நாமும் தெரிந்து கொள்வோம்.
எப்படி புகார் தெரிவிக்கலாம்?
நுகர்வோர் ஒவ்வொருவருக்கும், கலப்படம் என சந்தேகிக்கும் உணவுப்பொருளை, உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்ப, 1954ம் வருட உணவுக்கலப்படத் தடைச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Ø 1954ம் வருட உணவுக்கலப்படத் தடைச்சட்ட பிரிவு 12.
அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பு, கலப்படம் என சந்தேகிக்கும் உணவுப்பொருளை, உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்ப, 1954ம் வருட உணவுக்கலப்படத் தடைச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Ø 1954ம் வருட உணவுக்கலப்படத் தடைச்சட்ட பிரிவு 12.
உணவு மாதிரிகள் எங்கெங்கு பகுப்பாய்வு செய்யப்படுகிறது?
Ø சென்னை கிங் பகுப்பாய்வுக்கூடம்.
Ø தஞ்சாவூர்.
Ø கோயம்புத்துர்.
Ø மதுரை.
Ø திருநெல்வேலி.
Ø சேலம்.
தனிநபர் அனுப்பும் உணவு மாதிரி கலப்படம் என அறிக்கை செய்யப்பட்டால், அந்தப் பகுதிக்குரிய அலுவலர்களிடம் பகுப்பாய்வு அறிக்கையுடன் எழுத்து மூலம் புகார் தொரிவித்தால், தொடர்
நடவடிக்கை எடுக்க இயலும்.
இது மட்டுமின்றி, கலப்படம் பற்றியும், கலப்பட பொருட்கள் விற்பனை பற்றியும், அந்தந்தப் பகுதிக்குரிய அலுவலர்களிடம் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ புகார் தரிவித்தால், அந்தப் பகுதிக்குரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

1 comment:
Post a Comment