நெல்லையில் புகழ் பெற்ற இடம் குறுக்குதுறை. இங்குள்ள ஆற்றங்கரையும், ஆறுமுகபெருமான் கோயிலும் அனைவரும் பார்க்க விரும்புமிடம். நெல்லை நகர பகுதியில் வாழும் மக்களுக்கு, குறுக்குதுறை ஆற்றில் குளிப்பதென்றால் குஷி. ஆன்மீகவாதிகளுக்கு, குறுக்குதுறையில் குளிக்கவும், முருகனை கும்பிடவும் முக்கிய இடம். மேலதிக தகவல் ஒன்று. நடிகர் ரஜினி காந்தின் ஆன்மீக குருவிற்கு, இந்த ஆற்றின் கரையில் ஒரு சமாதி உண்டு.
இத்தகைய சிறப்பு பெற்ற இந்த ஆற்றில் குளிப்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் நிகழ்வு ஒன்று இன்று நெல்லையில். இன்று காலை, நெல்லையை சார்ந்த ராமு என்பவர் இந்த ஆற்றில் விரித்திட்ட வலையை அவரால் தனியே இழுக்க முடியவில்லை. சரியான் வேட்டை இன்று என்றெண்ணி, நண்பர்களை அழைத்து வந்து வலையை இழுத்தால், வலையில் மீன்களுக்கு பதிலாய் வந்ததென்னவோ மலைப்பாம்பு.
தீயணைப்பு துறையினர் வந்து மலைப்பாம்பை மீட்டு, வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர். காடுகளை கணக்கின்றி நாம் அழிப்பதால், நம் வீடுகள் தேடி வனவிலங்குகள் வருகின்றன. களக்காட்டில் யானை! நெல்லையில் மலைப்பாம்பு! வரவேற்போமா! வனங்களை காப்போமா?
பின் குறிப்பு: பாம்பு என்றதும் என் நினைவில் வருவது: பலா பட்டறை சங்கரின் இந்த பதிவு:
படித்துதான் பாருங்களேன். பாம்புகள் மீதும் பாசம் வரும்.

5 comments:
ஊருக்கு போனால் ஆற்றில் குளிக்காமல் வருவதில்லை,இப்படி பயமுறுத்திட்டீங்களே!பகிர்வுக்கு நன்றி.
ஊருக்கு போனால் ஆற்றில் குளிக்காமல் வருவதில்லை,இப்படி பயமுறுத்திட்டீங்களே!பகிர்வுக்கு நன்றி.
காடுகளை கணக்கின்றி நாம் அழிப்பதால், நம் வீடுகள் தேடி வனவிலங்குகள் வருகின்றன.
.....உண்மைதான்.... இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ?
உங்கள் பதிவு அனைவரையும் விழிப்புடன் இருக்கச்செய்யும்! நன்றி சார்!!
@@asiya omar//
வாங்க! உங்கள் முதல் வருகைக்கு நன்றி. பயமுறுத்தல் அல்ல.எச்சரிக்கை.
@@Chitra//
//.....உண்மைதான்.... இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ?//
எது வந்தாலும், அஞ்ச போவதில்லை நாம்.
@@மாத்தி யோசி//
விழிபுணர்வு வந்தால் விவேகம்தான்.
Post a Comment