இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 1 February 2011

ஓய்வறியா உற்ற நண்பர் ஓய்வு பெற்றார்.


                                    உள்ளாட்சி பணி என்பது, பலருக்கு உதவும் ஒரு உயரிய பணி. ஒரு உயிர் பிறப்பது முதல் வையம் புகழ வாழ்வது, பிறரை வாழவைப்பது, வந்த வேலை முடிந்து விட்டால், மரணிப்பது வரை ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளாட்சியின் பங்கு மிக அதிகம். குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்யுமிடம் உள்ளாட்சி. இன்னும் சொல்லபோனால், அந்த குழந்தை கருவிலிருக்கும் போதே, குழந்தையின் தாய் நலம் பேணும் பணிகளும் உள்ளாட்சியில் உண்டு. பின்னர், மனிதன் வாழ வீடு, நடமாட வீதி, பயில பள்ளிக்கூடம், . . . . .  . இப்படி உள்ளாட்சியின்  பங்கை சொல்லிகொண்டே போகலாம். மனிதன் இறந்த பின்னர் அத்தனை பதிவு செயுமிடமும் உள்ளாட்சிதான். இத்தகைய உள்ளாட்சி பணியில், உயிரோட்டத்துடன் உழைப்பவர் சிலரே.                                           
பணி ஓய்வு பெறும் நண்பருக்கு பாராட்டு.     


நால்வர் அணி.
                                      அந்த சிலரில், திங்களன்று ஓய்வு பெற்ற நண்பரும் ஒருவர். இவரை பற்றி எனது "முற்பகல் செயின்" என்ற பதிவிலும்  (நால்வர் அணியில் ஒருவர் என்று ) குறிப்பிட்டு சொல்லியுள்ளேன். இவர் ஒரு பொறியாளர்.  எங்கள் நால்வரில், எதிர்மறை கேள்விகளுக்கு பெயர்பெற்றவர். ஒரு முக்கிய பணி எங்களுக்கு வரும்போது, அதனை பாசிடிவ் ஆக பார்ப்பவர் நண்பர் அரசகுமார்.அதையே, எதிர்மறை கோணத்தில் பார்ப்பவர் இவர்.   பாசிடிவ் பிளஸ் நெகடிவ் சேர்ந்து, நடுநிலையான ஒரு முடிவு பிறக்கும். பணி காலத்தில், மொத்த மாநகராட்சியின், தண்ணீர் விநியோகமும் இவருக்கு அத்துபடி. எங்கேனும் பிரச்சனைகள் என்றால், அதனை தீர்த்து வைக்க அகமகிழ்ந்து முன்வருவார். வாகன பராமரிப்பு பிரிவில், வகை வகையாய் முத்திரை பதித்தவர், இவர். அத்தைகைய குணாதிசயங்கள் கொண்ட பொறியாளர் திரு.இசக்கிமுத்து, மாநகராட்சி பணியிலிருந்து  ஓய்வு பெற்றார்.
                                  இன்று முதல், அவர் சுதந்திர பறவை.
                                     இனிய புது திறமைகள்  திறக்கும் கதவை. 
அலுவலக பணியாளர்கள் அனைவரும் அணிதிரண்டனர்.
                                             
Follow FOODNELLAI on Twitter

4 comments:

Chitra said...

இன்று முதல், அவர் சுதந்திர பறவை.
இனிய புது திறமைகள் திறக்கும் கதவை.


......positive ஆக பார்க்கும் நண்பருக்கு ஏற்ற வாழ்த்து!

நாங்களும் எங்கள் வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறோம்.

FOOD said...

தங்களின் வாழ்த்துக்களுக்கு, நன்றி சித்ரா.

மாத்தி யோசி said...

ஒய்வு பேரும் பொறியியலாளருக்கு வாழ்த்துக்கள்! உங்களோட தலைப்பே சூப்பரா இருக்கு!

FOOD said...

தலைப்பு மட்டும்தானா! வாழ்த்துக்களுக்கு
நன்றி.