையும் பார்க்கவும்

http://samaiyalattakaasam.blogspot.com/2011/02/blog-post_19.html

FOOD said...

முதல் வருகை. நன்றி. சென்று பார்கிறேன்.