நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியை சார்ந்தவர், சாத்தையா. இவர் தொழில், பாம்பு பிடிப்பது. இன்று, இவரை பாம்புக்கு பிடித்து விட்டது. ஆம், பாம்பு இவரை கடித்து விட்டது. சேரன்மாதேவி பகுதியில் மூன்று நல்ல பாம்புகளை பிடித்து ஒரு கூடையில் வைத்து கொண்டிருந்தார். அப்போது அவர் கையை, ஒரு நல்ல பாம்பு கடித்து விட்டது. உடனே மயங்கிவிட்டார். அங்கிருந்தவர்கள், அவரையும், அவர் அருகிலிருந்த பாம்பு கூடையையும்(பாம்புகளுடன்தான்!) நெல்லை, மேட்டுத்திடல், அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில், பாம்பாட்டி இப்போது படுத்திருக்கிறார். தீயணைப்பு படை வீரர்கள் வந்து பாம்புகளை மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தது தனி கதை.

8 comments:
எந்த தொழிலாக இருந்தாலும் அஜாக்கிரைதயாக இருக்க கூடாது..
அவர் பிழைக்க இறைவனை வேண்டுகிறேன்..
மாமூல் கொடுத்தாச்சி
இந்த பாம்பு புடிக்கிறது , பல்லி புடிக்கிறது எல்லாம் ஒரு தொழில்?
தமிழ் நாட்டு ஜனங்க எப்போ படிச்சு மேலே வருவாங்களோ? இல்லை இலவசங்களுக்கு ஆசைப் பட்டு கழகங்களை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பார்களோ?
இது ஒரு புறமிருக்க, அந்தப் பாம்புகளைப் பற்றி யாராவது கவலைப் பட்டாங்களா? அவை என்ன இவர் வீடு போய்ப் புகுந்தா கடித்தன?
அந்தப் பாம்புகளுக்கு என் அனுதாபங்கள்.
//இவரை பாம்புக்கு பிடித்து விட்டது.//
அடடடா....
I hope he gets well soon.
நண்பர்களே, என் வேலை பளுவின் காரணமாக நேற்று பதிவிட முடியவில்லை. இன்று பதிவிட்டவுடன் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. நம் அனைவர் எண்ணங்களும், சாத்தையா நலம் பெறவே, சத்தியமாய் எண்ணும். சாத்தையா விரைவில் நலம் பெறுக, குணம் பெறுக.
அந்த நண்பர் உயிர் பிழைக்க நானும் ஆண்டவனை வேண்டுகிறேன்!
Thanks for Ur praers
Post a Comment