இளைய பாரதத்தின் இனிய நட்சத்திரங்கள்!
நாளைய பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!
இப்படி இவர்கள் ஜொலித்திட, இதையும் நீங்கள் செய்திட வேண்டாமோ!
நினைவில் கொள்ளுங்கள். வரும் ஞாயிறு, போலியோ ஞாயிறு. 23 .01 .11 மற்றும் 27 .02 .11 ஆகிய ஞாயிற்று கிழமைகளில், ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இரு முறை, போலியோ சொட்டு மருந்து கொடுக்கபடுகிறது.
நெல்லை மாவட்டம் முழுவதும், சுமார் 2 .72 இலட்சம் , ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் மட்டும், 74 மையங்களிலும், மூன்று பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
இந்த முறை சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில், ஜென்சன் வயலெட்டுக்கு பதிலாய், மார்கிங் பேனாவினால் குறியிடுவர் என்பது புதுமை.
நல்ல விஷயம் என்பதோடு, நாமும் நாலு பேருக்கு சொல்ல வேண்டிய விஷயமுங்க. நல்லா சொல்லுங்க - நாலு பேரிடம்,நம் வீட்டு குழந்தைகளுடன், நம் நாட்டு குழந்தைகள் அனைவரும் பயன்பெற.
தாய் மண்ணில் இருந்தாலும், தள்ளியே (வெளி நாட்டில்) இருந்தாலும், தவறாமல் தங்கள் சொந்தங்களிடம் நினைவு படுத்துங்கள், நண்பர்களே.
இன்றைய நெல்லையில் இன்றிமையாத செய்தி இதுதான்.

3 comments:
இந்த முறை சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில், ஜென்சன் வயலெட்டுக்கு பதிலாய், மார்கிங் பேனாவினால் குறியிடுவர் என்பது புதுமை.
..That is something new to me. Good idea.
தங்களின் ஆர்வம் தர சொல்லும் -
தரமான தகவல்கள். நன்றி.
பகிர்விற்கு நன்றிகள்
Post a Comment