இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 20 November, 2009

நீருக்காக போர்

நீருக்காகப் போர்
“நீரின்றி அமையாது உலகு”- வள்ளுவன் வாக்கு. “நீருக்காகப் போர் ” - இதுவே இன்றைய உலகின் நிலை. நம் பூமியில் 3ல் 4 விழுக்காடு, வானுக்கும்
பூமிக்கும் வடம் பிடிக்கும் வெள்ளி அருவி , துள்ளிவரும் பேராறு, பரந்த நீர் நிலைகள் தரும் நீரால் நிறைந்துள்ளது. இப்படி தாராளமாய்க் கிடைக்கும் நீர் குடிப்பதற்கு ஏற்றதுதானா? சிந்திப்போமா சில நிமிடம்!
ஆறு குளங்களிலுள்ள நீர் அப்படியே குடிப்பதற்கு ஏற்றதல்ல. அவற்றில் பல வகையான அசுத்தங்கள் கலந்திருக்கும். நம் கண்ணிற்குத் தெரிபவை சில. தெரியாதவை பல. தண்ணீரில் மிதக்கும் தூசிகள் , கரைந்திருக்கும் மண் படிவங்கள், கழிவுகள் இவையே நீரைக் கலங்கலாக்கும் காரணிகள். இவை தவிர, மண்ணிலுள்ள தாதுக்கள் தண்ணீரில் கரைந்திருக்கும். அவை தண்ணீருக்குச் சுவையளிக்கும். இந்நீரை அப்படியே பருகினால் நீரினால் பரவும் நோய்கள் நம்மைத் தாக்கும்.எனவேதான், ஆறு குளங்களிலிருந்து கிடைக்கும் நீரைப் பல நிலைகளில் சுத்திகரித்து அதைக் குடிப்பதற்கு ஏற்ற குடிநீராய் மாற்றி, குளோரின் வாயு ஏற்றி, கிருமிநாசம் செய்து, உள்ளாட்சி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, இன்றோ பயணம் செய்யும் பலர் கையிலும் பாட்டில் குடிநீர்.
எப்படிக் கிடைக்கிறது இந்த பாட்டில் / பாக்கட்டில் அடைக்கப்பட்ட குடிநீர்? நிலத்தடி நீரை ஆழ்துளை குழாய்கள் மூலம் வெளியில் எடுத்து, அந்நீரை சுத்தப்படுத்தி, வடிகட்டி கிருமிநாசம்செய்து பாக்கட்டில் / பாட்டிலில் அடைத்து சந்தை படுத்துகின்றனர். இவ்வாறு பாக்கட்டில் / பாட்டிலில் அடைக்கப்படும் தரம் உணவுக்கலப்படத் தடைச்சட்டத்தின்கீழ், சுமார் 51 வகையான ஆய்வகப் பாpசோதனைகள் மூலம் நிர்ணயிகின்ற்னர். இதன்மூலம், நிலத்தடியில் கிடைக்கும் உப்புநீரையும் குடிப்பதற்கு ஏற்ற சுவை நீராக்க முடியும்.
இவ்வாறு பாக்கட்டில் / பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீர் அனைத்தும்பாதுகாப்பானதுதானா?

இல்லையென்றேசொல்லவேண்டும். எதனால்?
நாம் வாங்கும் ஒவ்வொரு குடிநீர் பாட்டிலில் பாக்கட்டில் இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள் என்னென்ன என பாப்போம். தயாரிப்பு தேதி பேட்ச் எண் ஐ.எஸ்.ஐ. தர முத்திரை தயாரிப்பாளரின் முழு விலாசம். எந்த தேதி வரை பயன்படுத்த உகந்ததுஇவையனைத்தும் இருந்தாலும், தரத்தை நிர்ணயிக்கும் 51 வகையான பரிசோதனைகளில் தேர்வு பெறுபவை மிகச்சில தயாரிப்புகளே. இவற்றில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், அது குறித்து, உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு உரிய உள்ளாட்சி நிறுவனத்திலோ, சுகாதாரத்துறையிலோ, ஐ.எஸ்.ஐ. தரச்சான்று வழங்கும் பி;.ஐ.எஸ். நிறுவனத்திலோ புகார் செய்யலாம். மேலும், பாக்கட்டில் / பாட்டிலில் அடைத்து குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்றுள்ளதா? அந்த சான்று எந்த தேதிவரை பயன்படுத்த அந்த நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது போன்ற விபரங்களை பி;.ஐ.எஸ். நிறுவனத்தின் இணைய தளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.நிலத்தடி நீரை ஆழ்துளை குழாய்கள் மூலம் வெளியில் எடுத்து, அந்நீரை சுத்தப்படுத்தி, வடிகட்டி பாக்கட்டில் / பாட்டிலில் அடைத்து விற்பதில்தான் வருகிறது மனிதனின் பேராசை.நாளுக்கு நாள் பெருகி வரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் நிலத்தடி நீரை மேலும் மேலும் உறிஞ்சுகின்றன. இது நிலத்தடி நீர் மட்டத்தை வெகு கீழே கொண்டு செல்கிறது. இனி, வீடுகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்க பூமிக்குள் பல மைல் தூரம் பயணப்படவேண்டியதிருக்கும். இதுவே, நீருக்கான போருக்கு வித்திட்டுவிடும்.
அ.ரா.சங்கரலிங்கம், உணவு ஆய்வாளர் , திருநெல்வேலி மாநகராட்சி.
Follow FOODNELLAI on Twitter

No comments: