செய்தி- 1 : நெல்லையில் இன்று மாரத்தான் ஓட்டம், அண்ணா விளையாட்டு அரங்கில் காலை ஆறு மணிக்கு துவங்கியது. பல மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டிகளில் கலந்து கொள்ள இருபத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் முன் பதிவு செய்திருந்தனர். ஆண்களுக்கான முழு மாரத்தான் தூரம் 42.20 கி.மீ., இருபாலருக்கும் அரை மாரத்தான் தூரம் 21.10 கி.மீ., மினி மாரத்தான் தூரம் - பத்து கி.மீ, மாணவர்களுக்கு ஐந்து கி.மீ. என்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும், முதல் பத்து இடங்களை பெறுவோர், சென்னையில் நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம். சென்னையில், முதல் பத்து இடங்களை பெறுவோர், ரூபாய் பதினேழாயிரம் ரொக்க பரிசு பெறுவர்.
செய்தி- 2 :நெல்லை மாவட்டம், பாபநாசம், குறுக்குதுறை, தாமிரபரணி ஆற்றங்கரையோரத்திலும், திருசெந்தூர் கடற்கரையிலும், இன்று தை அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

3 comments:
Super!!!!
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
இருவர் வாழ்த்துகளுக்கும் நன்றி.
Post a Comment