இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 24 January, 2011

இன்றைய நெல்லை- 8


                              சமூக சேவை -1 :  நெல்லை மாவட்டத்தில், குற்றாலம் அருகே, இலஞ்சி  என்று ஓர் ஊர். இங்குள்ள ஆசிரமத்தில், அறுபது அநாதை குழந்தைகள் உள்ளனர். ஆசிரமத்தை, நெல்லிகுப்பதை சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் அவரது காதல் மனைவி த்ரூட் இங்க்லேட் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். அங்கு அவர்களுடன் உதவிக்கென இருக்கின்ற ஆஸ்திரியா மற்றும் நியூசிலாந்து நாட்டு இளைஞர் மற்றும் இளைஞியர், மாவட்ட ஆட்சியரை பார்த்து, ஆசிரமத்திற்கு செல்லும் ரோட்டை சீர் செய்ய மனு கொடுத்தனர். 
                                      என்ன ஒரு சமூக பார்வை! என்றெண்ணி எண்ணி வியக்கவைக்கிறதே! 
                               சமூக சேவை -2 :கேரளாவில் சுற்று சூழலை பாதுகாக்க கடுமையான விதிமுறைகள் உள்ளதென்பதால்,  நெல்லை மற்றும் தூத்துக்குடி  மாவட்டங்களுக்கு கழிவு டயர்களும், தார் கலந்த காகிதங்களும் அனுப்பப்பட்டு, எரிக்கபடுவதாகவும், அதனால், சுற்றுப்புற நிலமும், நிலத்தடி நீரும் நஞ்சாகிறது என்றோர் எச்சரிக்கை இன்றைய நாளிதழில். இப்படியும் ஒரு சமூக சேவை! சற்றே சிந்திக்க பட வேண்டிய  விஷயம்.  விழித்து கொண்டால், பிழைத்து கொள்ளலாம்!     
                  
Follow FOODNELLAI on Twitter

5 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வழக்கம் போலவே நல்லா விஷயங்களை எழுதி இருக்கீங்க! உங்க கருத்துக்கள் நாட்டுக்கு மிகவும் அவசியமானவை!

உணவு உலகம் said...

வருகைக்கு நன்றி நண்பர்களே. தொடர்ந்து நல்ல பதிவுகள் தர முயல்கிறேன், தங்கள் நல்லாதரவுடன்.

Kousalya Raj said...

பக்கத்து மாநிலம் எப்பவும் உசாராதான் இருக்கு...நாம தான் என்ன அடிச்சாலும் வாங்கிப்போமே...?!!

வெளிநாட்டவரின் சமூக பணி பாராட்டபடவேண்டிய ஓன்று.

பகிர்வுக்கு நன்றி.

Chitra said...

கேரளாவில் சுற்று சூழலை பாதுகாக்க கடுமையான விதிமுறைகள் உள்ளதென்பதால், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கழிவு டயர்களும், தார் கலந்த காகிதங்களும் அனுப்பப்பட்டு, எரிக்கபடுவதாகவும், அதனால், சுற்றுப்புற நிலமும், நிலத்தடி நீரும் நஞ்சாகிறது என்றோர் எச்சரிக்கை இன்றைய நாளிதழில்.


.... I hope it does not go away as just a newspaper news item. Something should be done to stop this.

உணவு உலகம் said...

தங்களிருவரின் ஆதங்கம் நியாயமானதே. பக்கத்து மாநிலம் போல், நாமும் உஷாராய் இருக்கவே எனது விருப்பமும். கடந்த வாரம் (16 .01 .11 இல்), நெல்லையில் பழைய டயர்களை பறிமுதல் செய்த செய்தி ஒன்று, எனது பதிவில் பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் இதோடு சம்பந்தப்பட்ட ஒன்றுதான். உஷாராய் இருக்க, என் பங்கு(ஊதுற சங்க ஊத) தொடங்கி விட்டேன்.. . . . . . . . . கருத்துரைகளுக்கு நன்றி.